அறுப்புக் காலம் The Harvest Time 1.சகோ.வில்லியம்ஸ் உங்களுக்கு நன்றி. காலை வணக்கம். நண்பர்களே. இன்று காலை இங்குள்ளது ஒரு சிலாக்கியமாயுள்ளது. இதைப் போன்ற ஒரு அறிமுகம் என்னைக் குறித்து செய்யப்படுவதை நான் கேட்டபோது, நான் இன்னும் சிறியவன் என்னும் உணர்ச்சி எனக்கு இன்னமும் உண்டாகிறது. இன்று காலை பீனிக்ஸுக்கு வரக் கிடைத்த இந்தக் தருணத்துக்காக நான். மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். 2 நான் முதன் முறையாக பீனிக்ஸ்க்கு வந்தது எனக்கு ஞாபகம் வருகிறது, அப்பொழுது எனக்கு ஏறக்குறைய பதினேழு வயதாயிருந்தது. அந்த நேரம் முதற்கொண்டு இது நிச்சயமாக வளர்ச்சியடைந்துள்ளது. நாங்கள் டூசானை விட்டு இன்று காலை பீனிக்ஸுக்குள் நுழைந்தபோது, இந்த இடத்தை அடையாளம் கண்டுபிடிக்க முடியவேயில்லை . இந்த இரு இடங்களும் ஒரே விதமாக இருந்தன. அநேக புது இடங்கள் இங்கு எழும்பியுள்ளன. முன்பு இங்கு வனாந்தரமாக இருந்த இடங்களில் நாங்கள் சென்று கழுதைகளை விரட்டி விளையாடுவது வழக்கம். ஆனால் அந்த இடங்களில் இப்பொழுது தங்கும் விடுதிகளும், அங்காடிகளும் எழும்பியுள்ளன. உண்மையாகவே, எனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது என்பதையே அது காண்பிக்கிறது. 3 இங்கே என்னுடைய நல்ல சகோதரன் சகோதரன் வால்டெஸ் பக்கத்தில் அமர்ந்து, நான் - நான், "நல்லது, சகோதரனே...” என்றவாறு நான் கூறி, நாங்கள் உரையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது நான் "நல்லது, சகோதரனே, எனக்கு வயதாகின்றது," என்றேன். மேலும் நான், "என் வாழ்க்கை பாதையில் அநேக மைல்கள் கடந்து விட்டன என்று நான் உணருகிறேன்" என்றேன். அதுமட்டுமின்றி நான், "என் வயதை நீங்கள் அடையும் வரை காத்திருந்துப் பாருங்கள் அல்லது அதைப் போன்ற ஒரு காரியத்தைக் கூறினேன். அவர் என்னைக் காட்டிலும் பன்னிரண்டு வயது மூத்தவர் என்று கேள்விப்பட்டபோது, நான் - நான் ஆச்சரியப்பட்டேன். ஆகவே, எனக்கு அப்பொழுது அதிக நல்லுணர்வு தோன்றினது. நான், "சகோ. வால்டெஸ், நான் உங்களை... விரும்புவது ... எவ்வளவு காலமாக நீங்கள் சுவிசேஷத்தை பிரசங்கித்து வருகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர், “ஐம்பது, ஆண்டுகளாக” என்று விடையளித்தார். 4 நல்லது, அவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, நான் மிகச் சிறிய ஒரு குழந்தையாயிருந்தேன். எனவே நான், "சகோதரன் வால்டெஸ், நீங்கள் இந்தக் காலையில் இந்த ஆராதனையை நடத்தினால் நலமாயிருக்கும் என்று நான் விரும்புகிறேன்” என்றேன். நான், "நான் நான் ஒரு வாலிபனாயிருக்கிறபடியால் எனக்கு மூத்தவர்களின் முன்னிலையில் நான் பேசுவது எனக்கு அவ்வளவாக பிடிக்காது” என்றேன். 5 அவர் சிரித்துக் கொண்டே, "எதற்காக இங்கு நான் காரோட்டி வந்துள்ளேன் என்று நீர் நினைக்கிறீர்?" என்று கேட்டார். 6 எனவே நான் சகோதரன் வால்டெஸுக்கு மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இங்கு அவருக்கு ஒரு இளைப்பாறும் வீடு உள்ளதாக என்னிடம் கூறிக் கொண்டிருந்தார். அது - அது மிகவும் நல்லது. நான் அதைப் பாராட்டுகிறேன். எப்போதாவது அவரோடு வீட்டுக்கு வரும்படி எனக்கு அழைப்பு விடுத்தார். அது இங்கு நீயு ரிவர் என்னுமிடத்தில் உள்ளது. உங்களில் யாருக்காகிலும் அது எங்குள்ளது என்று தெரியுமா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் வால்டெஸ் குடும்பத்தினர் ஒருவர் அதில் ஈடுபட்டிருந்தால் அது நன்றாகவே இருக்கும் என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். 7 எனவே, ஒவ்வொரு முறையும், நான் ஒரு கூட்டத்திற்கு வரும்போதும், நான் வழக்கமாகவே ஆராதனைகளில் சுகம் பெற்றவர் யாரையாகிலும் சந்திக்கிறேன். இன்று காலை நான் மேஜை அருகில் நின்று கொண்டிருந்தபோது, இங்கு உட்கார்ந்து கொண்டிருந்த எர்ப் என்னும் பெயர் கொண்ட ஒரு விலையேறப்பெற்ற சகோதரி, அவள் மிச்சிகனிலிருந்து இங்கு வந்திருக்கிறாள் அவளுடைய மகன் கிறிஸ்தவ வானொலி நிலையத்தில் அறிவிப்பாளாராக இருக்கிறார். அவள் மிச்சிகனிலுள்ள பிளிண்ட் என்னுமிடத்தில் அநேக ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கூட்டத்திற்கு வந்திருந்ததாக என்னிடம் கூறிக் கொண்டிருந்தாள். அங்கு அவள் ஒரு ஜெப அட்டையை பெற்றுக் கொண்டு, ஜெபித்துக் கொள்ளும்படி முயற்சித்துக் கொண்டிருந்தாளாம். ஆனால் அவளால் அங்கு வர ஒருபோதும் முடியவில்லையாம். அவள் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தாள். இன்று காலை அந்த ஸ்திரீ நின்று கொண்டிருந்த இடத்திற்கு பக்கத்தில் தேவன் அவளை சுகமாக்கினார் என்று நான் நம்புகிறேன். 8 நான் "இப்பொழுது என்ன ஒரு தருணம்! அது பன்னிரண்டு, பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு. இப்பொழுது பீனிக்ஸ் என்று அழைக்கப்படும் இந்நகரில், பீனிக்ஸ் என்பது பாழடைந்த இடம் புதிதாக கட்டப்பட்டதாகும்” என்றேன், மேலும் நான், "அதுதான் இன்று காலை உனக்கு சம்பவித்தது. தேவன் உன் பாழடைந்த ஆரோக்கியத்தை நல்ல ஆரோக்கியமாக இன்று காலை மாற்றித்தந்தார் என்றே நான் நம்புகிறேன்” என்றேன். 9 நேற்று மாலை நிறைய, தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்ததை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். இப்பொழுது நான் உங்கள் அண்டை வீட்டான். நான் டூசானில் இப்பொழுது வசிக்கிறேன். நிறைய அழைப்புகள் வந்த காரணத்தால், எல்லோரையும் சென்று காணமுடியவில்லை. எனவே அவர்களுக்கு தொலைபேசியின் வழியாகவே ஜெபித்தேன். ஆகையால் அவர்கள் தங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டியதாயிருந்தது. 10 எண்பத்தேழு வயதான ஒரு கிறிஸ்தவ பெண்மணி சிறிது காலமாக மனநலம் இல்லாதவர்களாக இருந்து வந்தார்கள். அவர்கள் தெருவில், தன் குழந்தையை யாரோ கொண்டு போய் விட்டதாக கூச்சலிட்டு, காவற்காரரை கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். எண்பத்தேழு வயது, பாருங்கள், அவர்களுக்கு மனக்கோளாறு ஏற்பட்டிருந்தது. அவர்கள் அருமையான வயோதிப் அம்மாள். அவர்களை என் வாழ்க்கையில் நான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. பில்லி என்னை தொலைபேசியில் கூப்பிட்டு, "நீங்கள் உடனே அவர்களுக்காக ஜெபியுங்கள். அவர்கள் மிகவும் நோயுற்றிருக்கிறார்கள். அந்தப் பெண்மணி மரிக்க போகிறாள் என்று அவர்கள் நினைக்கிறார்கள், அவளுக்கு... அவளுக்கு பைத்தியம் பிடித்துள்ளது” என்றான். 11 அப்பொழுது நான் தொலைபேசியை வைத்து விட்டு அறைக்குள் சென்று ஜெபித்தேன். சில நிமிடங்களுக்குள் அந்த அம்மாள் நன்றாக உறங்கினார்கள். அவர்கள் சுகமடைந்தவர்களாக உறக்கத்தினின்று எழுந்து, இரவு உணவுக்கு கோழியும் அதன்பின்னர் ஐஸ் கீரிமையும், இனிப்பு ரொட்டியும் தின்றார்கள். ஆம். 12 நீங்கள் பாருங்கள், தேவன் இராஜாதிபத்தியமுள்ளவர். அவர் அவ்வளவு தத்ரூபமானவர், அவரால்.. நீங்கள் அங்கிருக்க வேண்டுமென்றில்லை. நீங்கள் அவரிடத்தில் அப்படியேக் கேளுங்கள். 13 இன்று காலை இங்குள்ள நமது தலைவர், அல்லது வேறு யாரோ, ஒருக்கால் சகோதரன் வால்டெஸ் அவர்களாய் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அவர் தமது ஜெபத்தில் "நாம் கேட்காததனால் பெற்றுக் கொள்வதில்லை. நாம் விசுவாசிக்காததினால் கேட்பதில்லை ” என்று கூறினார். 14 இந்த வாலிபர்கள் இங்கே பாடின பாடல்களை நான் பாராட்டுகிறேன். சகோதரன் வால்டெஸ் மற்றும் எங்களைப் போன்ற வயதானவர்களும், அந்த இளைஞன் நான் இயேசுவை அறிந்து கொண்டதை சாட்சியாக அறிவித்த உத்தமத்தை எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறோம். 15 இப்பொழுது அநேக சமயங்களில் இந்த நால்வர் பாடற்குழுவினரின் பாடல்களை நாம் கண்டறிகிறோம். நான்... இது மற்றொரு போதகரின் கருத்து. சகோதரன் வால்டெஸ், "சில சமயங்களில் அநேகர் குழுவினராக பாட வருகின்றனர்” என்றார். ஏனெனில் இன்றைக்கு அது அது பெந்தேகோஸ்தேயினர் ஒரு காலத்தில் பெற்றிருந்த பரிசுத்தத்திற்கும், உத்தமத்துக்கும் பதிலாக பாடும் திறனைக் காண்பிக்கும் ஒன்றாக ஆகிவிட்டது. 16 ஆனால் இந்த இளைஞர்கள் உத்தமத்துடன் பாடினார்கள். அதை நான் - நான் பாராட்டுகிறேன். இளைஞர்களே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான்... 17 நான் தொலைக் காட்சியை விரும்புவதில்லை. உங்களுக்கு தெரிந்துள்ளபடி, அதற்கு நான் உண்மையாகவே விரோதமாயுள்ளேன். கர்த்தருக்குச் சித்தமானால், நாங்கள் எங்களுடைய இடத்தை ஆயத்தம் செய்யும் வரையில், நாங்கள் எங்களுடைய வீட்டை அமைக்கும் வரை நான் உண்மையாகவே டூசானில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்துள்ளேன். அந்த வீட்டை வாடகைக்கு கொடுத்தவர்கள் ஒரு நல்ல கிறிஸ்தவ சிநேகிதி, ஆனால் அந்த வீட்டில் அவர்கள் ஒரு-ஒரு-ஒரு தொலைக்காட்சி பெட்டியை வைத்திருக்கின்றனர். எனக்கு வாலிப் பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் எப்படியென்று உங்களுக்குத் தெரியும். எனவே தொலைக்காட்சியைக் காண அவர்கள் விரைந்து செல்கின்றனர். ஆகையால் இரண்டு நாட்களுக்கு முன்பு சகோதரன் ஸ்ட்ரோமியுடன் செய்த பயணத்தை நான் முடித்துக் கொண்டு வீடு திரும்பினபோது.. இன்று காலை சகோதரன் ஸ்ட்ரோமி இங்கு இங்கிருக்கிறாரா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை, அவர் டூசானிலுள்ள வர்த்தகர் குழுவின் தலைவர். இப்பொழுது பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் என் வாலிப் மகள் என்னைக் கூப்பிட்டு, "நாங்கள் நால்வர் பாடற்குழு பாடும் பாடல்களை தொலைக் காட்சியில் கேட்கப் போகிறோம். வாருங்கள்” என்று அழைத்தாள். இல்லையென்றால் அது ஏதோ ஒரு நிகழ்ச்சியாயிருந்தது. 18 நான் மிக நன்றாக குற்றம் கண்டுபிடிக்கும் ஒருவனாயிருக்கிறேன், நான் நான் அதற்காக வருந்துகிறேன். ஆனால் நான் என்னவாக உண்டாக்கப்பட்டிருக்கிறேனோ அதைத் தவிர வேறுவிதமாக என்னால் - என்னால் என்னால் இருக்க முடியாது. என் இயல்புக்கு முரணாக நான் ஏதாகிலும் செய்தால், நான் ஒரு மாய்மாலக் காரனாயிருக்கிறேன். ஜனங்களாகிய உங்களுக்கு முன்பாக அப்படி இருக்க நான் விரும்பவில்லை. நான் நான் எப்படி இருக்கிறேனோ, அப்படியே இருக்க விரும்புகிறேன். அப்பொழுது நாம் எப்படிப்பட்ட நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நான் நான் சிறிது அதிகமாகவே குற்றம் சொல்லுகிறேன் என்று யூகிக்கிறேன். 19 ஆனால் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் குற்றம் சொல்ல வேண்டுமென்று என் மனதில் இருந்தது. ஏனெனில் அது ஏதோ ஒரு விதமான ஹாலிவுட் பாணியில் அமைந்திருந்ததாக எனக்குத் தோன்றினது. அதில் இருக்க வேண்டிய புனிதத்துவம் இல்லாதது போன்று தென்பட்டது. அவர்கள் பொன் நிறக் காலணிகளை அணிந்துக்கொண்டு ராக் அண்டு ரோல் என்று அசைந்து, உருண்டு ஆடும் நடனப் பாடல் தாளத்தில் கிறிஸ்தவ கீர்த்தனைப் பாடல்களைப் பாடினார்கள். சுவிசேஷம் ஒரு வேஷம் என்னும் நிலைக்கு வந்து விட்டதா? அப்படியானால் அதனுடன் எவ்வித தொடர்பும் கொள்ள நான் விரும்பவில்லை. எனக்கு உண்மையும், அசலான ஒன்றே தேவை. நாம் அதை அந்த வழியிலேயே வைத்திருக்க விரும்புகிறோம். 20 இப்பொழுது, சகோதரரே, இங்குள்ள இரு ஒலிபெருக்கிகளும், சரியாயுள்ளன என்று நான் நான் நினைக்கிறேன். அதாவது, இப்பொழுது நான் பேசுவது நன்றாக கேட்கிறதா? 21 கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த சனிக்கிழமை காலை, முதன் முறையாக அரிசோனாவிலுள்ள பிளாக்ஸ்டாப் என்னுமிடத்திலுள்ள வர்த்தகர் குழுவில் பேசும் சிலாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. இங்குள்ள சகோதரன்-அவருடைய பெயர் எனக்கு மறந்துவிட்டது அதற்கு தலைவராயிருக்கிறார். [ஒரு சகோதரன் "செஸ்டர் எர்ல்" என்கிறார் - ஆசி.) செஸ்டர் எர்ல், சகோதரன் செஸ்டர் எர்ல். இன்று காலை இந்தியாவிலிருந்து வந்துள்ள அருமையான சுவிசேஷகருடன், இந்திய சகோதரனுடன் நான் கைகுலுக்கிக் கொண்டிருந்தபோது, அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அடுத்த சனிக்கிழமை காலை அங்கு நான் பேச வேண்டுமென்று அவர் கூறினார். அந்த கூட்டத்துக்கு வர நீங்கள் உள்ளன்போடு அழைக்கப்படுகிறீர்கள். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாரென்று நாம் நம்புகிறோம். 22 அதற்கடுத்த திங்கள் இரவு டூசானில் ஒரு விருந்து உள்ளது. அந்த விருந்தின்போது.. பேச கர்த்தர் எனக்கு கனத்தை அளித்துள்ளார். அது டூசானில் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறும். அன்றிரவு விருந்திலும் கலந்து கொள்ள நீங்கள் உள்ளன்போடு அழைக்கப்படுகிறீர்கள். 23 அடுத்தபடியாக சகோ.வில்லியம்ஸ் அறிவித்தபடி அச்சிறப்புக் கூட்டம் துவங்குவதற்கு முன்பாக சிறு முன்னுரை கூட்டம் நடத்த நான் மறுபடியும் இங்கு வருவேன். 24 ஆகையால், சகோதரன் வில்லியம்ஸ், சில புள்ளி விவரங்களை அறிவித்தேனா?... என்ன சொல்லுகிறீர்களா? இப்பொழுது நன்றாக கேட்கிறதா? நல்லது. அருமை. 25 அந்தக் கூட்டங்களில் ஒன்றில், அல்லது ஒவ்வொரு இரவும் பகலும், கூட்டத்தில் கலந்து கொள்ள உங்களில் அநேகருக்கு நேரம் கிடைக்குமென்று நான் நிச்சயமாகவே நம்புகிறேன். ஞாயிறு பதினேழாம் தேதி பிற்பகல் ஏழு மணிக்கு அது தொடங்குகிறதா? (யாரோ ஒருவர், "ஒன்று-முப்பது மணிக்கு" என்கிறார்-ஆசி.) ஒன்று முப்பது மணிக்கு, ஞாயிறு பிற்பகல் ஒன்று முப்பது மணிக்கு. நான் இதையும் கூட விரும்புகிறேன், கர்த்தருக்குச் சித்தமானால், அந்தக் கூட்டங்களில் நான் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பேன், உங்களுக்குதவி செய்ய என்னால் கூடுமான எல்லாவற்றையும் செய்வேன். 26 இன்று காலை இங்கு வந்துள்ள பீனிக்ஸ் வட்டாரத்திலுள்ள ஊழியக்கார சகோதரர்களே, இந்த மண்டபத்துக்கு நான் வரக்காரணம்... ஒவ்வொரு முறை நான் வரும்போது, இதை சிறிது விரிவுபடுத்தி, எல்லா சபைகளுக்கும் நான் செல்வது வழக்கம். அது ஒரு விதமாக கடினமானதாக இருப்பதை நான் கண்டறிகிறேன், ஏனெனில் சில சபைகள் சிறியவைகளாயுள்ளன. ஒரு சகோதரனின் சபை சிறிதாயுள்ள காரணத்தால், அவரை விட்டுவிட எங்களுக்கு நிச்சயமாகவேப் பிரியமில்லை. ஆனால் அங்கு கூட்டம் நடத்தினால் அது வரும் ஜனங்களைக் கொள்ளக் கூடாத அளவுக்கு சிறிதாயிருப்பதால் கடினமாகி விடுகிறது. எனவே... நாம் அனைவரும் ஒரே இடத்தில் கூடி அதை நானே கவனித்துக் கொள்ளலாமென்று எண்ணினேன். நாம் இங்கு ஒன்று கூடி ஆராதனை நடத்தி ஒரு சிறு சுவிசேஷக் கூட்டத்தை நடத்தி வியாதியஸ்தருக்காக ஜெபிப்போம். முன்பெல்லாம் .... 27 ஒருகால் மற்ற ஒலிபெருக்கியினருகில் வந்தால் நன்றாக கேட்குமா? (யாரோ ஒருவர், "இல்லை , அது ஒலி நாடாவுக்கு" என்கிறார் - ஆசி.) அது ஒலி நாடாவுக்காக உள்ளது. சரி. 28 ஒருகால் இதை இப்படி செய்தால் நலமாயிருக்கும். பீனிக்ஸ் வட்டாரத்திலுள்ள சபைகளின் என் சகோதரர்களே, இங்குள்ள போதகர்களே, இதை அறிய விரும்புகிறேன். இந்த மண்டபத்தில் நான் வரக் காரணம், நாம் இதைச் செய்ததற்கானக் காரணம், ஒரு குறிப்பிட்ட இடத்திலே ஒன்றாகக் கூடலாம் என்பதற்காகவேயாகும். எல்லா சகோதர்களிடம் செல்வது சிரமம். ஏனெனில் அவர்கள் அநேகர் உள்ளனர். இன்று காலை இங்கு வந்துள்ளவர் அவர்களில் பாதிகூட இல்லை. எனவே அந்த சிறப்புக் கூட்டத்திற்கு முன்பு உள்ள ஒரு சில நாட்களில் அவர்கள் எல்லோரையும் இங்கு உங்களால் கூட்டிச் சேர்க்க முடியாது. 29 அந்த சிறப்புக் கூட்டத்தில் நாம் ஒரு மகத்தான நேரத்தை அனுபவிக்கப் போகிறோம் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். நீங்கள் மகத்தான சொற்பொழிவாளர்களின் பிரசங்கங்களைக் கேட்பீர்கள். இது சகோதரன் கேஷ், கேஷ் ஹம்பர்க், ஹேம்பர்க், என்னே, எத்தனை பேர் அவர் பேசுவதைக் கேட்டிருக்கிறீர்கள்? அவர் நிச்சயமாக ஒரு - ஒரு சூறாவளி, ஆம், என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் அப்படி சொல்லியிருக்கக்கூடாது. அவர் ஒரு சகோதரன். ஆனால்--ஆனால், என்னே , ஒரு முறை நான் அவருடன் இருந்தேன். உங்களுக்குத் தெரியுமா? அதைப் போன்ற ஒரு நபர் பேசுவதை நீங்கள் கேட்ட பிறகு, நான் பேசுவதைக் கேட்க நீங்கள் எப்படி வருகின்றீர்களோ என்று எனக்குப் புரியவில்லை. அவரால் மூச்சுவிடாமல் பேசமுடியும். அவர் எப்படி அவ்வாறு பேசுகிறாரென்று எனக்குத் தெரியவில்லை . நான்... ஆனால் அவர் நிச்சயமாகவே அதிகமாக பேசுபவர். அண்மையில் நியூயார்க்கில் நடந்த சிறப்புக் கூட்டத்திற்கு நான் அவருடன் சென்றிருந்தேன். கூட்டத்திற்குப் பிறகு அவர் என்னை இரவு உணவுக்கு கூட்டிச் சென்றார். நான் ஓரிடத்துக்கு சென்று வெளியே வர ஆயத்தமான போது இந்த சகோதரன், கட்டிடத்தின் மேலும் கீழும் எல்லா இடங்களிலும் அங்கிருந்த எல்லோருக்கும் பிரசங்கித்தார். அவர் தன்னில் தானே முற்றிலும் நற்குணம் கொண்ட ஒருவர். 30 கலிபோர்னியாவிலிருந்து வந்துள்ள சகோதரன் பேசுவதையும் கூட நீங்கள் ரசிப்பீர்கள் என்று நான் உறுதியாயிருக்கிறேன். அவருடைய பெயர் என்ன? அவருடைய பெயரை என்னால் ஞாபகப்படுத்த முடியவில்லை . பேச்சாளர்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர். நானும் - நானும் கூட அவருடைய பெயரை மறந்து விட்டேன். ஆனால் அவர் ஒரு ஆற்றல் வாய்ந்த பேச்சாளர். எனவே அவருடைய செய்தியை நீங்கள் கேட்டு மகிழ்வீர்கள். இன்னும் இக்காலத்து பெரிய மனிதர்களான சகோதரன் ராபர்ட்ஸ் போன்றவர்கள், உங்களுக்குத் தெரியுமா, அப்படிப்பட்ட மகத்தான பேச்சாளர்களும் அங்கே அநேகமாக கலந்து கொள்ளக்கூடும். 31 இங்கே இந்நேரத்தில் ஒரு வேதவாக்கியம் என் ஞாபகத்துக்கு வருவதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஒருமுறை தாவீது கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டி கூடாரங்களில் வாசமாயிருப்பதைக் கண்டான். அவன் சொன்னான்... அவன் அக்காலத்து தீர்க்கதரிசியாகிய நாத்தானுடன் உட்கார்ந்து கொண்டிருந்தான். எனவே அவன் நாத்தானிடம், "பாரும், கேதுமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது, என் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருப்பது நியாயமா?” என்று கேட்டான். 32 அப்பொழுது தீர்க்கதரி அவனிடத்தில், "தாவீதே, நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும், ஏனென்றால் தேவன் உம்மோடு இருக்கிறார்" என்றான். அவன் கூற அறிந்திருந்ததெல்லாம் அவ்வளவுதான். 33 ஆனால் அன்று ராத்திரியிலே கர்த்தர் தீர்க்கதரிசியை சந்தித்து, "நீ போய் என் தாசனாகிய தாவீதை நோக்கிச் சொல்ல வேண்டியது என்னவென்றால்: ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டு மந்தையை விட்டு எடுத்து, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த ஒரு பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்” என்றார். பெரிய நாமம் என்றல்ல, மகத்தான நாமம் என்றல்ல, ஆனால் அந்த நேரத்தில் பூமியிலிருந்த மகத்தான மனிதர்களோடு அவன் எண்ணப்பட்டான். 34 நான், "அது தாவீதுக்கு உண்டான தேவனுடைய கிருபை” என்று நினைத்தேன். நான் "அது எனக்கும் உள்ளது. உலகவரலாறு முடிவு பெறும் நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த சிலாக்கியத்தை நான் கண்டறியும்போது, அது இந்த கூட்டங்களுக்கு வரும் பெரியோர்களுடன் நானும் எண்ணப்படுவது என்பதாகும்” என்றே எண்ணினேன். கர்த்தர் உங்களை உண்மையாகவே அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக. 35 இப்பொழுது, என்னுடைய நல்ல நண்பர் சகோதரன் வால் டெஸ், "சகோதரன் பிரான்ஹாமே, நான் ஒன்பது நாற்பத்தைந்து மணிக்கு அல்லது பத்துப் பதினைந்து மணிக்கு செல்ல வேண்டும். எனவே பேசுகிற உங்களைத் தொந்தரவு - தொந்தரவு செய்யாதபடிக்கு ஒரு மூலைக்கு சென்று அங்கிருந்து சென்று விடுகிறேன்" என்றார். அவர் இக்கூட்டங்களுக்கு முன்பு வந்திருக்கிறார். 36 நான் - நான் ஒரு விதமாக மெள்ள பேசுபவன் என்று உங்களுக்குத் தெரியுமா, நான் பேசுவதை யோசித்தேப் பேச வேண்டும். இங்கே என்னுடைய வேதவாக்கியங்களையும் இன்னும் ஒரு குறிப்பையும் எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் நான் திரும்பிச் சென்று, நான் கூற வேண்டுமென்று கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டவைகளை நான் யோசித்துப் பார்த்து, அவருக்காக காத்திருக்க வேண்டியதாயுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் ஒருவிதம் மெள்ள பேசுபவன். இன்று காலை நான் உங்களை நீண்ட நேரம் வைத்திருக்கமாட்டேன் என்று நம்புகிறேன். 37 நான் சகோதரன் வில்லியம்ஸிடம் கேட்டேன், நான், "சகோ. வில்லியம்ஸ், எனக்கு எவ்வளவு நேரம் அளிக்கப்பட்டுள்ளது?" என்று கேட்டேன். மேலும் நான், "இப்பொழுது நான் குறித்து வைத்துள்ள வேதவாக்கியத்தின் பேரில் ஏறக்குறைய முப்பது நிமிடங்கள் பேசி, அல்லது சற்று அதிக நேரம் பேசி, ஒவ்வொருவரையும் வீட்டிற்கு அனுப்பிவிட முடியும்." என்று கூறினேன். மேலும் நான், "ஆனால் கூடுமானால், ஒரு சிறு பாடத்தை போதிக்கலாம் என்று நான் விரும்புகிறேன்” என்று நான் கூறினேன். அது இன்று உங்களுக்கு முக்கியமான ஒன்றாக அமைந்து, நீங்கள் வீட்டுக்குச் சென்று அதைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்க ஏதுவாயிருக்கும் என்று நான் அதன்பேரில் நினைக்கிறேன். 38 நீங்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காக நான் விடியற்காலை மூன்று முப்பது மணிக்கு அல்லது மூன்று நாற்பது மணிக்கு எழுந்திருந்து இங்கு வர நிச்சயமாகவே ஆயத்தப்பட்டிருக்கமாட்டேன். என்னைப் பார்க்க வேண்டுமென்று நான் நான் நான் கவலை கொள்வதில்லை. நான் எழுதி வைத்த சில வேத வாக்கியங்களை நேற்று ஆராய்ந்து படித்து, அதன் பேரில் உத்தமமாக ஜெபம் செய்து, அது ஒருகால் யாருக்காகிலும் உதவியாயிருக்கக் கூடும் என்று எண்ணியே நான் நான் இங்கு வந்துள்ளேன். நான் ... நமக்கு வெளி வேஷத்துக்கும், காட்சிகளுக்கும் நேரமில்லை . நாம் பணியில் ஈடுபட வேண்டியது அவசியம். இயேசு சீக்கிரமாய் வருகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். 39 இப்பொழுது அவர்கள் இதை ஒலிப்பதிவு செய்கின்றனர். ஒருக்கால் அனேகமாக யாராவது இந்த ஒலி நாடாவை வாங்குவார்கள். இதை நான் கூற விரும்புகிறேன். சில சமயங்களில் நான்.. அநேக முறை நான் உண்மையாகவே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன். அநேகமுறை ஜனங்கள் என்னைக் கூப்பிட்டு, "சகோதரன் பிரான்ஹாமே, இந்த அர்த்தத்திலா இதைக் கூறினீர்கள்?" என்று கேட்டிருக்கின்றனர். சில சமயங்களில் நாம் ஒன்றைக் கூறும்போது, நான் என்ன அர்த்தத்தில் அதை கூறினேன் என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். 40 சில நேரங்களில் நான் கூறுபவை ஒருகால் வேறொருவர் கொண்டுள்ள நம்பிக்கைக்கு சற்று முரணாயிருக்கலாம். நான் அதை இப்பொழுது தெளிவுபடுத்த விரும்புகிறேன், சிலர் கொண்டுள்ள நம்பிக்கைகளுக்கு அவ்வாறு இருக்கலாம். ஆனால் நான் கர்த்தரிடத்திலிருந்து வந்த ஒரு ஒரு செய்தியைப் பெற்றிருக்கிறேன், அந்த விதமாகத்தான் நான் அதைக் குறித்து உணருகிறேன். மற்றவர்கள் அது பிசாசினிடத்திலிருந்து வந்தது என்று எண்ண வகையுண்டு. வேறு சிலர் அது அர்த்தமற்றது என்று எண்ணலாம். ஆனால் எனக்கோ அது ஜீவனாயுள்ளது. நான் வேறுபாடு கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக வேறுபாடானவைகளையோ அல்லது மற்றவர்களைப் புண்படுத்தும் அல்லது உருவாக்குத்தும் காரியங்களையோ கூறுவதில்லை. அந்த விதமாக அது இருக்க வேண்டுமென்று நான் கூறுவதில்லை. நான்நான் அப்படி செய்தால், நான் ஒரு மாய்மாலக்காரனாயிருப்பேன். தேவனிடம் ஜனங்கள் முன்னேற வேண்டும் என்றே நான் அதைக் கூறுகிறேன். தேவனை ஜனங்கள் இன்னும் அதிகமாக அறிய வேண்டும் என்பதற்காகவே நான் இதைக் கூறுகிறேன். இதை நானே கட்டி உண்டாக்கி கூறும் ஒன்றல்ல. அது தேவனிடமிருந்து வந்துள்ளது என்று நான் கண்டு கொண்ட ஒன்றாகும். 41 இப்பொழுது இந்த விசேஷித்த கூட்டங்கள் எதிலாவது நான் ஜனங்களை புண்படுத்தும் ஒன்றை பேச நேர்ந்தால்... இல்லையென்றால், "நான் அதை அவ்விதம் விசுவாசிப்பதில்லை" என்று கூறுவார்கள். நான் அநேகமுறை இந்த கடுமையான கூற்றைக் கூறியுள்ளேன். அங்கு உட்கார்ந்து கொண்டு நான் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் என்னுடைய மனைவி என்னிடம் சம்பிரதாய முறைமை எதுவும் இல்லையென்பதை அறிவாள். நான் நான்... நீங்கள் கோழி இறைச்சியை புசித்துக் கொண்டிருக்கும்போது, நீங்கள் ஒரு எலும்பைக் கடிப்பது போன்று, கோழி இறைச்சியை விரும்பிப் புசிக்கும் எவரும், கோழி இறைச்சியில் எலும்பு உள்ளது என்பதற்காக கோழி இறைச்சியை சாப்பிடாமல் தூரமாய்ப் போட்டு விடுவதில்லை. அவன் எலும்பை தூர எறிந்து விட்டு, அதன்பின்னர் கோழி இறைச்சியைப் புசிக்கிறான். அது போன்ற காரியம்தான் செர்ரி பழத்திலும் உள்ளது. எனக்கு ஒரு கொட்டை அகப்பட்டால், நான் நான் - நான் செர்ரி பழத்தை தூர எறிந்துவிடமாட்டேன். நான் கொட்டையை எறிந்து விடுவேன். எனவே... 42 அதுபோன்று, நான் என்னுடைய எந்த கூட்டங்களிலாவது கூறுபவை எவையாகிலும் உங்களுக்கு கொட்டையாகத் தென்பட்டால், அதை ஒருபுறம் தள்ளிவிட்டு, அதைக் குறித்து உங்களை விட எனக்கு அதிகம் தெரியாது என்று கூறிவிடுங்கள். அதன்பின்னர் நீங்கள் சென்று உங்களுக்கு சரியாக காணப்படுபவைகளை புசியுங்கள். நான்.... 43 கர்த்தர் தமது வார்த்தையை ஆசீர்வதிப்பார் என்று இப்பொழுது நான் நம்புகிறேன். நான் வார்த்தையை வார்த்தையை மாத்திரம் - உறுதியாக விசுவாசிப்பவன். வார்த்தையை மாத்திரமே விசுவாசிப்பவன். அந்த செய்தியை மாத்திரமே கர்த்தர் எனக்கு கொடுத்திருக்கிறார். 44 நாம் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறோம். இன்று காலை இங்கு நின்று கொண்டிருக்கும் என் சகோதரர், மிஷனரிமார்கள், சுவிசேஷகர்கள், போதகர்கள் ஆகியோரை கவனித்தேன். இங்கே நிற்கிற அவர்களின் எண்ணிக்கை நூறாயிருக்கலாம் அல்லது நூற்றுக்கும் அதிகமாக இருக்கக் கூடும். அவர்கள் ஒவ்வொருவரும் இங்கு நின்று பேச என்னைக் காட்டிலும் தகுதி வாய்ந்தவர்கள். நான் அதைக் குறித்து உறுதியாக அறிந்திருக்கிறேன். ஆனால் பாருங்கள், நம்மில் ஒவ்வொருவரும், ஒருவர் மற்றவரின் ஸ்தானத்தை வகிக்க முடியாது. ஒருவர் மற்றவரின் செய்தியை பிரசங்கிக்க முடியாது. பாருங்கள், நமக்கு வெவ்வேறு முறைகள் உள்ளன. 45 தேவன் இராஜாதிபத்தியமுள்ளவர். அவர். அவர் மாத்திரம் ஆதியில் தனிமையாயிருந்த போது, இவைகளை இப்படி உண்டாக்க வேண்டுமென்று அவருக்கு ஆலோசனை கூறியது யார்? பாருங்கள்? நமக்கு நித்திய ஜீவன் இருக்குமானால்; ஒரே வகையான நித்திய ஜீவன் மாத்திரமே உண்டு, அது தான் தேவன். எனவே நமக்கு நித்திய ஜீவன் இருக்குமானால், அப்பொழுதே நாம் தேவனுடன் அவருடைய ஒரு பாகமாக இருந்தோம். நாம் அவருடைய தன்மைகளாயிருந்தோம். இப்பொழுதும் நாம் அவருடைய தன்மைகளாயிருக்கிறோம். ஏனெனில் "ஆதியிலே வார்த்தை இருந்தது.” சிந்தனையை வெளிப்படுத்துவதே வார்த்தை. எனவே நாம் அவருடைய சிந்தையில் இருந்து, பிறகு வார்த்தையாக வெளிப்பட்டு, இப்பொழுது நாம் இருக்கிற வண்ணமாக இருக்கிறோம். அதன் காரணமாகத்தான் நம்முடைய பெயர்கள் - ஒருக்கால் இப்பொழுது நமக்குள்ள பெயர்கள் அல்லஆனால் நம்முடைய பெயர்கள் உலகத் தோற்றத்துக்கு முன்பே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டன. புரிகிறதா? அது அப்பொழுது எழுதப்படவில்லையென்றால், அது எப்பொழுதுமே அங்கிருக்காது. புரிகிறதா? அந்த புத்தகத்தில் பெயரெழுதப்பட்ட அனைவரையும் மீட்கவே இயேசு வந்தார். பாருங்கள். அவர் அறிந்திருந்தார். 46 ரோமர் 8 நமக்குக் கூறுகிறது போல, "குயவனிடம், "குயவனிடம் யார் கூறமுடியும்? களிமண், "என்னை இப்படி இப்படி உண்டாக்கு" என்று கூற முடியுமா? புரிகிறதா? முடியாது. தேவன் தமது தன்மைகள் அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டியவராயிருக்கிறார். எனவே அவர் ஒரு பாத்திரத்தை கனவீனமான பாத்திரத்துக்கும் மற்றொரு பாத்திரத்தை கனமான காரியத்துக்கும் உண்டாக்கி, உண்மையாகவே ஒன்று மற்றொன்றுக்கு மேலாக உள்ளதென்று காண்பிக்க வேண்டியதாயுள்ளது. இப்பொழுது, ஆனால் அவர் இராஜாதிபத்தியம் உள்ளவர். நீங்கள் பாருங்கள், அவர் என்ன செய்யவேண்டுமென்று யாரும் அவரிடம் கூறமுடியாது. 47 அவர் நம் ஒவ்வொருவரையும் வித்தியாசமாக உண்டாக்கியிருக்கிறார். நட்சத்திரங்களும் கூட ஒன்றுக்கொன்று வித்தியாசமாக, ஒரு நட்சத்திரம் மற்றொன்றிலிருந்து வித்தியாசமாக உள்ளதாக நமக்கு வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது. பரலோகத்திலுள்ள தூதர்களிலும் கூட வித்தியாசம் உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா? அங்கு தூதர்கள், கேரூபீன்கள், சேராபீன்கள் போன்ற வெவ்வேறு வகையினர் உள்ளனர். நாம் எல்லோரும் வித்தியாசமாயிருக்கிறோம். தேவனுக்கு பெரிய மலைகள் உண்டு. அவருக்கு சமபூமிகள், புல் தரைகள், புல்வெளிகள், பாலைவனங்கள், தண்ணீர் போன்றவை உண்டு. பாருங்கள், அவர் -- அவர் வித்தியாசப்பட்டவர். அவர் அவர் பற்பலவகைகள் கொண்ட தேவன். நம்மில் சிலர் வெள்ளை நிறமாய், சிலர் கறுப்பாய், சிலர் மாநிறமாய், சிலர் மஞ்சள், சிலர் சிகப்பாய் இருக்கிறோம்; பாருங்கள், இது - இது அவருடைய ஜனங்கள். அவர் ஒரு... அவர் பல்வேறு வகையினைக் கொண்ட ஒரே தேவனாயிருக்கிறார், எனவே அவர் தம்முடைய ஊழியக்காரர்களுக்கு மத்தியிலும் அதேக் காரியத்தை உடையவராயிருக்கிறார் என்று நான் எண்ணுகிறேன். 48 இப்பொழுது சிறிது நேரம் ஜெபத்துக்காக நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. நாம் வார்த்தையைப் படிக்கும் முன்பு இப்பொழுது இதைக் கூற விரும்புகிறேன். நான் நீண்ட நேரம் பிரசங்கம் செய்தால், நீங்கள் எழுந்து வெளியே போக வேண்டியதாயிருக்கும் என்பதை நான் அறிவேன். நான் புரிந்து கொள்வேன், பாருங்கள், நான் பரிபூரணமாகப் புரிந்து கொள்வேன். இப்பொழுது நாம் ஜெபம் செய்வோமாக. தேவன் நம்மை எங்கிருந்து எடுத்தாரோ, அந்த மண்ணை நோக்கி நாம் தலை குனிந்து ஜெபம் செய்யும்போது, இங்குள்ள யாராகிலும் ஜெபத்தில் நினைவு கூரப்பட விரும்பினால், உங்கள் கையையுயர்த்துங்கள். உங்கள் கையின் கீழுள்ள இருதயத்தில் என்ன உள்ளதென்று அவருக்குத் தெரியும். 49 அன்புள்ள பரலோகப் பிதாவே, நீர் எங்களை எடுத்துள்ள மண்ணை நோக்கி தலை குனிந்தவர்களாய் உம்மை பயபக்தியுடன் அணுகிக்கொண்டிருக்கிறோம். ஒரு இரவு நீர் ஆபிரகாமிடம், "கடற்கரையிலுள்ள மணலை உன்னால் எண்ண முடியுமா?” என்று நீர் கேட்டதை நாங்கள் எங்களுடைய சிந்தையில் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதன் பிறகு நீர் அவனிடம், "நட்சத்திரங்களை நோக்கிப் பார்" என்று சொல்லி விட்டு, அவனால் "அதை எண்ண முடியுமா" என்று கேட்டீர். உண்மையாகவே அது கூடாத காரியம்தான். அவனுடைய "சந்ததி கடற்கரை மணலத்தனை போலவும், ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்களைப் போலவும் எண்ண முடியாததாயிருக்கும்" என்று கூறினீர். சரியாகக் கூறினால் நாங்கள் தோன்றின மண்ணை நோக்கி எங்கள் தலைகள் வணங்கியிருக்கும் இவ்வேளையில் இப்பொழுது எங்களுடைய சிந்தைகள், எங்களுடைய நினைவு, எங்கள் சிந்தைகளில் உள்ள எங்கள் நினைவுகள்; எங்கள் இருதயங்கள் நாங்கள் போய்க் கொண்டிருக்கிற பரலோகத்தை நோக்கியுள்ளது. மண்ணிலிருந்து நட்சத்திரங்கள் வரைக்கும், அது ஆபிரகாமின் சந்ததி! "நாங்கள் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களாய், ஆபிரகாமின் சந்ததியாராகி, வாக்குத்தத்தத்தின்படி அவனுடன் சுதந்தரவாளிகளாயிருக்கிறோம்.” 50 உயிர் வாழ அவசியமான இயற்கை உணவை உண்டு ஐக்கியங்கொள்ள இக்காலை இங்கு வந்திருக்கிறோம். அதை உண்டு எங்கள் வழியிலிருந்து விலக்கிவிட்டோம். இப்பொழுது எங்களுக்குள் இருக்கும் ஜீவனுக்கு பெலத்தை அளிக்கக் கூடிய உணவாகிய அந்த பரலோக மன்னாவை உம்மிடத்திலிருந்து பெற விரும்புகிறோம். இரத்தம் இந்த இயற்கை உணவை இப்பொழுது கொண்டு சென்று, அதிக அணுக்களை உண்டாக்கி, இந்த நாளுக்கான சரீர பெலனை அளிக்கும் இந்நேரத்தில், நாங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, இன்று காலை அவர் வார்த்தையின் மூலம் எங்கள் ஆவிக்குள் வரவும், நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பெலனை அளிக்கவும் அருள் புரியும். ஏனெனில் பகல் சென்று போயிற்று, சாயங்கால நிழல்கள் விழுகின்றன, சாயங்கால வெளிச்சம் இங்குள்ளது. விரைவில் "மேலே ஏறிவா” என்னும் கட்டளையை நாங்கள் கேட்கப் போகிறோம். அந்த நேரத்தில் நாங்கள் ஆயத்தமாயிருக்க விரும்புகிறோம். எனவே பிதாவே, எங்களுக்குதவி செய்யும். 51 புத்தகத்தைத் திறக்கவும் அல்லது முத்திரைகளை உடைக்கவும் எந்த மனிதனும் பாத்திரனாயிருக்கவில்லை. ஆனால் உலகத்தோற்றத்துக்கு முன்பு அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வந்து புத்தகத்தை கையிலெடுத்து முத்திரைகளை உடைத்தார். ஓ தேவ ஆட்டுக்குட்டியே, இன்று காலை நீர் வந்து எங்களுக்கு புத்தகத்தை திறந்து தாரும். கர்த்தாவே, நாங்கள் உம்முடன் அந்த புத்தகத்தில் என்ன உள்ளதென்று கண்டு, இந்த வேளையில் நாங்கள் ஆயத்தப்படுவதற்கென்று நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளும்படி செய்யும். ஒவ்வொரு சபையையும் ஆசீர்வதியும். வரப்போகும் கூட்டங்கள் ஒவ்வொன்றையும் ஆசீர்வதியும். எங்கள் சிறு கூட்டத்தையும் அதனுடன் இணைந்து ஆசீர்வதியும். இன்று நாங்கள் இவ்விடம் விட்டுச் செல்லும்போது, எம்மாவூருக்குச் சென்ற சீஷர்களைப் போல் நாங்களும், "வழியிலே அவர் நம்முடனே பேசின போது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா?" என்று கூற அருள்புரியும். பிதாவே, இதை அருளும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 52 இப்பொழுது வேதாகமத்தை திருப்ப விரும்புகிறவர்கள், வழக்கமாக ஒரு போதகர் வேதவசனங்களைப் படிக்கும்போது நீங்களும் அவருடன் கூட படித்து, அவர் எதிலிருந்து பேசுகிறார் என்று நீங்கள் அறிந்து கொள்ள விரும்புவதுண்டு. உங்களிடம் வேதாகமங்கள் இருந்தால், பரிசுத்த மத்தேயு 4-ம் அதிகாரத்துக்குத் திருப்புங்கள். 53 இப்பொழுது நான் பேசுவதற்கு முன்பு நான் என் பாடப் பொருளைக் கூறப் போகின்றேன். அதை ஏறக்குறைய ஒரு வேத பாடமாக கற்றுத் தந்து, தொடர்ந்து செல்லும்போது, பிரசங்கம் செய்யத் தொடங்கலாம். இதற்கு நான் எப்படியோ "அறுப்புக் காலம்" என்னும் தலைப்பைக் கொடுத்திருக்கிறேன். ஏனென்று எனக்கேத் தெரியவில்லை . 54 இந்த கருத்தை ஆதாரமாகக் கொள்ள ஒரு வேதபாகத்தைப் படித்து, அதிலிருந்து பொருளைத் தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன். நாம் பரிசுத்த மத்தேயு 4-ம் அதிகாரத்தின் ஒரு பாகத்தைப் படிக்கப் போகிறோம். இது இயேசுவுக்கு நேர்ந்த சோதனைகளைக் குறித்தது. அவர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட பிறகு, அவர் வனாந்திரத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்த பின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து : நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி : நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார். மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின் மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து. நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்து கொண்டால் இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். 55 நான் 4-ம் வசனத்தை சற்று திரும்பவும் படிக்க விரும்புகிறேன். அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். 56 இப்பொழுது ஒரு பொருளுக்காக, "தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தை" என்பதை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். இப்பொழுது நான் பேசும் போது, இதை மனதில் வைத்திருங்கள். 57 இயேசு ஒருமுறை பரிசுத்த யோவான் 6:48-ல் அது சரியென்று நான் நினைக்கிறேன். இன்று காலை அதை குறித்து வைத்தேன், "ஜீவ அப்பம் நானே" என்றார். அது பஸ்கா பண்டிகையின்போது, யூதர்கள் வனாந்திரத்தில் விழுந்த மன்னாவின் ஞாபகார்த்தமாக தங்கள் கோஷர் அப்பத்தை புசித்துக் கொண்டிருந்தனர். வனாந்திரத்திலிருந்த கன்மலைக்கு அடையாளமாக அவர்கள் ஊற்றிலிருந்து தண்ணீரைப் பருகினர். அவர்கள் மகத்தான தருணத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது இயேசு அவர்கள் மத்தியில் உரத்த சத்தமாய், "ஜீவ அப்பம் நானே. உங்கள் பிதாக்கள் வனாந்திரத்தில் நாற்பது ஆண்டுகளாக மன்னாவைப் புசித்திருந்தும் அவர்கள் ஒவ்வொரு வரும் மரித்தார்கள். ஆனால் நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம். இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் மரியாமல் என்றென்றைக்கும் பிழைப்பான்" என்றார். கன்மலையைக் குறித்து அவர், "நானே வனாந்திரத்திலிருந்த கன்மலை. உங்கள் பிதாக்கள் தண்ணீர் குடித்த கன்மலை நானே” என்றார். 58 அவர்கள், "அது எப்படியிருக்க முடியும்? உனக்கும் இன்னும் ஐம்பது வயதாகவில்லை , நீ ஆபிரகாமைக் கண்டதாக சொல்லுகிறாயே? உனக்கு பிசாசு பிடித்திருக்கிறதென்றும், நீ பைத்தியக்காரன் என்றும் இப்பொழுது அறிந்து கொண்டோம்" என்றனர். 59 அப்பொழுது இயேசு, "ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்" என்றார். பாருங்கள், "இருக்கிறேன்" என்பவரே முட்செடியில் அக்கினி ஸ்தம்பமாக மோசேயுடன் பேசினவர். நீங்கள் அதை பெயர்சொற்கள் மற்றும் பிரதிப் பெயர்கள் என்ற இலக்கண ரீதியில் காண்பீர்களானால், "இருந்தேன்" என்றோ "இருக்கப்போகிறேன்” என்றோ அல்ல, ஆனால் எக்காலத்தும் "இருக்கிறேன்" என்று நிகழ்காலத்திலேயே உள்ளது. 60 அவர் இப்பொழுது தம்மைக் குறித்து "ஜீவ அப்பம் நானே” என்று உரைத்ததை நாம் சிந்தித்துக் கொண்டிருந்தோம். இப்பொழுது இந்த மனிதன் எப்படி ஜீவ அப்பமாக இருக்க முடியும்? அதைக் குறித்து நாம் வியக்கிறோம். அவர், “இந்த அப்பம் என் சரீரமாயிருக்கிறது” என்றார். இப்பொழுது இந்த மனிதன் எப்படி அப்பமாக இருக்க முடியும்? அது ஒருவிதமான விசித்திரமாயுள்ளது, ஆனால் அதைக் குறித்து குழப்பமடையாதீர்கள். அவருடைய காலத்திலிருந்த மக்கள் அதைக் குறித்து குழப்பமடைந்தனர். இந்த மனிதன் எப்படி உண்மையாகவே அப்பமாயிருக்க முடியும் என்று அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. மேலும் பரிசுத்த யோவான் 1-ல் "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்து, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்" என்பதாய் நமக்குக் கூறப்பட்டுள்ளது. எனவே வார்த்தை அப்பமானது. வார்த்தையும் அப்பமும் ஒருவராக இருக்க வேண்டும், ஏனென்றால் இயேசுவே வார்த்தையாயிருக்கிறார், அவரே அப்பமாயுமிருக்கிறார். 61 அவர் எப்படி வார்த்தையும் அப்பமுமாக இருக்க முடியும்? எல்லா ... அது மாம்ச சிந்தைக்கு குழப்பத்தை உண்டாக்கும். ஆனால் இன்று காலை நம்மிடையே மாம்ச சிந்தை இல்லையென்றும், ஆவிக்குரிய சிந்தை மாத்திரமே உள்ளதென்றும், பிதா நமக்குக் கூற முற்படுபவைகளை நாம் புரிந்து கொள்ள முடியுமென்றும் நாம் நம்புகிறோம். இந்த வார்த்தைகள் குழப்பமுறச் செய்கின்றன என்று நாம் காண்கிறோம். ஆனால் அதே சமயத்தில் அவை வேதப் பிரகாரமான சத்தியம், பாருங்கள். 62 "இந்த மனிதன் எப்படி அப்பமாக இருக்க முடியும்?” அப்படித்தான் அவர்கள் கூறினர். நான் அதை ஆய்ந்து படித்துக்கொண்டிருக்கிறபடியால், அப்படித்தான் ஜோசிபஸும், சரித்திரக்காரராகிய உங்களில் அநேகரும். கூறியுள்ளனர் என்று நான் நினைக்கிறேன். 63 இப்பொழுது நான் வெளிப்படுத்தின விசேஷம் முதல் நான்கு அதிகாரங்கள் பேரில் விரிவுரைகளை எழுதி வருகிறேன். அந்த புத்தகம் விரைவில் வெளிவரும் என்று நம்புகிறேன். அது ஒரு பெரிய புத்தகமாக இருக்கும். அதன்பின்னர் ஒவ்வொரு சபை காலத்தின் பேரிலும் ஒரு சிறு புத்தகத்தை வெளியிடுவேன். 64 நான் சபை சரித்திரம் படித்து வருகையில்... அது எனக்கு ஒருவிதமாக என்னுடைய சிந்தையில் உள்ளது, அது ஜோசியஸ் என்று நான் நினைக்கிறேன், அல்லது ஆதி எழுத்தாளர்களில் ஒருவர், எப்படியோ, அதாவது, "வியாதியஸ்தர்களை சுகப்படுத்தினவராய் சுற்றித் திரிந்த இந்த நசரேயனாகிய இயேசுவின் சரீரத்தை அவருடைய சீஷர்கள் தோண்டியெடுத்து புசித்துவிட்டனர்” என்று எழுதியிருந்தார். பாருங்கள், அவர்கள் இராப்போஜனம் ஆசாரித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களோ, சீஷர்கள் அவருடைய சரீரத்தை தோண்டியெடுத்து அதை புசித்து வந்ததாக எண்ணினர். அவருடைய சரீரத்துக்கு அடையாளமாக நாம் இராப்போஜனம் உட்கொள்கிறோம், அதாவது இராபோஜனம் எடுக்கிறோம், ஏனெனில் அவர் வார்த்தையாயிருந்தார். 65 பாருங்கள், இது குழப்பம் உண்டாக்குகிறது. அதே சமயத்தில் அதற்கு ஆதாரமாக வேத வசனங்கள் உள்ளன. இயேசு, "வேதவாக்கியங்கள் எல்லாம் நிறைவேற வேண்டும்" என்றார். புரிகிறதா? இப்பொழுது, வேதவசனங்களுக்கு முரணாயுள்ளவைகளுக்கு நமது சிந்தையை விலக்கிக் கொள்ள நாம் எப்பொழுதும் விரும்புகிறோம். எந்நேரத்திலும் எக்காரணத்தைக் கொண்டும் வேதத்திலுள்ள ஒரு வார்த்தையையும் ஒருபோதும், ஒருபோதும் விட்டு விடாதீர்கள். வேதத்துடன் அப்படியே சரியாக நிலைத்திருங்கள். 66 இப்பொழுது, என்றாவது ஒரு நாள் தேவன் ஜனங்களை நியாயந்தீர்க்க வேண்டும். அவர் ஒரு சபையைக் கொண்டு ஜனங்களை நியாயந்தீர்க்கப்போவதாயிருந்தால், அது எந்த சபையாயிருக்கும்? அவர்கள் "கத்தோலிக்க சபை" என்பார்களானால், அப்படியானால் எந்த கத்தோலிக்க சபை? புரிகிறதா? ஏனெனில் அவர்களிடையே ஒருவருக்கொருவர் வித்தியாசமாய் இருக்கின்றனர், அவர்கள் நம்மோடு கொண்டுள்ள கருத்து வேற்றுமையைக் காட்டிலும் அது மோசமானது. பாருங்கள், அவர்கள் வித்தியாசப்படுகின்றனர். ஒருவர். அவர்களிடையே வெவ்வேறு வகையினர் உண்டு. ரோமன், வைதீகர், ஜூபனைட், ஓ, வெவ்வேறு வகுப்பினர். அவர்கள் ஒருவர் மற்றொருவரை மேற்கொள்ளப் பார்க்கின்றனர். அப்படியிருக்க, அவர் எந்த கத்தோலிக்க சபையைக் கொண்டு நியாயந்தீர்ப்பார்? அவர் பிராடெஸ்டெண்டு சபையைக் கொண்டு நியாயந்தீர்ப்பாரானால், அது எந்த பிராடெஸ்டெண்டு சபை? ஒன்று மற்றதைக் காட்டிலும் வித்தியாசமாயுள்ளதே! 67 ஆனால் அவர் உலகத்தை நியாயந்தீர்க்கப் போவதாயிருந்தால், அவர் ஏதாவது ஒரு நியமத்தை வைத்திருக்க வேண்டும். நம்மை நியாயந்தீர்க்க அவர் ஒரு நியமத்தை வைக்காமலிருந்தால், நாம் இஷ்டப்படி வாழ்க்கை வாழ, அவர் நம்மை நியாயந்தீர்க்க அவர் அநீதியுள்ளவராயிருப்பார். யார் செய்வது சரி? யார் சரியென்று நீங்கள் எப்படி கூற முடியும். ஒரு நியமம் நிச்சயமாக இருக்க வேண்டும். 68 அவர் உலகத்தை இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நியாயந்தீர்க்கப் போவதாக வேதத்தில் கூறியுள்ளார். இயேசு வார்த்தை என்று இங்கு நாம் வாசிக்கிறோம். "அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று எபி.13:8 உரைக்கிறது. ஆகையால் வார்த்தையாயிருக்கிற கிறிஸ்துவின் பேரில் சபை கொண்டுள்ள மனப்பான்மையை ஆதாரமாகக் கொண்டு அவர் நியாயந்தீர்ப்பார். "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்." மனிதனுடைய வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தையினால் அல்ல, வேதாகமப் பள்ளியிலிருந்து புறப்படுகிற வார்த்தையினால் அல்ல, சபையிலிருந்து புறப்படுகிற வார்த்தையினால் அல்ல, "தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தையினால் . ” மனிதன் அதைக் கொண்டு மாத்திரமே வாழ வேண்டும். மனிதனின் வியாக்கியானம் அல்ல. ஆனால் தேவனுடைய சொந்த வார்த்தை. 69 "நல்லது," "இங்கு ஒரு தவறுள்ளது” என்று நீங்கள் கூறலாம். அப்படியானால் தேவனே அதற்கு பொறுப்பாளி. அவர்தான் அதை எனக்குக் கொண்டு வந்தார். பாருங்கள். இங்கு அவர் கூறினவைகளை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும். 70 இப்பொழுது, "ஒரு மனிதன் அப்பமாகவும் வார்த்தையாகவும் இருப்பது ஒருவிதமாக குழப்பமாக இருந்தால், இப்பொழுது நாம் சென்று இதை ஆராய்வோம். நாம் கண்டறிவோமாக. ஏனெனில் வேதவாக்கியங்கள் அனைத்தும் உண்மையானவை, அவை - அவை தவறாயிருக்கமுடியாது. ஒவ்வொரு வேதவாக்கியமும் நிறைவேற்றப்படும். அது எவ்வளவு விசித்திரமாகத் தென்படுகிற போதிலும் கவலைப்பட வேண்டியதில்லை, அதாவது, அது எப்பொழுதும் நிறைவேற்றப்படும். 71 சகோதரன் வில்லியம்ஸ் அல்லது அல்லது இங்குள்ள சகோதரரில் சிலர், நம்முடைய முப்பாட்டனார் உயிரோடெழுந்து வர், அவர்களுக்கு நீங்கள் தொலைக்காட்சியைக் காண்பித்தால் எப்படியிருக்கும்? அவர்களுடைய நாட்களில் யாராகிலும் ஒருவர், "சத்தத்தை உலகம் பூராவும் கேட்கக் கூடிய ஒரு நாள் வரப் போகிறது" என்று தீர்க்கதரிசனம் உரைத்திருக்கலாம். 72 அப்பொழுது அதற்கு அவர்கள், "பாவம் அந்தக் கிழவனை விட்டு விடுங்கள். அவனுக்கு மூளைக்கோளாறு ஏற்பட்டுவிட்டது” என்று சொல்லியிருப்பார்கள். 73 "காற்றின் வழியாய் வண்ணம் பாய்ந்து வரக்கூடிய நாள் ஒன்று வரும். அது இப்பொழுது இங்குள்ளது. "அவர்கள் ஒரு பொத்தானை அழுத்தினால் உலகெங்கும் ஜனங்கள் நடமாடுவதையும் மற்றக் காரியங்களையும் நீங்கள் திரையில் காணலாம்." 74 அந்த காலத்தில் அவர்கள் "பாவம் கிழவன்” என்று சொல்லியிருப்பார்கள். புரிகிறதா? ஆனால் இப்பொழுது இன்றைக்கு அதை நாம் பெற்றிருக்கிறோம். இக்காலையில் அது இதே அறையில் உள்ளது. 75 நாம் தொடர்ந்து செல்வதற்கு முன்பு, தேவன் இவ்வறையில் இருக்கிறார் என்பதை உங்கள் சிந்தனைக்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்த வார்த்தையின் ஆக்கியோன் இங்கிருக்கிறார். எனவே நீங்கள் எப்படி உடுத்தியிருந்தாலும் அல்லது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எந்த தரத்தில் வாழ்ந்தாலும், அல்லது எப்படிப்பட்ட ஒரு வீட்டில் வாழ்ந்தாலும், அல்லது எந்தவிதமான காரை நீங்கள் ஓட்டினாலும், அல்லது நீங்கள் எவ்வளவாக கல்வி கற்றிருந்தாலும் அதனால் ஒன்றுமில்லை. தேவன் உங்கள் இருதயத்தையே நோக்கிப் பார்க்கிறார். அவர் என் இருதயத்தைப் பார்க்கிறார். நம்முடைய இருதயத்தினால் நாம் நியாயந்தீர்க்கப்படுகிறோம். நம்முடைய வார்த்தைகளினாலும் கூட அல்ல. நம்முடைய இருதயம் நம்மை நியாந்தீர்க்கிறது. "இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். இல்லையெனில், அது மாய்மாலம். 76 இப்பொழுது இந்த அறையில் உலகெங்கிலுமிருந்து மனித உருவங்கள் கடந்து கொண்டிருக்கின்றன, குரல்கள் பாடிக் கொண்டிருக்கின்றன, இந்த அறையில் இப்பொழுது உள்ளன. ஆனால் நீங்கள் பாருங்கள், நீங்கள் உங்களுடைய புலன்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் மாத்திரமே காணும்படி கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் ஒரு படிகத்தை அல்லது ஒரு குழாயை அல்லது ஒரு தொலைக்காட்சி குழாயைக் கொண்டு வந்து அதைப் போட்டால், அது இயலுக மின் காந்த ஒளி அலைகளில் சிதறியிருக்கும் உருவங்களை ஒரு வாய்க்காலில் ஒன்று கூட்டி, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா அல்லது உலகில் வேறெந்த பாகத்திலும் உள்ளவர்களை நமக்கு காண்பிக்கிறது. நீங்கள் தொலைக்காட்சி பெட்டி திரைக்கு முன் நின்று, அவர்கள் உடுத்தியிருக்கும் உடைகளின் வண்ணங்களையும், மரங்களின் வண்ணங்களையும் அவர்களுடைய ஒவ்வொரு அசைவையும் காணலாம். தொலைக்காட்சி பெட்டியை இயக்கி அது உண்மையா என்று பாருங்கள். 77 அப்படியானால், எங்கோ நமது கண்களுக்கு மறைவாக இவை இப்பொழுது கடந்து கொண்டிருக்க வேண்டும். தேவன் ஆபிரகாமிடம், "நட்சத்திரங்களை அண்ணார்ந்து பார்” என்று கூறினதும் இதன் வழியாக கடந்து சென்றிருக்க வேண்டும். எலியா கர்மேல் பர்வதத்தில் நடத்தின சம்பவமும் இங்கிருந்தது. ஆதாம் இவ்வுலகில் இருந்தபோது, அது இங்கிருந்தது. ஆனால் இப்பொழுதுதான் அவர்கள் கண்டு பிடித்தனர். 78 அவ்வாறே தேவனும் தூதர்களும் இங்குள்ளனர். என்றாகிலும் ஒரு நாள் அதுவும் தொலைக்காட்சியைப் போலவே நமக்கு தத்ரூபமாய் இருக்கும். ஏனெனில் ஆவி நம்மை அந்த அழிவில்லாத வாழ்க்கைக்கு கொண்டு சென்று விடும். அப்பொழுது நாம் புரிந்து கொள்வோம். எனவே நாம் அவருடைய வார்த்தையிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது, நாம் அதை முயற்சி செய்யப் போகிறோம் ... 79 தேவன், மகத்தான சிருஷ்டிகராகிய தேவன், நாம் இயற்கை முறைமையின் பேரில் பேச முயற்சிப்போம், முதலில் இயற்கையில் அவரைக் கண்டு கொண்டு, பின்பு வார்த்தைக்கு அதைக் கொண்டு வருவோம். இப்பொழுது இயற்கை வார்த்தையுடன் இணையாக செல்கின்றது. ஏனெனில் தேவனே இயற்கையை சிருஷ்டித்தவர். இயற்கை இயங்குவதை நீங்கள் காணும்போது.. அப்படித்தான் என்று நீங்கள் கண்டு கொள்வீர்கள். இயற்கையே என் முதல் வேதாகமமாக அமைந்திருந்தது. அது எப்படி இயங்குகிறது என்று காண்பதே ... தேவனை நான் இயற்கையில் கண்டு கொண்டேன். கோதுமை இயற்கை அளித்த தானியம். அதைக் கொண்டு நாம் அப்பம் உண்டாக்குகிறோம். அது நமது இயற்கை சரீரத்தை போஷிக்கிறது. இயற்கை அநேக இரகசியங்களை தன்னில் கொண்டுள்ளது. நாங்கள்... இயற்கையை கவனித்து வந்ததன் மூலமாகவே நான் தேவனை முதன் முறையாக கண்டு கொண்டேன். ஏதோ ஒன்றுண்டு என்று அதன்மூலம் அறிந்து கொண்டேன். எனக்கு கல்வி இல்லை. எனவே இயற்கையை ஆதாரமாகக் கொண்டு நான் அதிகம் பேசுகிறேன். அது... நான் அறியாமையை ஆதரிக்க முயற்சித்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் என்ன கூற முயல்கிறேன் என்றால், தேவனை அறிந்து கொள்ள உங்களுக்கு கல்வி அவசியமாயிருக்க வேண்டியதில்லை. 80 கிறிஸ்துவுக்கு முன்னோடியாக விளங்கிய யோவான் ஸ்நானன் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் ஒன்பதாம் வயதில் வனாந்தரத்துக்கு சென்றதாக நாம் கற்பிக்கப்பட்டுள்ளோம். அவனுடைய பணி மிகவும் முக்கியமானதால் அவன் வனாந்திரத்திலேயே தங்கியிருந்தான். அவனுடைய தகப்பன் ஒரு ஆசாரியனாயிருந்தான். அந்தக் குறிப்பிட்ட ஆசாரியத்துவம் அல்லது ஸ்தாபன வழியில், ஓ, அவனுடைய தகப்பன், "இப்பொழுது யோவானே நீ மேசியாவை அறிமுகம் செய்ய வேண்டியவன், உனக்குத் தெரியுமா, இந்த ஆசாரியர் வழியில் வந்துள்ள சகோதரன் இன்னார் இங்கே மேசியாவாக இருப்பதற்கு மிகவும் பொருத்தமானவர்" என்று கூறினான். யோவான் அதிலிருந்து விலகி, வனாந்திரத்துக்கு செல்ல வேண்டியதாயிற்று. ஏனெனில் மேசியா மனிதன் தெரிந்து கொள்ளும் ஒருவராக இல்லாமல், தேவன் தெரிந்து கொள்ளும் ஒருவராக இருக்க வேண்டும். எனவே அவனுக்கு ஏறக்குறைய ஒன்பது வயதானபோது, அவன் வனாந்திரத்துக்குச் சென்றான். 81 நீங்கள் கவனிப்பீர்களானால், முப்பதாம் வயதில் அவன் வனாந்திரத்தை விட்டு வெளிவந்தபோது, அவனுடைய பிரசங்கங்கள் ஒரு வேத பண்டிதரின் பிரசங்கங்களைப் போல் இருக்கவில்லை. அவன் பெரிய சொற்களை உபயோகிக்கவில்லை. ஆனால் அவை யாவுமே இயற்கையை சார்ந்திருந்தது. அவன் அக்காலத்திலிருந்த சபை ஆட்களை நோக்கி, "விரியன் பாம்புக்குட்டிகளே" என்றான். அவன் வனாந்திரத்தில் அந்த பாம்புகளைத்தான் கண்டான். அவன் பாம்புகளை வெறுத்தான். அவைகள் விஷமுள்ளவைகளாயிருந்தன. அவைகளுடைய பற்களில் உயிர்ச்சேதம் விளைவிக்கும் விஷம் இருந்தது. எனவே அக்காலத்திலிருந்த சபையை அவன், "விரியன் பாம்புக்குட்டிகளே, வருங்கோபத்துக்கு தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்? 'நாங்கள் இதை சார்ந்தவர்கள்' 'நாங்கள் ஜேசுயிட்ஸ்' அல்லது நாங்கள் இன்னார் இன்னார் , அல்லது 'நாங்கள் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் அல்லது வேறெதையும் உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ள துவங்காதீர்கள். நீங்கள் அதைச் சார்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளத் துவங்க வேண்டாம், ஏனென்றால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்" என்றான். புரிகிறதா? 82 "கோடாரியும்" அதைத்தான் அவன் வனாந்திரத்தில் உபயோகித்தான். "அது மரங்களின் வேரருகே வைத்திருக்கிறது. நல்ல கனி - கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்." பாருங்கள், கனி கொடுக்கும் மரத்தை அவன் வெட்டமாட்டான், ஏனெனில் அவன் மரத்தின் கனிகளை உண்டு வாழ்ந்தான். ஆனால் கனி கொடாத மரம்!, நீங்கள் வேதவாக்கியங்கள் அனைத்தும் ஆராய்ந்து பார்த்தால், அவை பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் அருளப்பட்டு இயேசுகிறிஸ்துவுக்கு பொருத்தமாக அமைந்துள்ளன. நீங்கள் பாருங்கள், "நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்" நீங்கள் பாருங்கள். அவன் அவன் இயற்கையை. ஆதாரமாகக் கொண்டே தன் செய்தியை அளித்தான். 83 இயேசு, "நானே அப்பம். மனுஷன் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். நானே வார்த்தை” என்று கூறினதை கண்டறிந்துள்ள நாம் இப்பொழுது அதைச் சந்திக்க வேண்டும். புரிகிறதா? ஆகையால் நாம் இயற்கைக்கு திரும்பிச் செல்ல வேண்டும். நான் அநேக முறை அவ்வாறு செய்யும்படி நேர்ந்துள்ளதை கவனிக்கிறேன். 84 இயற்கை அனைத்தும் ஒரே விதமாக இயங்குகிறது. நீங்கள் பறவைகள் ஒன்று கூடும் நேரத்தைக் கவனியுங்கள். அவை கூடுகளை விட்டு வயல் வெளிக்குச் சென்று இரை தின்கின்றன. அவ்வாறே ஆடு மாடுகள் வயல்வெளிகளில் சிதறி புல் மேய்கின்றதை கவனியுங்கள். அப்பொழுது நீங்கள் தூண்டில் போட்டால், மீன் அதைக் கடித்து மாட்டிக் கொள்ளும். ஆனால் ஆடுமாடுகள்... பறவைகள் மரங்களுக்குத் திரும்பி வந்து, ஆடுமாடுகளும் மூலைக்கு ஒதுங்கி விட்டால், நீங்கள் தூண்டிலை தண்ணீரிலிருந்து எடுத்து விடுவது நல்லது. மீன்கள் அதை கடிக்காது. ஏனெனில் இயற்கை அனைத்தும் ஒரே விதமாக இயங்குகின்றது. 85 அவ்வாறே தேவனுடைய வார்த்தையும் தொடர்ச்சியாக செல்கிறது. தேவன் எப்பொழுதுமே ஒரே விதமாக செயல் புரிகிறார். ஆதியில் மனிதன் தேவனுடன் கொண்டிருந்த ஐக்கியத்தை இழந்துவிட்டபோது, குற்றமற்ற ஒன்றின் இரத்தத்தின் மூலம் அவனை இரட்சிக்க வேண்டுமென்று அவர் தீர்மானம் கொண்டார். அன்று முதல் அவர் தமது முறையை மாற்றவேயில்லை. நாம் கல்வி கற்றுத் தந்து அதற்குள் நுழைக்கப் பார்த்தோம், ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு அதற்குள் நுழைக்கப் பார்த்தோம், அவர்களை கெஞ்சி நுழைக்கப் பார்த்தோம், அவர்களை அடித்து, சத்தமிட்டு அதற்குள் நுழைக்கப் பார்த்தோம். ஆனால் இன்று வரை அதே முறை நிலைத்து வருகிறது. தேவன் ஒரு விசுவாசியை சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் மாத்திரமே சந்திக்கிறார். 86 நாம் உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தைக் கூட்டி அங்கு எல்லோரும் சந்திக்கும்படி செய்ய முடியாது. அது ஒருக்காலும் கிரியை செய்யாது. அது முன்பு கிரியை செய்ததுமில்லை. இனி கிரியை செய்யப் போவதுமில்லை. ஆகையால்தான் நான் அந்த முறைமைக்கு விரோதமாய் உள்ளேன். தேவன் ஒரு முறையை வைத்திருக்கிறார். "எல்லா சபைகளும் ஒன்று சேருங்கள். அது உலக சபைகளின் ஆலோசனை சங்கமாயிருக்கும். நாம் எல்லாரும் ஒன்றாயிருக்கவும்' என்று இயேசு ஜெபித்தது அதற்காகவே" என்று இன்று நீங்கள் கூறக் கேட்டீர்கள். நீங்கள் பாருங்கள், இப்பொழுது அது ஆவியை அறிந்து கொள்ளாமல், அது மாம்ச சிந்தையில் எழுந்த கருத்து. 87 இயேசு, "பிதாவே, நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்” என்றார். ஏதோ ஒரு மனிதன் ஏதோ ஒன்றின் மேல் அதிகாரம் வகிப்பதல்ல அது. அது ஒருபோதும் கிரியை செய்யாது. ஒரு ஸ்தாபனம் மற்றொரு ஸ்தாபனத்தை ஆட்கொள்ளப் பார்க்கிறது. ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மேல் அதிகாரம் செலுத்த விழைகிறான். கிறிஸ்துவும் தேவனும் ஒன்றாயிருந்தது போல, நீங்கள் தேவனோடு ஒன்றாயிருக்க வேண்டும். அது தான் அந்த ஜெபமாயுள்ளது. அவர் வார்த்தை என்பதால் நாமும் வார்த்தையாயிருந்து அவரைப் பிரதிபலிக்க வேண்டுமென்று இயேசு வேண்டிக் கொண்டார். அந்த அவருடைய ஜெபத்துக்கே மறு உத்தரவு அருளப்பட வேண்டும். 88 சாத்தான் அதை மாம்ச சிந்தையில் எவ்விதம் குழப்பியுள்ளான் என்று பார்த்தீர்களா? ஆனால் நாமெல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்பதல்ல இயேசு ஏறெடுத்த அந்த ஜெபம். அவர்கள் அதை ஒவ்வொரு முறையும் செய்யும்போது, அவர்கள் தேவனை விட்டு விலகி, விலகிச் செல்கின்றனர். 89 நாம் தேவனுடன் ஒன்றாயிருக்க அவர் விரும்புகிறார். தேவன் வார்த்தையாயிருக்கிறார். ஆகையால் தனிப்பட்ட நபர் ஒவ்வொருவரும் தன் இருதயத்தில் தேவனுடன் ஒன்றாயிருக்க வேண்டும். 90 இந்த எல்லாக் காரியங்களும் இந்த விதமாகக் கிரியை செய்கின்றன என்று தேவன் அறிந்திருக்கிறார். இப்பொழுது, அப்படித்தான் நாம் தேவனை சில சமயங்களில் கண்டு கொள்கிறோம், இயற்கையை கவனிப்பதன் மூலம். பருவக் காலங்கள் சுற்றி சுற்றி வருவதால் தேவனை நிரூபிக்கின்றது. அங்குதான் நான் முதலில் தேவனைக் கண்டு கொண்டேன், எப்படி வசந்த காலத்தில் ஜீவன் எழும்பி வந்து, அது ஜீவித்து, ஒரு விதையை உண்டாக்கி, மரித்துப் பூமிக்கடியில் சென்று, உயிர்த்தெழுதலில் மறுபடியும் வந்து, இப்படியாக சுற்றி சுற்றி வருவதன் மூலமேயாகும். அதைக் குறித்து நாம் மணிக்கணக்கில் பேசலாம். 91 ஆனால் இங்குள்ள நம்முடைய மிஷனெரி சகோதரனுடைய இந்தியாவில் அவர்கள் எவ்வாறு வேறுபட்ட கருத்தை உடையவர்களாயிருக்கின்றனர். அங்குள்ள அநேகரும், இன்னும் உலகம் முழுவதிலுமுள்ளவர்கள், இறந்து மறு ஜென்மம் எடுத்தல் என்பதில் நம்பிக்கைக் கொண்டுள்ளதை நான் காண்கிறேன். அதாவது நீங்கள் நீங்கள் ஒரு மனிதனாக மரித்து, நீங்கள் மறுபடியும் ஒரு பறவையாகவோ அல்லது ஒரு மிருகமாகவோப் பிறக்கிறீர்கள் என்பதாயுள்ளது. பாருங்கள், அது இயற்கையோடு ஒத்துப் போகிறதில்லை. 92 இயற்கை கூறுவது என்னவெனில், பூமிக்கடியில் சென்ற வித்து அதே வித்தாக மறுபடியும் எழும்பி வருகிறது. புரிகிறதா? எந்த இயேசு பூமிக்கடியில் சென்றாரோ, அதே இயேசு மறுபடியும் மேலே வந்தார். அல்லேலூயா! இந்த சரீரம், அது பூமிக்கடியில் சென்று, அது மலராகவோ அல்லது வேறெதாகவோ மேலே வராது. அது ஒரு மனிதனாக அல்லது ஒரு ஸ்திரீயாக மேலே வரும். அதை நாம் இயற்கையின் செயலில் காண்கிறோம். அது எப்படி செய்யப்படுகிறதென்றால், அது குளிர்காலத்தின் வழியாய் சென்று அழுக வேண்டும். ஆனால் அதில் ஜீவன் இருக்குமானால், அது பாதுகாக்கப்படுகிறது. 93 ஆனால் அந்த வித்தில் ஜீவன் இல்லாமல் போனால், அது மறுபடியும் மேலே எழாது. அதனால் எழும்ப முடியாது. அதை மேலே எழுப்புவதற்கு அதில் ஒன்றும் இல்லை. அவ்வாறே நாம் ஒரு பெயர் கிறிஸ்தவராக இருப்போமானால், உலகில் இரு சபைகள் உள்ளன. ஒன்று மாம்சத்துக்குரிய சபை. மற்றது ஆவிக்குரிய சபை. ஆனால் அவைகளிலுள்ள அனைவருமே "கிறிஸ்தவர்கள்” என்றழைக்கப்படுகின்றனர். மாம்சத்துக்குரிய சபை எழும்ப முடியாது. அது இப்பொழுது உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தில் எழும்பிக் கொண்டிருக்கிறது. 94 ஆனால் கிறிஸ்தவன் உயிரோடெழுந்து கிறிஸ்துவை சந்திப்பான். ஏனெனில் மணவாட்டி சென்று அவரை சந்திக்க வேண்டும். எனவே அவைகளில் ஒரு வித்தியாசம் உண்டு. இயற்கை நமக்காக இந்த இரகசியங்களை தனக்குள் வைத்துள்ளது. நாம் அவைகளை கவனிக்கும்போது, நம்மால் அவைகளைக் காணமுடியும். எனவே கிறிஸ்தவமார்க்கம் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் என்னும் சத்தியத்தை உரைப்பதை நாம் காண்கிறோம். 95 கோதுமை ரொட்டி அல்லது அப்பத்தைக் கொண்டு நாம் உயிர் வாழ்கிறோம் என்று நாம் அறிந்திருக்கிறோம். நாம் உயிர் வாழ ஒரே வழி, இறந்த பொருளை நமது சரீரத்தில் உட்கொள்வதன் மூலமேயாகும். வேறெந்த வழியிலும் நீங்கள் உயிர்வாழ முடியாது. 96 அண்மையில் சைவ உணவு உண்பவர் என்னை சந்தித்து, அவர் "சகோ. பிரான்ஹாமே, காலை உணவுக்கு பன்றி இறைச்சியும் முட்டையும் சாப்பிடுகிறீர்கள் என்று நீங்கள் கூறினதை கேட்கும் வரைக்கும் உங்கள் பேரில் எனக்கு அதிக நம்பிக்கை இருந்தது” என்றார், மேலும் “தேவபக்தியுள்ள ஒரு மனிதன் அதை எப்படி புசிக்க முடியும்?” என்று கேட்டார். நீங்கள் பாருங்கள், நான், "அதனால் என்ன தவறு?” என்று கேட்டேன். 97 எல்லாமே அசுத்தமானவை. ஆனால் அது தேவ வசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படுகின்றது. வேதம், "இவைகளை நீ சகோதரருக்குப் போதித்து வந்தால், இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாயிருப்பாய்” என்று வேதம் உரைத்துள்ளது. பாருங்கள், "எல்லாக் காரியங்களும் பரிசுத்தமாக்கப்படுகின்றன். அது ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக் கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல," தீமோத்தேயு 3. இப்பொழுது அது உண்மை என்று நாம் கண்டறிகிறோம். எனவே நான் கூறினேன்.... நான் அவரிடம், "இறந்து போனவைகளை நீங்களும் கூட புசிக்கிறீர்கள் அல்லவா?" என்று கேட்டேன். அவர், "ஓ, இல்லவே இல்லை , ஐயா" என்றார். 98 நான், "நீங்கள் உயிர் வாழ வேண்டுமென்றால், இறந்த பொருளைக் கொண்டே உயிர் வாழ முடியும். நீங்கள் ரொட்டியை புசிக்கிறீர்கள், அதற்காக கோதுமை மரிக்க வேண்டும். கீரைகளை சாப்பிட்டால், அது மரிக்க வேண்டும். நீங்கள் பாலைக் குடிக்கும் போது, அதிலுள்ள கிருமிகளையும் சேர்த்து குடித்து விடுகின்றீர்கள்" என்றேன். நீங்கள் இறந்த பொருளைக் கொண்டு மாத்திரமே உயிர் வாழ முடியும். 99 அப்படியானால், நாம் சரீரப் பிரகாரமாக வாழ்வதற்கு, ஏதாவதொன்று மரிக்க வேண்டுமானால், நாம் நித்தியமாக வாழ்வதற்கு ஒன்று மரிக்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியம் வாய்ந்தது! அதை பெற மரணம் அவசியம். அப்பம்! பாருங்கள், இயேசு, "ஜீவ அப்பம் நானே" என்றார். கோதுமையால் செய்த அப்பம் உண்டு. ஆனால் இயேசு அப்படிப்பட்ட அப்பம் அல்ல. எனவே அப்பத்தால் உயிர் வாழும் இரண்டு விதமான ஜீவன்கள் இருக்க வேண்டும். எனவே அது நம்மை அந்த ஜீவியத்திற்கு வழிநடத்தும். அங்கே.. முடியாது, அவர் அல்ல, அவர் கோதுமையல்ல, அவர் வார்த்தையல்ல. அவர் மாமிசமாயிருந்தார். எனவே இரண்டு விதமான ஜீவன்கள் இருக்க வேண்டும். நாம் கூறினதுபோல, நாம் மாம்ச பிரகாரமாக உயிர்வாழ கோதுமை மரிக்கிறது என்பதை நாம் அறிகிறோம். நாம் நித்தியகாலமாக உயிர்வாழ வார்த்தை அப்பமாகிய இயேசு மரித்தார். அவர் வார்த்தை அப்பம். இப்பொழுது கவனியுங்கள், இதை மனதில் வைத்திருங்கள். இயேசுவின் வார்த்தைகள் உண்மையென்று நிரூபிக்க, நாம் இதை இயற்கையில், அது எப்படி இயங்குகிறது என்பதை பார்க்கிறோம். 100 இப்பொழுது அதை கண்டுகொள்ள நாம் வேதத்துக்கு செல்வோம். நமது முக்கிய பொருளுக்கு நாம் வரும் வரைக்கும் வேதவாக்கியங்களுக்கு திரும்பிச் செல்வோம். ஏதேன் தோட்டத்தில் தேவன், தமது முதல் குடும்பம் உயிர் வாழ்வதற்கென, தேவனுடைய வார்த்தையை அளித்தார். ஒவ்வொரு வார்த்தையும் அளித்தார். பூமியில் வைக்கப்பட்ட முதல் குடும்பம் தேவனுடைய வார்த்தையோடு நிலைத்திருக்கும் வரைக்கும், அவர்களுக்கு நித்திய ஜீவன் அளிக்கப்பட்டது. 101 அதுவே தேவனுடைய திட்டமாயிருந்தது. அவர், "நான் தேவன், நான் மாறாதவர்" என்கிறார். அதுவே அவருடைய திட்டமாக இப்பொழுதும் அமைந்துள்ளது. கோட்பாடு அல்லது ஸ்தாபனம், அல்லது மனிதனால் உண்டாக்கப்பட்ட சட்டங்கள் இவைகளினால் மனிதன் பிழைக்க வேண்டுமென்பது ஒருபோதும் அவருடைய திட்டமாயிருந்ததில்லை, ஆனால் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் அவன் பிழைக்க வேண்டும் என்பதே அவருடைய திட்டமாகும். 102 இப்பொழுது நாம் ஆதியாகமத்துக்கு திரும்பிச் செல்வோம். அதுவே தொடக்கம். ஆதியாகமாம் என்றால் "தொடக்கம்” என்று பொருள். தம்முடைய குடும்பம் வார்த்தையில் நிலைத்திருந்து வார்த்தையைக் கொண்டு வாழ்ந்த வரைக்கும் தேவன் அவர்களுக்கு நித்திய ஜீவனை அளித்திருந்தார் என்பதை நாம் கண்டறிகிறோம். ஆனால் அவர்கள் அதை மீறின போது, வாக்குத்தத்தங்களின் சங்கிலியில் ஒரு இணப்பு அறுந்த போது மரணம் அவர்களை ஆட்கொண்டது. அதுவும் கூட தேவனுடைய வாக்குத்தத்தமாயிருந்தது. 103 அது ஒரு சங்கிலி. அதைக் கொண்டே நீங்கள் நரகத்தின்மேல் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அது ஒன்று மாத்திரமே உங்களை நித்திய ஜீவனுக்கு கொண்டு செல்லும். ஆனால் விசுவாசி பாவனை விசுவாசியாகி இந்த வார்த்தைக்கு முரணான ஒரு வார்த்தையும் கொண்டு வாழத் தலைப்பட்டால், அவன் தேவனுடன் கொண்டுள்ள தன்னுடைய ஐக்கியத்தை துண்டித்துப் போகிறான். ஒரு இணைப்பு அறுந்துவிட்டதே! இந்த வார்த்தையின் பேரில் நீங்கள் கொண்டுள்ள விசுவாசம் ஒரு சங்கிலியைப் போன்றது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஒரு சங்கிலி அதன் மிகவும் பலவீனமான இணைப்பில் மிகவும் பலமுள்ளதாயிருக்கிறது. அது உண்மை . ஏனெனில் அவ்வளவு பளுவைத் தான் அது தாங்கும். வார்த்தையில் ஏதாவதொன்று உங்களுக்கு குழப்பம் உண்டாக்கினால், நீங்கள் வேறு விதமாக கேள்விப்பட்டிருந்தால், அவர்கள், "இதுவா? ஓ, அது கடந்து சென்ற அப்போஸ்தலர்களின் நாட்களுக்குரியது” என்கின்றனர். ஆனால் வேதமோ இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்றுரைக்கிறது. எனவே அது பலவீனமாக இருக்க விட்டு விடாதீர்கள்! அதை அரணிட்டு இறுகப்பற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை அதில் சுற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது ஒன்று மாத்திரமே உங்களை நரகத்தின் அக்கினிக்கு மேலாக கொண்டு செல்ல முடியும். அது உண்மை. 104 முதல் குடும்பமாகிய ஆதாமும் ஏவாளும் இந்த சங்கிலியை அறுத்து போது கவனியுங்கள். அவர்கள் ஒரு முழு வாக்கியத்தை மீறவில்லை. மூன்று வார்த்தைகளை மீறவில்லை. ஒரே ஒரு வார்த்தையை மாத்திரமே மீறினர். மனிதன் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் நரகத்தின் மேல் தொங்கிக் கொண்டிருப்பான். அங்குதான் மனிதன் நித்தியமாக அடையும் ஸ்தலம் தீர்மானிக்கப்படுகிறது. ஏன், அவன் சங்கிலியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பான், அல்லது அவன் ஒரு கோட்பாட்டை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பான். இல்லையென்றால் சங்கிலியில் கோட்பாடு கலந்திருந்தால், அங்குதான் பலவீனமான இணைப்பு உள்ளது. நீங்கள் விழுந்து விடுவீர்கள். அங்குதான் ஆதாமுக்கு, ஏவாளுக்கும் பலவீனமான இணைப்பு இருந்தது. அந்த பலவீனமான இணைப்பு "நிச்சயமாக," அவன் சொன்னான், "தேவன். ஆனால் நிச்சயமாக தேவன் அதை சொன்னாரே! தேவன் அதை கூறியிருப்பாரானால், அந்த அர்த்தத்தில் தான் அவர் கூறினார். மேலும், "நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்!" என்று அவர் கூறின தம்முடைய வார்த்தையை கூட காத்துக் கொள்கிறார். நீங்கள் கலப்படமற்ற தேவனுடைய வார்த்தையைத் தவிர வேறெதையாகிலும் உங்கள் ஆத்துமாவில் போடும் அந்த நாளில் தேவனை விட்டு பிரிக்கப்படுகிறீர்கள். 105 இது மிகவும் கடினமானது, ஆனால் கூர்ந்து கவனியுங்கள். இப்பொழுது கவனியுங்கள். ஒரு வார்த்தை, வேதாகமத்தின் துவக்கத்தில் ஒரு வார்த்தை. "ஒரே ஒரு வார்த்தை மனிதனை நித்திய ஜீவன் சங்கிலியிலிருந்து பிரித்தது" என்று தேவன் கூறினார். 106 அது மனிதனின் கால்களைக் கட்டி அவனைத் தலைக்கீழாகத் தொங்க விடுவது போல் அவன் தன் கரங்களை வானத்தை நோக்கி உயர்த்தியிருந்தான். ஆனால் அவன் தொங்கிக் கொண்டிருந்த கால்களை அல்லது பாத விரல்களை வெட்டிப் போட்டால் நீங்கள் தொங்கிக் கொண்டிருந்த அதே அடிப்பகுதியில் அந்த சங்கிலி அறுபட்டு, நீங்கள் விழுந்து விடுகிறீர்கள். இப்பொழுது அதை ஞாபகம் கொள்ளுங்கள். 107 "மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் எந்த ஒரு வார்த்தையும் நிலவரப்பட வேண்டும்” என்று வேதம் உரைத்துள்ளது என்பது நினைவிருக்கட்டும். நாம் இயேசுவுக்கு நேர்ந்த சோதனைகளைக் குறித்து இன்னும் சில நிமிடங்களில் சிந்திக்கும்போது, அதற்கு வருவோம். இன்றைக்கு ஊழிக்காரர்கள் விழுந்து போகத் தக்கதாக அவர்களுக்கு நேரிடும் மூன்று சோதனைகள்; சபை விழுந்து போகத்தக்கதாக அதற்கு நேரிடும் சோதனைகள்; ஸ்தாபனங்கள் விழுந்து போகத்தக்கதாக அதற்கு நேரிடும் மூன்று சோதனைகள், தனிப்பட்ட நபர் விழுந்து போகத்தக்கதாக அவருக்கு நேரிடும் மூன்று சோதனைகள். இவையனைத்தும் மூன்றாக அமைந்துள்ளன. நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம்; பிதா, குமாரன், பரிசுத்த ஆவி போல், எல்லாமே மூன்றில் பரிபூரணப்படுகின்றன. 108 இப்பொழுது கவனியுங்கள். தேவன் ஆதியிலே, தமது பிள்ளைகள் பிழைக்கத்தக்கதாக அவர்களுக்கு முதாலாவது அளித்தது வார்த்தையே. அது உண்மையென்று இப்பொழுது நாம் காண்கிறோம். வேதாகமத்தின் நடுவில் இயேசு வந்து, "மனுஷன் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்றார். பிறகு வெளி. 22:18 ல் இயேசுவே, "இவைகளை நான் சாட்சியாக எச்சரிக்கிறேன். ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால் அல்லது எதையாகிலும் எடுத்துப் போட்டால், ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய பங்கு எடுத்துப் போடப்படும்" என்றார். 109 இப்பொழுது! பாருங்கள், நாம் நல்லவர்களாக வாழுதல் என்னும் அடிப்படையில் அல்ல. அது நம்முடைய நம்முடைய சபைக்கு விசுவாசமுள்ளவர்களாக இருத்தல் என்னும் அடிப்படையில் அல்ல. முக்கியமான காரியம் என்னவெனில் அந்த வார்த்தையில் நிலைத்திருப்பதேயாகும். வார்த்தையைத் தவிர வேறெதையும் புசிக்காதீர்கள். அதனோடு நிலைத்திருங்கள். அவரே அந்த வார்த்தையாயிருக்கிறார். இப்பொழுது கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். 110 நாம் உண்டு உயிர் வாழும் இந்த அப்பத்தில் என்ன வித்தியாசம் உள்ளது? இப்பொழுது கோதுமையைக் கொண்டு செய்யப்படும் அப்பத்தினால் நாம் உயிர் வாழ்கிறோம். அது கலப்புள்ள தானியம் அல்ல. அதை நிலத்தில் புதைத்தால் அது மறுபடியும் மேலே வருகிறது. அது முதிர்ந்த தானியமாக இருக்க வேண்டும். கெட்டுப் போன தானியங்கள் மேலே எழும்ப முடியாது. நாம் யாவரும் அதை அறிவோம். இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் சகோதரன் சாத்தமன் கனடாவில் கோதுமை பயிரிடுகிறார். கெட்டுப் போன தானியங்களை மண்ணில் விதைத்தால், கோதுமை பயிரை எதிர்பார்க்க முடியாது என்று அவருக்குத் தெரியும். ஏனெனில் கோதுமையிலுள்ள புழுக்கள் அல்லது அல்லது நுண்ணுயிரிகள் அதை அரிக்கும்போது, அதிலுள்ள ஜீவனை முதலில் தின்று விடுகின்றன. 111 உங்கள் சரீரங்கள் அரிக்கப் போகும் புழுக்கள் இப்பொழுதே உங்களுக்குள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? யோபு, "என் தோல் புழுக்கள் இந்த சரீரத்தை அழித்தப் பின்பு" என்றான். உங்களை ஒரு சவப்பெட்டியில் வைத்து, காற்றுப் புகாமல் அதை மூடினாலும் உங்களில் இருக்கும் புழுக்கள் உங்களைத் தின்று போடும். 112 நீங்கள் மாவை எடுத்து சிறிது நேரம் மூடி வைத்தால், அதில் பூச்சி இருப்பதைக் காணலாம். அது என்ன? துவக்கத்திலேயே அதில் அந்தப் பூச்சி இருந்தது. அது துவக்கத்திலேயே இருந்தது. 113 இப்பொழுது இந்த தானியம் ஒரு நல்ல தானியமாக இருக்க வேண்டும். அதில் தவறுகள், குறைகளின்றி கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும். அது கலப்பில்லாத தானியமாக இருக்க வேண்டும். அது கலப்புள்ளதாக இருந்து, அதை நீங்கள் விதைத்தால் அது வளர முடியாது, ஏனென்றால், நீங்கள் அதை மீண்டும் கலப்பின தானியமாக - தானியமாக நடும்போது, உங்களுடைய - உங்களுடைய கோதுமை ஒன்றுமில்லாததாகிவிடுகிறது. ஏனென்றால் ஒரு கலப்பு தானியமாக மீண்டும் வளராது. அதனால் மீண்டும் வளர முடியாது. நீங்கள் அதை கலப்புள்ளதாக்கும்போது, நீங்கள் அதிலிருந்து ஜீவனை எடுத்து விடுகிறீர்கள். 114 இன்றைக்கு அதுவே சபைகளுக்கு நேர்ந்துள்ளது. அவர்கள் உலகத்துடன் கலந்துள்ளனர். அதன் காரணமாகவே ஒரு எழுப்புதல் உண்டாகும் போது, அதை தொடர்ந்து மற்றொரு எழுப்புதல் உங்களுக்கு உண்டாக முடியவில்லை. ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட ஒவ்வொரு ஸ்தாபனமும் இந்த இடத்திலேயே மரித்து, மறுபடியும் எழும்புவதில்லை . ஏனெனில் அது தன் முறைமைகளில் உலகத்தையும் சேர்த்து விட்டது. ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட எந்த சபையும் மறுபடியும் எழுந்ததாக வரலாறு இல்லை . அது அங்கேயே மரித்து விடுகிறது. ஏன்? நீங்கள் அதை கலப்பு செய்து விட்டீர்கள். 115 அதற்கு மேல் ஒரு பேராயரை அமர்த்தாதீர்கள். பரிசுத்த ஆவி அதற்கு தலைவராக இருக்கட்டும். புரிகிறதா? களைகள் போன்றவைகளை புறம்பாக்கவே பரிசுத்த ஆவி அனுப்பப்பட்டார். பேராயரோ அல்லது கண்காணிகளோ என்ன நினைக்கிறார்கள் என்றல்ல. சபையை அதன் நிலையில் வைத்திருக்க பரிசுத்த ஆவியே அவசியம். அவரே பரிபூரணமான வார்த்தை , அதை நாம் பார்ப்போம். 116 ஆதாம் தன்னுடைய தெரிந்து கொள்ளுதலை உடையவனாயிருந்தான், அவன் வார்த்தையை ஏற்றுக் கொண்டு பிழைக்க வேண்டும், அல்லது ஒரு வார்த்தையை அவிசுவாசித்து மரிக்க வேண்டும். 117 நாமும் அதே தெரிந்து கொள்ளுதலை உடையவர்களாயிருக்கிறோம், ஏனென்றால் நாமும் தெரிந்துகொள்ளுதலை செய்ய வேண்டும். தேவன் ஆதாமை வார்த்தையின் மேல் வைத்து, வார்த்தையின் பேரில் மாத்திரம் வைத்து, பின்னர் நம்மை ஒரு கோட்பாட்டில் அல்லது ஒரு விதமான கோட்பாட்டில் வைப்பாரானால், அப்பொழுது தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பில் அநீதியுள்ளவராக இருக்கிறார். அது அவருடைய பரிசுத்தத்துக்கும் இராஜாதிபத்தியத்துக்கும் ஏற்ற செயல் அல்ல. ஆனால் ஒவ்வொரு மனிதனையும் ஒரே அடிப்படையில் வைப்பதே அவருடைய இராஜாபத்தியத்துக்கு ஏற்றதாக இருக்கும். அவர் தேவன், அவர் மாறாதவர். தேவன் முதலில் எதைச் செய்கிறாரோ, அதேக் காரியத்தையே அவர் என்றென்றைக்கும் செய்கிறார். அவர் தமது -- தமது திட்டத்தை மாற்றுவதில்லை அவர் செய்யும் ஒன்றே ஒன்று, அதை விரிவுபடுத்துகிறார். ஆனால் அவர் அதை மாற்றுவது இல்லை. அதேக் காரியம் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. 118 இப்பொழுது ஆதாமுக்கு ஒரு தெரிந்து கொள்ளுதல் இருந்தது. அவன் வார்த்தையைப் பற்றிக் கொண்டால் பிழைப்பான். வார்த்தையைப் பற்றிக் கொள்ளாமல் போனால் மரிப்பான். 119 நாமும் அதே காரியத்தையே பெற்றுள்ளோம். நாம் வார்த்தையோடு தரித்திருந்தால், நாம் பிழைப்போம். "மனுஷன் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். ஆனால் நாம் அப்படி செய்யாமல் போனால், மரிக்கிறோம். நாம் ஆவிக்குரிய பிரகாரமாய் மரிக்கிறோம். ஓ, நாம் இன்னமும் கூச்சலிட்டு நிச்சயமாகவே உதைத்து, சத்தமிட்டு அலறி, எல்லாவற்றையும் செய்யக் கூடும். ஆனால் பிழைத்திருப்பதென்பது அதுவல்ல. அதுவல்ல பிழைத்திருப்பது. நான் ஒரு மிஷனரி. அஞ்ஞானிகள் நம்மைக் காட்டிலும் அதிகமாகக் கூச்சலிட்டு, தேவர்களை அறிந்திருப்பதாக அறிக்கை செய்வதையும், மற்றும் அது போன்ற காரியங்களையும் நான் கண்டிருக்கிறேன். அவர்கள் பிழைத்திருக்கவில்லை. "அவர்கள் உயிரோடே செய்த்தவர்கள். அப்படித்தான் வேதம் கூறியுள்ளது. இப்பொழுது இந்த தெரிந்து கொள்ளுதல் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கண்டறிகிறோம். 120 ஆனால் அவனோ சாத்தானுடைய ஒரு வார்த்தையின் பேரில் ஒப்புரவாகி பின்னர் மரித்து போனான். 121 தேவன் தமது கிருபையினாலும் இரக்கத்தினாலும், ஆதாமின் கீழ்ப்படியாமையை காணாமல் விட்டிருந்தால் நமக்கு அதன் விளைவாக நேரிடும் கஷ்டங்களும், இந்த சிறு குழந்தைகளின் மரணங்களும், மற்றும் ஒவ்வொரு காரியமும், யுத்தங்களும், சிலுவையில் அறைதல்களும், உள்நாட்டில் நாம் பெற்றுள்ள பிரச்சனைகளும் இருந்திருக்காது. அவர் அதைக் காணாமல் விட்டுவிட்டிருந்தால், அவருடைய வார்த்தையின் அவருடைய இராஜாதிபத்தியம் அதை அவரைக் காணாமல் விட்டுவிட அனுமதித்திருக்கும். ஆனால் அவர் அப்படி செய்திருந்தால், அப்பொழுது அவர் அநீதியுள்ளவராயிருந்திருப்பார். உங்களுக்கு இது புரிகிறதா? அவர் அதைக் காணாமல் விட முடியாது. துவக்கத்தில் அவர் ஆதாமுக்கு அதை காணாமல் விடவில்லை. அப்படியிருக்க, அவர் உங்களுக்கும் எனக்கும் துவக்கத்தில் அப்படி செய்யமாட்டார். நாம் அந்தக் காரியத்திற்கு, வார்த்தையண்டை மாத்திரமே வர வேண்டியவர்களாயிருக்கிறோம். "எல்லா மனிதர்களின் வார்த்தையும் பொய். என் வார்த்தையே சத்தியம்" என்று அவர் கூறினார். 122 இப்பொழுது நாம் எந்த நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதையே நாம் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம், இது அறுப்புக் காலம். 123 ஆதாமின் வீழ்ச்சிக்குப் பிறகு (அவன் வார்த்தையினால் சோதிக்கப்பட்டு விழுந்து போனான்), தேவன், தமது சிருஷ்டிப்பில் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைக்கும் ஒரு மனிதனை கண்டு, பிடிக்க முயன்றார். இப்பொழுது கவனியுங்கள். அவர் அதைக் கண்டுபிடிக்க முயன்றார். அதாவது அவன் காலத்திற்கென்று அளிக்கப்பட்ட வார்த்தையின்படி வாழும் ஒருவனை கண்டுபிடிக்க முயன்றார். இப்பொழுது, நீங்கள் பாருங்கள், தேவன் தமது வார்த்தையை சிதறப்பண்ணினார், ஏனென்றால் அவரால் முடியும். 124 அவர், அவர் முடிவுற்றவர், அவர்-அவர் சர்வ வியாபி, சர்வமும் அறிந்தவர், எனவே அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். அவர் எல்லாவிடங்களிலும் இருக்க முடியாது. ஆனால் அவர் சர்வஞானியாக எல்லாவற்றையும் அறிந்துள்ள காரணத்தால், அவர் எல்லாவிடங்களிலும் சர்வ வியாபியாக இருக்க முடிகிறது. காரணம் அப்படித்தான் அவர் தமது முன்னறிவின்படி நம்மை முன்குறிக்கிறார். இந்த நபர் இரட்சிக்கப்பட வேண்டும், இவன் இழக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புதவனால் அல்ல. ஆனால் யார் இழக்கப்படுவார், யார் இரட்சிக்கப்படுவார் என்று அவர் முன் கூட்டியே அறிந்திருந்தார். பாருங்கள்? எனவே அவருடைய முன்னறிவின்படி அவரால் முன் குறிக்க முடிகிறது. அவர் எல்லாவற்றையுமே தமது மகிமைக்காக கிரியை செய்யும்படி பண்ணுகிறார். அது தான் அவருடைய தன்மைகள், இப்பொழுது கிரியை செய்து கொண்டிருக்கின்றன, அவருடைய மகிமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஒன்று கனமான பாத்திரம், மற்றொன்று கனவீனமான பாத்திரம். ஆனால் தேவனே அவைகளை உண்டாக்குகிறவர். "விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.” புரிகிறதா? 125 இயேசு, "என் பிதா ஒருவனே இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்" என்று இயேசு கூறினார். “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும்” இறந்தகாலம், "வார்த்தையாகிய என்னிடத்தில் வரும். அவர்கள் வருவதற்கு முன் கூட்டியே நியமிக்கப்படாமல் போனால், அவர்களால் எப்படி வரமுடியும்? “அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.” பாருங்கள், ஏனெனில் அவர்களுடைய பெயர்கள் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. புத்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்களை மீட்கவே அவர் வந்தார். 126 வெளிப்படுத்தின விசேஷத்தில் முத்திரைகள் திறக்கப்பட்ட போது, ஒரு புத்தகம் இருந்ததாக நாம் காண்கிறோம். சிங்காசனத்தில் வீற்றிருந்தவர், தேவன் அதை தமது வலது கரத்தில் பிடித்திருந்தார். வானத்திலாவது பூமியிலாவது அல்லது வேறெங்காவது ஒருவனும் அந்தப் புத்தகத்தை வாங்கவும் அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது. யோவான் மிகவும் அழுதான். ஏனெனில் மீட்பின் முழு புத்தகம் அங்கிருந்தது. 127 அன்றொரு இரவு நடந்த கூட்டத்தின் போது அசெம்பிளி ஆப் காட் சபையைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும், "எல்லா தேசங்களும் ஒன்றாக கூடினபோது, யோவான் என்னைக் கண்டானா என்று வியக்கிறேன். அவன் என்னைக் கண்டானா?" என்னும் பாடலைப் பாடினர். உங்கள் பெயர் அந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தால், அவன் நிச்சயம் உங்களைக் கண்டிருப்பான். 128 யோவானின் பெயரும் அதில் எழுதப்பட்டிருந்தது. அதைத் தொடவும் யாரும் பாத்திரவானாகக் காணப்படாததினால் யோவான் மிகவும் அழுதான். அப்பொழுது மூப்பர்களில் ஒருவன், “யோவானே, நீ அழ வேண்டாம். யூதா கோத்திரத்துச் சிங்கம் ஜெயங்கொண்டிருக்கிறார்" என்றான். 129 சிங்கத்தைக் காண யோவான் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்த போது, திரைக்குப் பின்னாலிருந்து ஒரு ஆட்டுக் குட்டி வந்தது. அந்த ஆட்டுக்குட்டி உலகத்தோற்றத்திற்கு முன்னமே அடிக்கப்பட்டதாயிருந்தது. அப்பொழுது அவன் இரத்தம் தோய்ந்த ஆட்டுக்குட்டி வெளியே வருவதைக் கண்டான். அந்த ஆட்டுக் குட்டியானவர் வந்து சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தவருடைய வலது கரத்திலிருந்த புத்தகத்தை வாங்கி, அந்த புத்தகத்திலிருந்த அனைவரையும் அழைத்தார். அது மீட்பின் முழு புத்தகம். இது தான் அது. மீட்பின் புத்தகம், அந்த புத்தகத்தில் பெயரெழுதப்பட்டிருந்த அனைவரையும் அவர் மீட்டார், புத்தகத்தில் எழுதப்படாமல் வெளியே இருப்பவரை அல்ல. துவக்கம் உள்ள எதற்கும் ஒரு முடிவு உண்டு. ஆனால் உங்களுக்கு நித்திய ஜீவன் இருக்குமானால், நீங்கள் ஒருபோதும் துவங்கவுமில்லை , உங்களுக்கு முடிவும் இருக்க முடியாது. ஏனெனில் நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய், அவருடைய சிந்தனைகளின் அவருடைய வார்த்தையின் தன்மைகளாக இருக்கிறீர்கள். உங்கள் பெயர் அந்த புத்தகத்தில் இருந்தால், உங்களுக்கு ஜீவனின் முடிவே கிடையாது. அவர்களை மீட்கவே ஆட்டுக்குட்டியானவர் வந்தார். "கிறிஸ்தவர்கள்" என்று கூறிக்கொள்கிற எல்லோரையும் அல்ல, நல்லவிதமாக மற்றும் பரிசுத்தமாக ஜீவிக்க முயற்சிக்கிற எல்லாரையும் அல்ல, ஆனால் அந்த புத்தகத்தில் பெயரெழுதப்படிருந்தவர்களை, அவர்களை மாத்திரமே அவர் மீட்டுக் கொண்டார். 130 இப்பொழுது அந்த ஒரு வார்த்தையில் தவறியதன் மூலம், ஆதாமின் வீழ்ச்சிக்கு சாத்தான் காரணமாயிருந்தான் என்பதை நாம் கண்டறிகிறோம். இப்பொழுது, தேவன் தொடர்ந்து நமது சிருஷ்டிப்பில், ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைக்கும் ஒரு மனிதனைக் கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அவருடைய முதல் மனிதன் தவறினான். இந்த ஆதாம் தன் காலத்தில், அவனுடைய காலத்தில் வாழ்ந்து வந்தவன். 131 இப்பொழுது, பாருங்கள், துவக்க முதல் வழிவழியாக வெவ்வேறு காலங்கள் இருக்குமென்று தேவன் தீர்க்கதரிசினம் உரைத்திருந்தார். அவரால் துவக்க முதல் முடிவு வரையிலும் என்ன நடக்குமென்று கூறமுடியும். ஏனெனில் அவர் சகலத்தையும் அறிந்திருக்கிறார். அவர் சகலத்தையும் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு, அவருக்காக அவருடைய சித்தத்தின்படி உண்டாக்கினார். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இதைத் தவறவிட வேண்டாம். 132 மோசே நோவாவின் செய்தியைக் கொண்டு வந்திருந்தால் எப்படியிருக்கும்? அது கிரியை செய்திருக்காது. முடியாது. இல்லை . 133 இயேசு மோசேயின் செய்தியைக் கொண்டு வந்திருந்தால் எப்படியிருக்கும்? அது கிரியை செய்திருக்காது. 134 நாம் மெதோடிஸ்டு செய்தி, பாப்டிஸ்டு செய்தி அல்லது பெந்தேகோஸ்தே செய்தியைக் கொண்டு வந்திருந்தால் எப்படி இருக்கும்? அது கிரியை செய்யாது. அவை நல்ல செய்திகளே. இன்னும் ஒரு நிமிடத்தில் வார்த்தையைக் கொண்டு அதை நிரூபிக்கலாம். அவைகளுடைய காலத்தில் அவை நல்லவைகளாக இருந்தன. ஆனால் அந்த காலம் கடந்து விட்டது. இன்றைய காலத்துக்கு வேதம் என்ன சொல்கிறது என்பதை நாம் கண்டறிய வேண்டும் இந்த நாளுக்கு, அதைக் கொண்டுதான் மனிதன் அவன் காலத்தில் வாழவேண்டும். முழு வார்த்தையைக் கொண்டு பிழைக்கும் ஒரு மனிதனை அவர் கண்டுபிடிக்க முயன்றார். 135 அவர் செய்த முதல் காரியம் , அவர் நோவாவை பரிசோதித்தார். நோவா அவரிடத்தில் தவறிப்போனான். அவன் குடித்து வெறித்து தவறினான். 136 தேவனுடைய மகத்தான , பராக்கிரமனான அந்த சிறந்த வேலைப்பாடாக அமைந்திருந்த மோசேயை அவர் பரிசோதித்தார். அவனும் தவறினான். அவன் தன்னை மகிமைப்படுத்திக் கொண்ட காரணத்தால், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிக்க அவன் அனுமதிக்கப்படவில்லை . 137 அதன்பிறகு அவரைப் பிரதிபலித்து காண்பிக்கும் தாவீது தோன்றினான். தாவீதில் அவருடைய அவருடைய மகத்தான ஆயிரம் வருட அரசாட்சியில் அவருடைய ராஜா எப்படி இருப்பார் என்பதை அவர் காண்பித்துக் கொண்டிருந்தார். அவனுடைய சிங்காசனத்தில் உட்கார அவனுடைய குமாரனை எழுப்புவதாக தேவன் தாவீதின் மேல் ஆணையிட்டார். தாவீது மிகவும் வீரமுள்ளவன். அவன் தேவனுடைய இருதயத்துக்கு ஏற்றவனாயிருந்தான். அவன் நன்மையானவைகளை செய்து கொண்டிருந்தான். அவன் எல்லா பெலிஸ்தியரையும் முறியடித்து, பீடங்களை தகர்த்து, வார்த்தையில் நிலைத்திருந்தான். முடிவில் ஒரு அழகான ஸ்திரீ அவனை நிலை குலையச் செய்தாள். அவன் கற்பனையை மீறி, வார்த்தையை இழந்து, விபச்சாரம் செய்தான். பார்த்தீர்களா? தாவீது தேவனுடைய இருதயத்துக்கு ஏற்றவனாயிருந்தும் அவருக்கு தவறிழைத்தான், பாருங்கள். 138 மோசே அவருக்கு தவறிழைத்தான், மற்றவர் அனைவரும் அவருக்கு தவறிழைத்தனர். ஆனால் அவர்களுடைய வாழ்க்கை அனைத்தும் வரப்போகும் ஒருவரை பிரதிபலித்து காண்பித்தன. 139 வெளிப்படுத்தின விசேஷத்தின் விரிவுரைகளை நான் எழுதும்போது, வேறொருவர் அதை இலக்கண ரீதியாக அமைத்துக் கொண்டிருக்கிறார். என்னுடைய இலக்கணம் மிகவும் சரியில்லாமல் இருக்கிறது. அதை நல்ல இலக்கண ரீதியில் பெயர் சொற்களையும் பிரதி பெயர் சொற்களையும், சரியான இடங்களில் பொருத்த ஒரு வேத பண்டிதர் எனக்குண்டு. எனக்கு ஒரு பெயர் சொல்லுக்கும், பிரதி பெயர் சொல்லுக்கும் வித்தியாசம் தெரியாது. ஆனால் அவருக்குத் தெரியும். அவர் அதை இலக்கண ரீதியாக அமைத்துக் கொண்டிருக்கிறார். எனக்குத் தெரிந்த, நான் அறிந்த ஒரேக் காரியம் தேவன் அதை எனக்கு அளிக்கிறார், அதை நான் எழுதிக் கொள்கிறேன். பாருங்கள். அவை வேத பள்ளிகளுக்கும் மற்றவிடங்களுக்கும் சென்றால் அவர்கள் தங்கள் வழியில் அதைப் படித்து புரிந்து கொள்ள வேண்டுமெனக் கருதியே அது இவ்வாறு அமைக்கப்படுகிறது. அதை இலக்கண வடிவில் எழுதிக் கொண்டிருக்கும் அந்த எழுத்தாளர் என்னிடத்தில் கூறினார், அந்த மனிதன் என்னிடத்தில், "சகோதரன் பிரான்ஹாமே, பெர்கமு சபையின் காலத்தில் இயேசு, 'ஜெயங்கொள்கிறவனுக்கு விடிவெள்ளி நட்சத்திரத்தைக் கொடுப்பேன்' என்று இங்கே கூறியிருக்க, அவனுக்கு விடிவெள்ளி நட்சத்திரத்தைக் கொடுப்பாரா?" என்று கேட்டார்? மேலும் அவர், "இயேசு தம்மையே விடிவெள்ளி நட்சத்திரம் என்று அழைத்திருக்க, அவன் எப்படி விடிவெள்ளி நட்சத்திரத்தைப் பெறுவான்?" என்று கேட்டார். 140 பாருங்கள், ஆபிரகாமின் சந்ததியார் அனைவரும் நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர். ஆனால் நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் வித்தியாசமுள்ளது. நாம் ஒருவருக்கொருவர் , வித்தியாசமாயிருக்கிறோம். இயேசுவே எல்லாரைக் காட்டிலும் மிகப் பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரம். ஆனால் வெளிப்படுத்தல் 1-ம் அதிகாரத்தில் அவர் தமது வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருப்பதாக நாம் காண்கிறோம். "அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின், வரப்போகும் ஏழு சபை காலங்களின் தூதர்கள்" என்று அவர் அர்த்தம் உரைக்கிறார். 141 எனவே அவர், "அப்படியானால் அவர்கள் எப்படி விடிவெள்ளி நட்சத்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்?” என்று கேட்டார். 142 அதற்கு நான், "அவருடைய கரத்திலுள்ள நட்சத்திரங்கள், விடிவெள்ளி நட்சத்திரத்தின் ஒளியைப் பிரதிபலிக்கும் நட்சத்திரங்களாய் மாத்திரம் இருந்தன, பாருங்கள், அந்தந்த காலத்தின் தூதன் வார்த்தையைக் கொண்டிருந்தான்" என்றேன். அவர் வார்த்தையாயிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு தூதனும் அவனுடைய காலத்துக்குரிய வார்த்தையின் பாகத்தைப் பெற்றிருந்தான். உலக முறைமைகளிலிருந்தும் உலக காரியங்களிலிருந்தும் பிரிந்து வந்து அவரோடு நடக்க ஆயத்தமாயிருந்த ஜனங்கள், அக்காலத்து தூதனின் மூலம் விடிவெள்ளி நட்சத்திரம் பிரதிபலிப்பதை காண்கின்றனர். அவர் நோவாவின் மூலம், மோசேயின் மூலம் பழை ஏற்பாட்டை பிரதிபலித்ததுபோல் அவர்கள் அனைவரும் ஒருவரில் முடிவடைந்தனர். அவ்வாறே சபை காலங்களின் முடிவிலும், அது இயேசுவில் திரும்பவும் முடிவடையும், அதாவது அவர் வார்த்தையாயிருக்கிறார். 143 நாம் கிறிஸ்தவர்கள் என்னும் முறையில் அவரை மாத்திரமே பிரதிபலிக்கிறோம். சூரியன் இல்லாதபோது சந்திரன் அதை பிரதிபலிக்கிறது. அவ்வாறே தேவனுடைய குமாரன் இல்லாதபோது, விசுவாசி அவரையே பிரதிபலிக்கிறான். அது வேதாகம ஒளியாயுள்ளது, வேத வாக்கியங்கள், நம்முடைய ஜீவியங்களில் ரூபகாரப்படுத்தப்பட்டு, வார்த்தை இருளில் ஒளியை உண்டாக்குகிறது. நீங்கள் மலையின் மேல் வைக்கப்பட்ட விளக்காய் இருக்கிறீர்கள். அது சூரியன் அல்ல, அது விளக்கு. விளக்கு சூரியனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட அளவு ஒளியைக் கொடுக்கிறது. நாம் தேவனுடைய பிள்ளைகள். நாம் ஒரு குறிப்பிட்ட அளவு ஆவியை மாத்திரம் கொண்ட தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறோம். அவர் அதை அளவில்லாமல் பெற்றிருந்தார். நாம் பிரகாசித்துக் கொண்டிருக்கிற ஒரு நட்சத்திரமாயிருக்கிறோம். நாம் ஒருமித்து உலகிற்கு ஒளியைக் கொடுக்கிறோம். ஆனால் அவர் சூரியனாக ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் தமது ஒளியைக் கொடுக்கிறார். அல்லேலூயா! அவரை நான் விசுவாசிக்கிறேன். என் அவிசுவாசம் நீங்க தேவன் உதவி செய்வாராக! 144 முடிவில் இந்த பரிபூரணமான ஒருவர் தோன்றினார். அவர் தோன்றினபோது, நம்மைப் போல் எல்லா விதத்திலும் சோதிக்கப்பட வேண்டியதாயிருந்தது. அவர் சோதிக்கப்பட்டார் என்று வேதம் உரைத்துள்ளது. அவர் நோவாவைப் போல் சோதிக்கப்பட்டார். அவர் மோசேயைப் போல் சோதிக்கப்பட்டார். அவர் மற்றவர் அனைவரையும் போல் சோதிக்கப்பட்டார். நமக்கு நேரமிருந்தால், அதை விரிவாக உங்களுக்குக் காண்பிக்கலாம். ஆனால் நமக்கு நேரமில்லை. உங்கள் நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. அவர் அதேவிதமாக சோதிக்கப்பட்டார். 145 சாத்தான் தன்னுடைய உபாயங்களை ஒருபோதும் மாற்றிக் கொள்வதில்லை. தேவனும் அவ்வாறே தமது வழி முறைகளை மாற்றிக் கொள்வதில்லை. காலங்கள் மாத்திரமே மாறுகின்றன. ஆனால் என்ன... சாத்தான் பூமியிலிருந்த தேவனின் முதல் குடும்பத்தில் நுழைந்தான். சகோதரனே, சகோதரியே, இங்கேதான் காரியமே உள்ளது. இதைப் புரிந்துகொள்ள தவற வேண்டாம். சாத்தன் எப்படி முதல் குடும்பத்தில் நுழைந்தான். அவர்களை வார்த்தையை மீறச் செய்வதன் மூலமாக உள்ளே நுழைய முடிந்ததேயன்றி, வேறு வழியில் அவனால் நுழைய முடியவில்லை. ஏனெனில் அவர்கள் வார்த்தைக்குப் பின்னால் அரணாக்கப்பட்டிருந்தனர். அவனுக்கு மாத்திரம் நுழைவதற்கு சிறு இடம் கிடைத்திருந்தால்! 146 அவன் அப்படித்தான் ஒவ்வொரு காலத்திலிருந்த ஒவ்வொரு சபையிலும் ஒவ்வொரு விசுவாசியிலும் அந்த சிறு இடத்தை பயன்படுத்தி நுழைந்தான். "வேதம் உண்மையென்று நான் நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நான் அதை விசுவாசிக்கிறதில்லை .” ஓ, அவன் அங்கு நுழைந்து விடுவான். அது மிக மோசமானது. ஆனால் அவன் அங்கு சென்று நுழைந்தான். “தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்” 147 இதை இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். தோன்ற வேண்டிய இந்த ஒருவர் முடிவில் தோன்றி அவரும் மற்றவர்களைப் போல் சோதிக்கப்பட் வேண்டியதாயிருந்தது. ஒவ்வொரு முறையும் சாத்தான் தன் தாக்குதல்களில் எவ்வளவு மும்முரமாக ஈடுபட்டான் என்பதை இப்பொழுது கவனியுங்கள். அவன் ஏவாளுக்குச் செய்தது போல அவருக்கும் இயற்கை அப்பத்தைக் கொடுக்க முயன்றான். "நீர் இதைப் புசித்தால், இதை ஏற்றுக் கொண்டால், அல்லது அதுபோன்ற ஏதோ ஒன்றை அவன் கூறினான். 148 அதைத்தான் அவன் ஒவ்வொரு ஸ்தாபனத்துக்கும் செய்கிறான், அதைத்தான் அவன் தனிப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் செய்கிறான். நீங்கள் காணத்தக்கதான இயற்கையான காரியங்களை உங்களுக்கு அளிக்க அவன் முற்படுகிறான். அது உங்களை தூர கொண்டு செல்கிறது! "இந்த பெரிய சபையைப் பாருங்கள். அவர்கள் கோடிக் கணக்கில் அதில் போட்டிருக்கிறார்கள். நரகத்திலேயே எங்கள் சபைதான் மிகப்பெரிய சபை. நகராண்மைக் கழகத் தலைவர் எங்கள் சபைக்கு வருகிறார். இதையெல்லாம் பாருங்கள்! எங்கள் போதகருக்கு டி.டி.எல்.டி.பிச்.டி போன்ற பட்டங்கள் உள்ளன. அவர் நிச்சயமாக அறிவாளியாக இருக்க வேண்டும்.” ஒரு கத்தோலிக்க குருவானவர் தான் பெற்ற பட்டங்களைக் கொண்டு இவரை எத்தனையோ மடங்கு மிஞ்சி விடுவார். குருவானவராவதற்கு பட்டங்களைப் பெற அவர் அறுபதுக்கும் அதிகமான புத்தகங்களைப் படித்து, உங்களுக்கு வேதம் தெரிந்த அளவுக்கு அப்புத்தகங்களிலுள்ளவைகளை அவர் அறிந்திருக்க வேண்டும். எனவே கல்வித் திறனை ஒப்பிட முயற்சிக்காதீர்கள். 149 எப்பொழுதும் ஒப்பிட்டுப் பார்க்க முயல்வது உலகத்தில் காணப்படுவதைப் போன்றது. உலகத்தின் காரியங்களுடன் ஒப்பிடாதீர்கள். சபைகளோடு ஒப்பிடாதீர்கள். வேதாகமத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்! அதைத்தான் நாம் இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறோம். அது தான் பெந்தேகோஸ்தே சபைகளோடு உள்ள காரியமாயும் உள்ளது. நால்வர் குழுக்கள் பாடுவதிலும், இன்னும் மற்றவைகளிலும், நாம் ஹாலிவுட்டைப் போல் நடந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். ஹாலிவுட் பளபளக்கிறது. ஆனால் சுவிசேஷமோ ஒளிவிட்டு பிரகாசிக்கிறது. பளபளக்கிறதற்கும், ஒளிவிட்டுப் பிரகாசிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. புரிகிறதா? ஹாலிவுட் தன் உடைகளிலும் சிக்கிகள் ரிக்கெட்டாக்கள் இவர்களினாலும் பளபளக்கிறது. ஆனால் தேவன் விசுவாசியின் தாழ்மையில் அவன் எவ்வளவு படிப்பறிவில்லாதவனாயிருந்தபோதிலும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறார். அவர் தாழ்மையில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறார். ஹாலிவுட்டின் பளபளப்பினால் அல்ல. 150 கவனியுங்கள், சாத்தான் தன் பழைய உபாயத்தை இயேசுவின் மேல் உபயோகிக்க முயன்றான். அவன் அதேக் காரியத்தை மோசேக்கு செய்தான். அதேக் காரியத்தை அவன் மற்றவர்களுக்கும் செய்தான். அவன் அதை முயற்ச்சித்தான். அவன் பளபளப்பாயுள்ள பெரிதான ஒன்றை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கருதி அதை உங்கள் மேலும் உபயோகிக்க முயல்வன். 151 நான் கரடிகளையும், மரத்தில் வாழும் கரடி இன மிருகங்களையும், வேட்டையாடுவது என் நினைவுக்கு வருகிறது. நான் எனக்கு... என் தந்தை புகையிலை உபயோகிப்பது வழக்கம். புகையிலையை முறுக்கி அதை சுற்றியிருக்கும் காகிதம் உங்களுக்கு ஞாபகம் உள்ளதா என்று எனக்குத் தெரியாது. நான் அதை எடுத்துக் கொண்டு, துளையுண்டாக்கும் கம்பியினால் ஓடையைச் சுற்றி மரக்கரடி ஓடிக் கொண்டிருக்கும் இடத்தில் அங்கே ஒரு துளையை உண்டாக்கி, இந்த காகிதத்தை அங்கு ஓட்டி விடுவேன். அதை ஆணி அடித்து இந்த விதமாக ஓட்டி விடுவேன். அப்பொழுது மரக்கரடியானது எப்பொழுதுமே பளபளப்பான ஒரு பொருளை அடைய விரும்பும். எனவே நிலா வெளிச்சத்தில் பளபளப்பாக காணப்படும் அந்த காகிதத்தை அடைந்து அதை எடுத்துக் கொள்ள அதன் கையை நீட்டும். அதன் பிடியை அது தளரவிடாது. 152 அது சில சபை அங்கத்தினர்களைப் போன்றது. அது பிடிபட்டு விட்டது என்று அறிந்த போதிலும், அதன் பிடியை அது தளர்த்தாது. "நான் அப்படி செய்தால், அவர்கள் என்னை ஸ்தாபனத்தினின்று வெளியேற்றி விடுவார்கள். அது அவருடைய மரணம், அவ்வளவு தான். சரி. கவனியுங்கள். மரகரடியோ அதனை இறுகப்பிடித்துக் கொண்டு அதன் பிடியை விடுவதில்லை. 153 இப்பொழுது, சாத்தான் மற்றவர்களிடம் கையாண்ட தன்னுடைய அதே உபாயத்தை இயேசுவினிடத்தில் கையாட முயன்றான். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை அப்பத்தைத் தவிர வேறெதையோ அவரை புசிக்கச் செய்ய அவன் முயன்றான்: ஆனால் இயேசுவோ, "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல... என்று எழுதியிருக்கிறது” என்றார். பாருங்கள்? அவர் அவனுக்குக் கீழ்ப்படியச் செய்யும்படி சாத்தான் முயன்றான். அது நல்லதாக தென்பட்ட போதிலும், அவர் அவரைப் போஷித்துக் கொள்ள முடியுமென்று காணப்பட்ட போதிலும்; வேண்டுமானால், அவர் அப்படி செய்திருக்க முடியும். நீங்கள்... 154 நீங்களும் கூட உங்களுக்கு விருப்பமான வழியில் நடந்து கொள்ள முடியும். நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளலாம், அல்லது விட்டுவிடலாம். நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அந்த மரக்கரடிக்கு போதிய புத்தி இருந்திருந்தால், அது தன் கைகளை மூடி அதை இழுத்துக் கொண்டிருக்கும். ஆனால் அது அப்படி செய்யாது. அது அங்கேயே இறுகிப் பற்றிக் கொண்டு நிலைத்திருக்கும். அப்படித்தான் அநேக பெயர் கிறிஸ்தவர்களும் செய்கின்றனர். அவர்களுக்கு இதைக் குறித்து எதையும் கேட்க விருப்பமில்லை, அவர்கள் வந்து இதை கேட்க விரும்புவதில்லை, அவர்களுக்கு இது ஒன்றும் வேண்டாம். அப்படியானால் நீங்கள் சென்று, மற்றதை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள், பாருங்கள், பிறகு என்ன சம்பவிக்கிறது என்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள். 155 இப்பொழுது கவனியுங்கள், ஒவ்வொரு மனிதனையும் பிழைக்கச் செய்யும் ஜீவ அப்பத்தைத் தவிர வேறெதையோ அவரைப் புசிக்கச் செய்ய அவன் முயன்றான். ஆனால் இயேசுவோ பிதாவின் வார்த்தையில் நிலைத்திருந்தார். ஓ, அவன் ஏவாளை தாக்கவில்லை. அவன் மோசேயை ஒரு போதும் தாக்கவில்லை. அவன் மற்றவர்களைத் தாக்கவில்லை. அவன் ஒவ்வொரு வார்த்தையும் பிரதிபலிக்கப் போகும் அந்த ஒருவரைத் தாக்கினான். பாருங்கள். அவர் வார்த்தை என்னும் காரணத்தால் அவன் அப்படி செய்தான். ஆனால் இயேசுவோ அவனுடைய வேத சாஸ்திர உபதேசங்களை ஏற்றுக் கொள்ள மறுத்து, வார்த்தையில் நிலைநின்றார். ஆம், ஐயா, அவனுடைய புது வெளிச்சம், அவனுடைய அதிகமான அனுபவம். அவன் ஏவாளின் மேல் அதைத் திணித்து, "ஓ, நிச்சயமாகவே, தேவன்..." என்று கூறினது போல் இயேசுவின் மேல் திணிக்க முடியவில்லை. 156 "நாம் அனைவரும் ஒன்று கூடி உலக சபைகளின் ஆலோசனை சங்கம் ஒன்று நிறுவினால், ஓ நிச்சயமாக தேவன் அதில் இருப்பார். நிச்சயமாகவே தேவன் அதில் இருப்பார். அவர் ஒற்றுமையை விரும்புகிறார், அவர் சகோதரத்துவத்தையும் விரும்புகிறார்.” அவரோடு இருக்க வேண்டுமேயன்றி, உலகத்துடன் அல்ல. அவருடன் சகோதரத்துவம் கொண்டிருந்து, அவரைத் தொழுது கொள்ள வேண்டும். அதற்காகவே அவர் மரித்தார், அதாவது நீங்கள் அவரை தொழுது கொள்ள வேண்டும். எப்பொழுதும் போல, அவனால் முடியவில்லை ... அவன் இயேசுவிடம் தோல்வியடைந்தான் என்று இப்பொழுது நாம் காண்கிறோம். இயேசு, "கர்த்தர் உரைக்கிறதாவது” என்பதுடன் அவனிடம் திரும்பிச் சென்றார். 157 அவன் ஒரு விசுவாசியைக் காணும்போது... விசுவாசிகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இதே விதமாக சோதிக்கப்படுவதைக் கவனியுங்கள். நீங்கள் வேதத்தில் நிலைத்திருக்கிறீர்கள் என்பதை அவன் (அவன்) காணும்போது, நீங்கள், "ஆம். நான் வேதத்தை விசுவாசிக்கிறேன். நான் எந்த கோட்பாட்டையும் பின்பற்றி அதில் சேர்ந்து கொள்ளப் போவதில்லை, நான் வேதத்தில் நிலைத்திருக்கப் போகின்றேன்” என்று கூறுகிறீர்கள். உண்மையான சத்தியத்திலிருந்தும், வார்த்தையை விசுவாசிப்பதிலிருந்தும் அவன் உங்களை விலக்க முடியாவிட்டால், இரண்டாம் முறை அவன் இயேசுவுக்கு என்ன செய்தான் என்பதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். அவனால் உங்களை விலக்க முடியாவிட்டால், நீங்கள், "நான் எந்த கோட்பாட்டையும் சேர மாட்டேன். நான் எதிலும் சேரப்போவதில்லை . நான் சுயாதீனமாக பிறந்தவன். நான் வார்த்தையில் நிலைத்திருக்கப் போகிறேன். நான் இதை அதை, மற்றதை செய்யப்போகிறேன்” என்று கூறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பாருங்கள். “சபையை சேர்ந்து கொள்ளுங்கள்" "நீங்கள் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்" என்கிறான். அது போன்று மற்ற ஏதோ ஒன்றைச் செய்கிறான்; அவனால் உங்களுக்கு அதைச் செய்ய முடியவில்லையென்றால், பின்னர் அவன் உங்களுக்கு வேறெதையாகிலும் செய்வான். ஓ, சகோதரனே, இதை கவனியுங்கள். 158 அவன் அதைச் செய்யவில்லையென்றால், அப்பொழுது அவன் உங்களை சொந்த வேத சாஸ்திர பள்ளிக்கு அனுப்பி, அவனுடைய சொந்த வேத சாஸ்திரிகளைக் கொண்டு நீங்கள் கற்பிக்கப்படும்படிக்கு செய்துவிடுவான். பாருங்கள். அங்கு சாத்தானின் வியாக்கியானியோ, "ஓ, அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன. அங்குள்ள கூட்ட ஜனங்கள் மதபேதமுள்ளவர்கள். இவர்களோ அப்படியில்லை . பாருங்கள்,'' என்பான். அவன் உங்களை அங்கு அனுப்பி விடுவான். 159 ஓ, நீங்கள், "சகோ.பிரான்ஹாமே, ஒரு நிமிடம் பொறும், ஒரு நிமிடம்” எனலாம். ஆம், நாம் ஒரு நிமிடம் பொறுப்போம், பாருங்கள். நீங்களோ இப்பொழுது, "நீங்கள் இனிமேல் செய்யக்கூடாது அல்லவா? நாம் செய்யக் கூடாதல்லவா?" எனலாம். அப்படி இல்லை , ஐயா. இல்லை , ஐயா .... 160 ஆனால், இயேசு, "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, பாருங்கள், நான் உங்களுக்குப் போதித்த வார்த்தையை அவர் உங்கள் ஞாபகத்துக்குக் கொண்டு வந்து, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்” என்றார். அதுவே ஆவியினால் நிறையப்பட்ட ஒரு உண்மையான சபை. அது வார்த்தையோடு நிலைத்திருந்து, வார்த்தையை, தேவனை பூமியில் பிரதிபலிக்கும். புரிகிறதா? அவருக்கு எந்த வேத பண்டிதனும் அவசியமில்லை , ஏனென்றால் அவருடைய வார்த்தையை ரூபகாரப்படுத்தி, அது சத்தியம் என்று நிரூபிப்பதன் மூலம் அவர் தம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கியானிக்கிறார். 161 மெதோடிஸ்டு சபையானது, பெந்தோகொஸ்தே நாளிலிருந்த அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டது போல் நீங்கள் பெற முடியாது என்று உங்களிடம் கூறினபோது, நீங்கள் அதற்கு கவனம் செலுத்தினீர்களா? நிச்சயமாக இல்லை. நீங்கள் முன் சென்று எப்படியும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டீர்கள். பாருங்கள்? ஏனெனில் 162 நான் திரித்துவத்தைக் குறித்து அன்றொரு இரவு ஒரு பாப்டிஸ்டு போதகரிடம் பேசிக் கொண்டிருந்தேன். நான் அவரிடம் அது ஒரு சொல்லியலாய் மாத்திரமே இருந்தது என்றேன். எனவே நாம் கண்டறிவது என்னவென்றால், அதாவது அவருடன் கூட வேதாகமப் பள்ளியிலிருந்த வேறெரு போதகர், அவர் "திரு. பிரான்ஹாமே, நீர் ஜனங்களை அப்போஸ்தல மார்க்கத்தில் நம்பிக்கை கொள்ளும்படி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்றார். நான் "நிச்சயமாக, அந்த ஒரு மார்க்கம் மாத்திரமே உள்ளது.” என்று விடையளித்தேன். அவர், “ஐயா, நீர் எந்த பள்ளிக்குச் சென்றீர்?” என்று கேட்டார். 163 நான், "என் முழங்காலில், என் சகோதரனே, வேறெங்கும் இல்லை... பார். அங்கு தான் நான் பெற்றுக் கொண்டேன். இறையியலில் அல்ல, முழங்காலியலில் தான்." என்றேன். மேலும் நான், "அங்குதான் அவரை நான் கண்டு கொண்டேன்" என்றேன். 164 அவர், "திரு. பிரான்ஹாமே, பெந்தெகொஸ்தே நாளில் அவர்கள் பெற்றுக் கொண்ட பரிசுத்தாவியின் அபிஷேகத்தைப்போல் இன்றைக்கும் பெற்றுக் கொள்ள முடியும் என்று கூற நீர் முயற்சிக்கிறீரா?" என்று கேட்டார். 165 நான், "ஐயா, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேதம் உரைக்கிறது” என்றேன். மேலும் நான், “அது பெந்தேகொள்தே நாளில் வந்த இயேசு” என்றேன். ஓ, ஆமாம். 166 அது அவரேதான். "இன்னும் கொஞ்ச காலத்தில், நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன். அப்பொழுது பரிசுத்த ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் உங்களுடனே வாசம்பண்ணி, உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுக்குள்ளே இருப்பேன்" 167 நான், "ஆம், பெந்தெகொஸ்தே நாளில் வந்தவர் அவரே. ஆம் ஐயா. அவர் வந்து, அவர்களுக்குள் வாசம் செய்தார், கவனியுங்கள் பரிசுத்த ஆவியின் நபரின் ரூபத்தில் வாசம் செய்தார், நாங்கள் தேவத்துவத்தை புரிந்து கொண்டுள்ளபடி, இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவி என்னும் நபராக வந்தார்" என்றேன். 168 இப்பொழுது கவனியுங்கள், சாத்தனுக்கு அவனுடைய வேத சாஸ்திரம், இறையியல் அவசியமில்லை . இந்த மனிதர் என்னிடம், "திரு. பிரான்ஹாமே, நான் ஒரு குறிப்பிட்ட வேதாகமப் பள்ளியில் படித்தவன் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம்” என்றார். நான், "உங்கள் நிகழ்ச்சியை நான் எப்பொழுதும் கேட்கிறேன்" என்றேன். பாருங்கள்? அவர், "நாங்கள் அங்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம்" என்றார். மேலும், "அவர்களுடைய பரிசுத்த ஆவியின் அபிஷேகம் சீஷர்களுக்கு மாத்திரமே " என்றார். 169 அப்பொழுது நான், "மேலறையில் நூற்றிருபது பேர் இருந்ததாக வேதம் உரைக்கிறது” என்றேன். மேலும் நான், "அப்படியானால் யார் சரி, நீங்களா, வார்த்தையா?” என்று கேட்டேன். 170 நான் தொடர்ந்து, "மேலும் பிலிப்பு சமாரியர்களிடத்தில் பிரசங்கம் செய்து, அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்த போது, பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வரவில்லை. ஏனெனில் பேதுரு திறவுகோல்களை வைத்திருந்தான். எனவே அவன் எருசலேமுக்கு ஆள் அனுப்பி, பேதுருவை வரவழைத்தான். பேதுரு அவர்கள் மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார். வேதம் 'பரிசுத்த ஆவி' என்று கூறுகிறது” என்றேன். 171 நான் மேலும், "திறவு கோல்களை வைத்திருந்த பேதுரு ஒரு தரிசனம் கண்டு, கொர்நேலியுவின் வீட்டிற்கு சென்றான். அப்போஸ்தலர் 10, நாற்பத்து ஒன்பது. இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக் கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தீர்க்கதரிசனம் சொல்லுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும் பேதுருவோடு கூட வந்திருந்த விசுவாசிகள் கேட்டு பிரமிப்படைந்தார்கள். அப்பொழுது பேதுரு: நம்மைப் போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டான்'' என்று கூறினேன். 172 முப்பது ஆண்டுகள் கழித்து பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய் எபேசுவுக்கு வந்த போது, பாப்டிஸ்டு மக்கள் பெரிய எழுப்புதல் கூட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருப்பதைக் கண்டான். பெரிய அற்புதங்கள் அங்கு நடந்து கொண்டிருந்தன. அவர்கள் சத்தமிட்டு கர்த்தரைத் துதித்துக் கொண்டிருந்தனர். ஏறக்குறைய இருபது பேர் பங்கு கொண்ட ஒரு சபைக்கு பவுல் விஜயம் செய்தான். அங்கு ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் வந்து கலந்து கொண்டனர். அப்பொல்லோ என்னும் இரட்சிக்கப்பட்ட வழக்கறிஞர் ஒருவன் இயேசுவே கிறிஸ்து என்று வேதத்தின் வாயிலாக நிரூபித்துக் கொண்டிருந்தான். அவர்கள் ஒரு மகத்தான சந்தோஷத்தையும், ஒரு மகத்தான கூட்டத்தையும் உடையவர்களாய் இருந்தனர். பவுல் அந்த வழியாய் நடந்து வந்தான். கர்த்தர் அவனை சிறைச்சாலையிலிருந்து விடுவித்தார். குறி சொல்லும் ஒரு பெண்ணிலிருந்த அசுத்த ஆவியை அவன் துரத்தின காரணத்தால் சிறையில் அடைக்கப்பட்டான். அவன் தேவனுடைய ஊழியத்தினிமித்தம் அந்த வழியாய் வந்தபோது, அந்த கூட்டத்துக்கு சென்றான். அப்பொழுது அவன், "நீ பெரிய மனிதன் என்று ஒத்துக் கொள்கிறேன், சரி, ஆனால் நீ விசுவாசியான பிறகு, பரிசுத்தாவியைப் பெற்றுக்கொண்டாயா?" என்று கேட்டான். நீங்கள் விசுவாசித்தபோதே, நீங்கள் அதைப் பெற்றுக்கொண்டீர்கள் என்று அவன் விசுவாசித்தான். ஆனால் அவனோ, 'நீ விசுவாசியான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டாயா?” என்று கேட்டான். அதற்கு அவன், 'பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை' என்றான். 173 "பவுல், 'அப்படியானால் நீ எந்த ஞானஸ்நானம் பெற்றாய்?' என்றான். அது தான் கேள்வியாயிருந்தது. அதற்கு அவன், 'இயேசுவுக்கு ஞானஸ்நானங் கொடுத்த யோவான் என்ற அதே மனிதனால் நாங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். நாங்கள் யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தேயே பெற்றுள்ளோம்' என்றான். பாருங்கள்? அப்பொழுது பவுல், 'யோவான் மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தான், பாவ மன்னிப்புக்கு அல்ல. ஏனெனில் ஆட்டுக்குட்டியானவர் அப்பொழுது அடிக்கப்படவில்லை. எனவே 'யோவான் தனக்குப் பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் நீங்கள் விசுவாசிகளாயிருக்க வேண்டுமென்று சொல்லி மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தான்' என்றான். அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். அல்லாமலும் பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்த போது, பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நிய பாஷை பேசி தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். இது முப்பது ஆண்டுகள் கழித்து சம்பவித்தது” என்றேன். நான், "மேலும் நீங்கள் வேதத்தை விசுவாசிக்கிறீர்களா?" என்று கேட்டேன். அவர், "நிச்சயமாக" என்றார். 174 நான், "பெந்தெகோஸ்தே நாளில் பேதுரு ; அந்த சத்தம் உண்டான போது, அவர்கள் எல்லோரும் உரத்த சத்தமாய் தேவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள், 'புருஷர்களே, சகோதரரே, நாங்கள் இரட்சிக்கப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டனர். அப்பொழுது பேதுரு, நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கு, உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கிற தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது. என்றான். வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் அந்த வார்த்தை ஒருக்காலும் ஒழிந்து போவதில்லை" என்றான். 175 பெந்தெகொஸ்தேயினராகிய நீங்கள் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு அல்லது பிரஸ் பிடேரியனுக்கு கவனம் செலுத்தவில்லை . அது ஒவ்வொரு காலத்துக்கும் அளிக்கப்பட்டதென்று நீங்கள் அறிந்து நீங்கள் அதை ஏற்றுக் கொண்டீர்கள். நிச்சயமாக, ஆனால் நீங்கள் இப்பொழுது அத்துடன் நின்றுவிடக் கூடாது. அப்படியே தொடர்ந்து முன்னேறிக்கொண்டே செல்ல வேண்டும், பாருங்கள். 176 அங்குதான் மெதோடிஸ்டுகள் தங்களுடைய தவறை செய்தனர். அவர்கள் பரிசுத்தமாக்கப்படுதல் வரைக்கும் முன்னேறி, அத்துடன் நின்று விட்டனர். லூத்தரன்கள் நீதிமானாக்கப்படுதலை ஏற்றுக் கொண்டு நின்று விட்டனர். பாருங்கள், அதன் பிறகு அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு அங்கேயே மரித்து விடுகின்றனர். அது தான் அதன் முடிவு. 177 நாம் வேகமாக செல்லும் நேரத்தில் இப்பொழுது இதைக் கவனியுங்கள். "சத்திய ஆவியாகிய அவர் வரும் போது, அவர் நான் போதித்த எல்லாவற்றையும் உங்களுக்கு போதித்து, ஒ, என்னே, "அவைகளை எல்லாம் உங்களுக்கு நினைப்பூட்டி, நான் உங்களுக்கு கூறியிருக்கிற எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டி, வரப்போகும் காரியங்களையும் உங்களுக்கு அறிவிப்பார். அவர் ஒவ்வொரு வார்த்தையையும் ரூபகாரப்படுத்தி, அந்த வார்த்தையை அடையாளங்கள் பின்தொடர்வதோடு அதை நிரூபிப்பார். அவர் வாக்களித்த ஒவ்வொரு காரியமும், அதாவது வேதாகமத்தில் தேவன் வாக்களித்ததை, நீங்கள் ஒவ்வொரு கோட்பாட்டினின்றும், ஒவ்வொரு காரியத்திலிருந்தும், உங்களை விலக்கிக்கொண்டு வார்த்தையை இறுகப் பற்றிக் கொண்டால், தேவன் தமது வார்த்தையைக் கவனித்துக் கொள்ளக்கடமைப்பட்டவராயிருக்கிறார். நீங்கள் அப்படி செய்யும் போது, வார்த்தை தன்னைத் தானே ரூபகாரப்படுத்துகிறது. 178 அப்பொழுது அவன், "நல்லது, அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன்” என்று யாரிடமும் கூற வேண்டியிராது. 179 ஒரு காலத்தில் குருடனாயிருந்த என்னிடம் அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன் என்று யார் கூற முடியும்? அல்லேலூயா. ஒரு முறை நான் படுக்கையில் இருந்தபோது, மூன்று நிமிடங்கள் மாத்திரமே உயிர் வாழ்வேன் என்று மருத்துவர்கள் - எனக்கு அவகாசம் கொடுத்தனர். ஆனால் நான் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அப்படியிருக்க, அவர்கள் வேறுவிதமாக என்னிடம் எப்படி கூற முடியும்? ஒரு காலத்தில் நான் வெது வெதுப்பான சபை அங்கத்தினனாக இருந்தேன். இப்பொழுதோ பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன். தேவனுக்கு எந்த வியாக்கியானியும் அவசியமில்லை. வார்த்தையாகிய ஆவியானவரே அது சத்தியம் என்று வியாக்கியானம் செய்கிறார். ஒரு மனிதன் தைரியமாய் நின்று அதை ஏற்றுக்கொள்வானானால் நலமாயிருக்கும். அவர் தம்முடைய சொந்த வியாக்கியானியாயிருக்கிறார். ஒரு முறை நீங்கள் அவரிடம் அவ்வாறு ஏற்றுக் கொண்டு முயன்று பார்த்து, அது சரியா, அல்லது இல்லையா என்று கண்டு கொள்ளுங்கள். வேறு யார் கூறுவதிலும் கவனம் செலுத்தாதிருங்கள். தேவன் செய்யக்கூறியுள்ளதை மாத்திரம் செய்யுங்கள். 180 "நல்லது, நான் இதை செய்கிறேன்” என்று நீங்கள் கூறலாம். அப்படியானால் மற்றதைக் குறித்தென்ன. ஒவ்வொரு வார்த்தையும் குறித்து என்ன? ஒரு வார்த்தையை பின்பற்றாமலிருப்பது சங்கிலியை முறித்து விடுகிறது. 181 அங்குதான் அந்த சங்கிலியில் சபைகள் எப்பொழுதும் தோல்வியடைகின்றன. அவர்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஒரு பெரிய ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்கின்றனர். இந்த மனிதர்கள் ஒன்று சேருகின்றனர், பரிசுத்த பிதா இன்னார் இன்னார், மற்றும் பண்டிதர் பேராயர் இன்னார் இன்னார். முதலில் உங்களுக்கு நடப்பது என்ன? அங்குதான் காரியம் நீங்கள் அங்கேயே மரித்து விடுகின்றீர்கள். கர்த்தருக்குச் சித்தமானால், இன்னும் சில நிமிடங்களில், நாம் அதை இயற்கையைக் கொண்டும், வார்த்தையைக் கொண்டும் நிரூபிப்போம். 182 "எல்லாவற்றையும் நினைப்பூட்டுவார். அவர் ஒவ்வொரு வார்த்தையையும் ரூபகாரப்படுத்துகிறார். அந்த வார்த்தையினால் நாம் பிழைக்கிறோம். அல்லேலூயா! அதனால் நாம் பிழைக்கிறோம்! "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, ரூபகாரப்படுத்தப்பட்ட ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும். விசுவாசிக்கிறவர்களைத் தொடரும்” என்று இயேசு கூறினார். அதை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்; அது சத்தியம் என்று தேவன் ரூபகாரப்படுத்துகிறார். 183 ஆனால் சாத்தானால் ஊக்குவிக்கப்படும் வேதாகமப்பள்ளிகளும், வேதபண்டிதர்களும், "நீங்கள் அதை விசுவாசிக்கக் கூடாது. அது அப்போஸ்தலர்களுக்கானது. அந்த நாட்கள் கடந்து விட்டன. அப்படிப்பட்ட ஒரு காரியமேக் கிடையாது. அக்காலத்தில் சுவிசேஷத்தை நிரூபிக்க அது அப்போஸ்தலர்களுக்கென்று அளிக்கப்பட்டது. நாம் இன்றைக்கு கல்வியறிவுள்ள ஜனங்களாய் இருக்கிறோம்” என்பார்கள். 184 அக்காலத்திலிருந்தவர்களுக்கு நமக்கு இப்பொழுதுள்ளதைக் காட்டிலும் அதிக கல்வியறிவு இருந்தது. சனகரீம் சங்கத்துடன் ஒப்பிடக் கூடிய ஒரு சபையை எனக்குக் காண்பியுங்கள். அவர்களுடைய முப்பாட்டனார், முப்பாட்டனார், முப்பாட்டனார், முப்பாட்டனார் ஆசாரியர்களாக இருக்க வேண்டும். சுருளில் ஒரு வார்த்தையை கடைபிடிக்க தவறினால், அவர்கள் அவர்கள் அதற்காகக் கல்லெறிந்து கொல்லப்படுவார்கள். அவர்கள் வார்த்தையுடன் அப்படியே நிலைநிற்க வேண்டியதாயிருந்தது. ஆனால் அவர்கள் அந்த வார்த்தைக்கு உள்ளே இருக்கும் ஜீவனைக் காணத்தவறினார். அதன் காரணமாகத்தான் அவர்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டு, "சாத்தானின் ஊழியக்காரர்” என்றழைக்கப்பட்டனர். 185 பாருங்கள், வேத சாஸ்திரபள்ளி மாணாக்கன் ஒருவன் உங்களிடம், "பரிசுத்த ஆவி இந்நாளுக்குரியதல்ல. தெய்வீக சுகமளித்தல் போன்றவை வேறொரு காலத்துக்குரியது" என்று கூறும்போது, அது தேவனுடைய வார்த்தையை பிரதிபலிப்பதாய் இருக்கவில்லை. பாருங்கள். அது தேவனிடத்திலிருந்து வரும் பிரதிபலிப்பாய் இருக்கவில்லை . அது ஒரு-ஒரு கோட்பாட்டிலிருந்து வரும் ஒரு பிரதிபலிப்பாய் உள்ளது. 186 "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று எபி.13:8 உரைத்துள்ளது. "என்னை விசுவாசிக்கிறவன், நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்” என்று பரிசுத்த யோவான் 14:12 உரைத்துள்ளது. இப்பொழுது எப்படி அந்த வார்த்தையை வேதத்திலிருந்து எடுத்துப் போட்டுவிட்டு அந்த இடத்தில் வேறென்றை உங்களால் சேர்க்க முடியும்? அப்படி செய்வீர்களானால், நீங்கள் ஜீவ சங்கிலியை முறித்துவிடுபவர்களாயிருப்பீர்கள். மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமே பிழைப்பான். அவன் இந்த அப்பத்தினால் நித்திய காலமாக பிழைப்பான். மாமிசப் பிரகாரமாகவும் அவன் அப்பத்தினாலே பிழைக்கிறான். இரண்டு விதமான அப்பங்கள் உண்டு. பரிசுத்த ஆவி, உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியே தேவனுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் "ஆமென்” என்று கூறுகிறது, இப்பொழுது அது பரிசுத்த ஆவியாக இருக்குமானால் அவ்வாறு கூறும். இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இப்பொழுது இது ஒரு மனசாட்சியை உணர்த்தும் ஒரு பாகம். 187 நான் ஒரு சிறுவனாயிருந்த போது என் தாயார் எனக்கு ஆமணக்கு எண்ணெய் குடிக்கக் கொடுப்பது வழக்கம். எனக்கு அதன் மணம் இன்று வரைக்கும் பிடிக்கவே பிடிக்காது. பாருங்கள்? நாங்கள் ஏழைகளாக வளர்க்கப்பட்டோம். தாயார் தோல்களை வெந்நீரில் கொதிக்க வைத்து அதிலிருந்து கொழுப்பை எடுப்பார்கள். குட்வின் என்னும் பெயர்கொண்ட ஒரு வயோதிக அம்மாள் இருந்தார்கள். அவர்கள் பன்றி இறைச்சி சமைத்து விற்பார்கள். அங்கிருந்து நாங்கள் தோல்களை எடுத்து வந்து, அதிலிருந்து கொழுப்பை பிரித்தெடுத்து, எங்கள் சோள ரொட்டிகளை சமைத்து உண்போம். நாங்கள் எளிய உணவு உண்டு வந்ததால், எங்களுக்கு உட்டசத்து குறைவாயிருந்து வந்தது. ஆனால் ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் எங்கள் தாயார். நாங்கள் சரியாக உணவு உண்ணாததன் காரணத்தால், அவர்கள் ஒரு பெரிய அளவு ஆமணக்கு எண்ணெய்யை எங்களுக்குக் குடிக்க கொடுப்பார்கள். நான் மூக்கைப்பிடித்துக் கொண்டு, "அம்மா, அது எனக்கு குமட்டல் உண்டாக்குகிறது” என்று அலறுவேன். அப்பொழுது அவர்கள், "அது குமட்டல் உண்டாக்கவில்லையென்றால், அது உனக்கு எந்த நன்மையும் செய்யாது" என்பார்கள். எனவே அந்தவிதமான ஒரு வழியில் இதுவும் கிரியை செய்யலாம். இப்பொழுது எப்படி... 188 நான் உங்களை ஒன்று கேட்க போகிறேன். பரிசுத்த ஆவியினால் நிறைந்துள்ளதாக உரிமை கோரும் எந்த மனிதனும் ஸ்திரீயும் அதாவது வார்த்தையாயிருக்கிற, (அது சரியா?), நீங்கள் பரிசுத்த ஆவி தங்கும் மாம்சமாக, அவருடைய ஒரு பாகமாக, உங்கள் காலத்தின் சுவிசேஷத்தை பிரதிபலிக்கிறவர்களாக அமைந்திருந்து, அதே சமயத்தில் அவர் எழுதி வைத்த வார்த்தையை எப்படி மறுதலிக்க முடியும்? 189 நீங்கள் எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும், எனக்குக் கவலையில்லை. ஏன்? நான் உங்களை ஆப்பிரிக்க பழங்குடியினரிடம் கொண்டு சென்று, எந்த ஒரு கிறிஸ்தவனும் அருகில் வரமுடியாத ஒரு சிறந்த வாழ்க்கையை அவர்கள் வாழ்வதை உங்களுக்கு காண்பிக்க முடியும். அவர்கள் விபச்சாரத்தில் அகப்பட்டால், ஸ்திரிகளில் ஒருத்தி திருமணமாவதற்கு முன்பு, ஒரு வாலிப பெண்மணி, அவளுடைய கன்னித்தன்மைக்காக அவள் முதலில் சோதிக்கப்படவேண்டும். அவள் குற்றவாளியாக கண்டுபிடிக்கப்பட்டால், அப்பொழுது எந்த மனிதன் அதைச் செய்தான் என்று அவள் கூற வேண்டும். அவர்கள் இருவரும் சேர்ந்து கொல்லப்படுவார்கள். அப்படிப்பட்ட காரியம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சம்பவித்திருந்தால், யாரால் அந்த எல்லாப் பிரேதங்களை அடக்கம் செய்ய முடியும் என்று பார்த்தீர்களா? எனவே, அங்குதான் காரியம். பாருங்கள். அவர்கள் அஞ்ஞானிகளே. ஆனால் அவர்களுடைய நல்லொழுக்கத்தைப் பாருங்கள்! எனவே அந்த அடிப்படையில் நீங்கள் பரிசோதிக்க முடியாது. நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு முகம்மதியர்கள் நல்வாழ்க்கையை கடைபிடிக்கின்றனர் என்று இங்குள்ள இந்திய சகோதரர் இப்பொழுது உங்களிடம் கூற முடியும். 190 அப்படியானால் அது என்ன? வார்த்தையே பரிசோதிக்கிறது. அந்த பரிசேயர்கள் இயேசுவைக் காட்டிலும் இரட்டிப்பாக தாழ்மையுள்ளவர்களாயிருந்தனர். அவர் சென்று அவர்களுடைய சபைகளைக் கிழித்தெறிந்து, அவர்களை வெளியே துரத்தி, அடித்து, இப்படிப்பட்ட செயல்களைப் புரிந்தார். 191 ஆனால் இந்த தேவ பக்தியுள்ள வயோதிக ஆசாரியன்... உங்களுக்குத் தெரியுமே, ஏன்... இன்று காலை அவருக்கு விரோதமாக நான் ஒரு கூட்டம் நடத்தி, "நீங்கள் வியாதியாயிருந்த போது உங்களிடம் வந்து ஜெபித்தது யார்?” என்று கேட்டால், "அந்த தேவபக்தியுள்ள வயோதிக ஆசாரியன்” என்றே கூறுவீர்கள். தந்தையின் பயிர்கள் விளையத் தவறின போது, அவருக்குக் கடன் கொடுத்தது யார்? "அந்த தேவ பக்தியுள்ள வயோதிக ஆசாரியன்.” உங்களை தேவனுடைய ஊழியத்திற்கென்று பிரதிஷ்டை செய்தது யார்? "அந்த தேவபக்தியுள்ள வயோதிக ஆசாரியர்." நீங்கள் சிறைச்சாலையில் இருந்தபோது, உங்களை வந்து பார்த்தது யார்? "அந்த தேவபக்தியுள்ள வயோதிக ஆசாரியன்." ஆனால் இயேசு என்றைழைக்கப்பட்ட இந்த வாலிப மதத்துரோகி அவர் என்ன செய்கிறார்? உங்கள் போதகரை ஒரு "பாம்பு" என்றழைத்தார். பார்த்தீர்களா? பாருங்கள், அது கனிகளினால் அல்ல. 192 அது வார்த்தையினாலேயாகும், "மனுஷன் கனிகளினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” 193 அவரே வார்த்தையாயிருந்தார். அவர்கள் அதைக் காணத்தவறினார். அதைத்தான் அவர் செய்ய வேண்டுமென்று கருதப்பட்டார். அவர்களால் அதைக் காண முடியவில்லை , ஏனெனில் அதைக் காண அவர்கள் நியமிக்கப்படவில்லை . அவர் "நீங்கள் என்னிடம் வரமுடியாது” என்றார். அந்த பரிதாபமான யூதர்களைப் பாருங்கள். அவர்கள் கண்கள் குருடாக்கப்பட்டிருந்தன. நிச்சயமாக, அவரே அதை செய்தார். அவர்தாமே அவர்களைக் குருடாக்கினார். 194 குருடாக்கப்பட்டிருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். வேதத்தைக் காண உங்களுக்குப் பார்வையுள்ளதால் நீங்கள் தேவனை ஸ்தோத்தரிப்பது நலம். இப்பொழுது கவனியுங்கள். 195 இப்பொழுது, அவர், அவரே இந்த வார்த்தையாயிருந்தார். அதன்பிறகு அவர் சோதிக்கப்பட்டார். இயேசு சோதிக்கப்படுதல். அதனூடாகத்தான் இப்பொழுது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 196 பாருங்கள், யாராகிலும், “நல்லது, இது வேறொரு காலத்துக்குரியது” என்று கூறினால், அது வார்த்தையை பிரதிபலிப்பதாய் இல்லை. ஏனெனில் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேதம் உரைக்கிறது. அப்படியிருக்க, நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டுள்ள ஒருவர் என்று உங்களுக்குள் இருக்கிற பரிசுத்த ஆவியினால் எப்படி கூற முடியும்? 197 உங்களை நான் இப்பொழுது சற்று புண்படச் செய்யலாமா? [சபையோர், "ஆமென்” என்கின்றனர் - ஆசி.] அதனால் பரவாயில்லையா? உங்கள் கைகளையுயர்த்துங்கள். நீங்கள் என்னை கோபித்துக் கொள்ளமாட்டீர்கள். [“இல்லை”) நீங்கள் அவ்வாறு கோபித்துக் கொண்டாலும், அப்படி செய்ய உங்களுக்கு உரிமை உண்டு. 198 தலைமுடியைக் கத்தரித்துக் கொண்டுள்ள பெண்களாகிய நீங்கள், பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டுள்ளதாக என்னிடம் எப்படி கூற முடியும்? ஒரு வார்த்தை ! ஓ, நான் அந்நியபாஷை பேசினேன்.” அது எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணவில்லை. மந்திரவாதிகள் அந்நிய பாஷைபேசி, அதற்கு அர்த்தம் உரைத்து, ஆவியில் கூச்சலிட்டு நடனமாடுவதை நான் கண்டிருக்கிறேன். 199 ஆண்களாகிய நீங்கள் உங்களைக் குடும்பத்தின் தலைவன் என்று அழைத்துக் கொண்டு, அதே சமயத்தில் உங்கள் மனைவி குட்டை கால்சட்டை அணிந்து அவ்வாறு நடந்து கொள்வதை அனுமதித்து, உங்களைக் கிறிஸ்தவர்கள் என்று எப்படி அழைத்துக் கொள்ள முடியும்? 200 அதுபோன்ற காரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உறுதியாக நிற்காத போதகர்களாகிய நீங்கள் தேவனை எப்படி முகமுகமாக சந்திக்கப் போகின்றீர்கள்? அவர்களை நீங்கள் திருத்த முடியாது. ஆனால் அதை எதிர்த்து நீங்கள் பிரசங்ககம் செய்ய நேரிட்டால், நீங்கள் வேத சாஸ்திர பள்ளியிலோ அல்லது அந்த குழுவிலோ நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது. நீங்கள் வேறெங்கிருந்தோதான் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும். கர்த்தருக்கு சித்தமானால், இன்னும் சில நிமிடங்களில் அதற்கு வருவோம். பாருங்கள்? 201 ஆனால் அங்குதான் காரியம். உங்களை புண்படுத்த வேண்டுமெனும் நோக்கம் எனக்கில்லை. உங்களை நான் நேசிக்கிறேன். அதுதான் காரணம். நீங்கள் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகப்பட்டு, நீங்கள் மூழ்கிப் போவதை நான் கண்டு, "தேனே, ஒரு நல்ல நபராயிரு” என்று கூறினால், நான் மாய்மாலக்காரனாயிருப்பேன். நீங்கள் அவர்களை எச்சரிப்பது நலம். அது உண்மை . அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள்! 202 நான் அன்றொரு இரவு கூறினதுபோல, நான் கிறிஸ்தவனாயிருந்தால், வேதத்திலுள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் என்னை நான் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். நான் நோவாவுடன் நின்று, அவரோடு அந்நாட்களில் பிரசங்கித்து ஜனங்களை எச்சரிக்க வேண்டும். அது உண்மை . நான் எலியாவுடன் கர்மேல் பர்வதத்தில் தனியாய் நிற்க வேண்டும். நான் கல்வாரியில் நின்று கொண்டு என்னையும் என் சொந்த கருத்துகளையும் அவரோடு சிலுவையில் அறைய வேண்டும். ஆனால் அதன் பிறகு மீண்டும் நான் அவருடன் ஈஸ்டர் அன்று எல்லாவற்றின் மேலும் ஜெயங்கொண்டவனாய் உயிரோடெழுவேண்டும் - உலகத்தில் காணப்படும் மாம்சபிரகாரமான எல்லா காரியங்களுக்கும் மேலாக அவருடன் எழ வேண்டும். 203 கவனியுங்கள், அது வார்த்தையை பிரதிபலிப்பதில்லை . இல்லை , அது ரூபகாரப்படுத்துவதில்லை. இப்பொழுது, ஆனால் நீங்கள் இப்பொழுது வார்த்தையை விசுவாசித்தால், தேவன் இங்கே இயேசுவுக்கு செய்தது போன்று, உங்களுக்கும் அவர்தாமே அதை ரூபகாரப்படுத்துவார். 204 வார்த்தை அப்பம் எப்பொழுதும் புசிக்கப்பட வேண்டும். “மனுஷன் இந்த அப்பத்தைப் போன்ற அப்பத்தினாலே மாத்திரமல்ல, ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். எனவே அது வார்த்தை அப்பம். அதை நினைவில் கொள்ளுங்கள். இந்த அப்பத்தினூடாகவே ஒவ்வொரு காலத்திலிருந்த சபையும் போஷிக்கப்பட்டு வந்தது. அது ஜெயங்கொள்ளுகிறவனுக்கு மாத்திரம் மறைவான மன்னாவாக இருந்து வந்ததாக வெளிப்படுத்தின விசேஷம் உரைத்துள்ளது. இதை விவரமாக கூற இப்பொழுது எனக்கு நேரமில்லை. எனக்கு இன்னும் அநேகமாக மற்றொரு முப்பது நிமிடங்கள் மாத்திரமே உள்ளது. ஆனால் பாருங்கள், பரிசுத்த மன்னா வானத்திலிருந்து விழுந்தபோது, அது பரிசுத்த ஆவிக்கு ஒரு அடையாளமாக இருந்தது. நீங்கள் அதன்பேரில் என்னுடன் இணங்குவீர்கள். 205 ஒரு ஓமர் அளவு மன்னாவை சேகரித்து அதை மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கும்படி தேவன் மோசேக்கு கட்டளையிட்டார். ஏனெனில் மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்படாமல் போனால், அது புழுத்து போகும். அது சரியா? புழுக்கள் அதனுள் நுழைந்து விடும். அவர் மோசேயிடம், “இந்த ஓமர் அளவு மன்னாவை மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைப்பாயாக. அப்பொழுது ஒவ்வொரு சந்ததியிலும் அந்த ஆசாரியத்துவத்தின்படி வருகிறவன், ஒரு மனிதன் ஒரு ஆசாரியனாகி, வார்த்தைக்கு ஊழியம் செய்ய வரும்போது, அவன் அதற்காக நியமிக்கப்பட்டவுடன், அவன் செய்யவேண்டிய முதல் காரியம் என்னவெனில் அந்த மூல மன்னாவிலிருந்து ஒரு கைப்பிடியளவு எடுத்து அதைப் புசிக்க வேண்டும்” என்றார். 206 அந்த மன்னாதான் அவன் தோன்றின அந்த புதிய சபை காலத்தில் அவன் கையில் பிரதிபலிக்கும் அவருடைய ஒளியாக அமைந்தது. பரிபூரணமாக ஜெயங்கொண்ட மனிதன் மாத்திரமே; வார்த்தையைத் தவிர எல்லாவற்றையும் உதறித் தள்ளின் மனிதன் மாத்திரமே. வார்த்தை தான் அந்த மன்னா. ஓ, என்னே, அது இயேசு. “மனுஷன் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” ஓ, அதுவே ஜெயங்கொள்பவனுக்கான மறைவான மன்னாவாயிருந்தது, ஓ, அது தொடர்ந்து வரும் ஒவ்வொரு ஆசாரியனுக்காகவும் வைக்கப்பட்டிருந்தது. 207 ஆனால் நீண்ட காலத்திற்கு முன்பே வேத சாஸ்திர பள்ளிகள் ஆசீர்வதிக்கப்பட்ட இதை ஒரு பானை கூழுக்காக மாற்றிக்கொண்டது. அது முற்றிலும் உண்மை . ஆம், ஐயா. 208 ஏசா செய்தது போல. ஒழுக்க விஷயத்தில் ஏசா யாக்கோபைக் காட்டிலும் மேன்மையுள்ளவனாயிருந்தான். ஆனால் அவன் வார்த்தையாகிய சேஷ்டபுத்திரபாகத்துக்கு மதிப்பு கொடுக்கவில்லை. எத்தனை பேருக்கு அது தெரியும்? மூத்த மகனுக்கு, வாக்குத்தத்தமான, வார்த்தையாயிருந்த சேஷ்டபுத்திரபாகம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால் ஏசா நல்லவன், ஒழுக்கமுள்ளவன்; இன்றைய பெயர் கிறிஸ்தவர்களைப் போல் அவன் நல்லவன். அவன் பொய் சொல்லவில்லை. அவன் திருடவில்லை. அவன் தன் தகப்பனுக்கு நல்லவனாயிருந்தான். இவையெல்லாவற்றையும் அவன் செய்தான். ஆனால் நீங்கள் பாருங்கள். அவன் தன் சேஷ்ட புத்திரபாகத்தில், அவன் அதைக் குறித்து அக்கறை கொண்டிருக்கவில்லை. எனவே அவன், "அதனால் என்ன வித்தியாசம்? நான் எப்படியும் ஒரு இஸ்ரவேலன். பாருங்கள், நான் நான் எப்படியும் இதை சேர்ந்தவன்” என்றான். ஆனால் அவனுடைய சேஷ்ட புத்திரபாகம் முக்கியம் வாய்ந்ததாக எண்ணப்பட்டது. பாருங்கள். அவன் மாமிசப்பிரகாரமாக சரியானவனாயிருந்தான். ஆனால் ஆவிக்குரிய பிரகாரம் அவன் எல்லாவகையிலும் தவறாயிருந்தான். 209 இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. பானை கூழில் சபையையும் உலகத்தையும் ஒன்றாக கலந்துள்ளனர். ஒவ்வொன்றிலும் சிறிதளவு மதுபான விருந்துகள், நடனங்கள், சபையில் எல்லாவகையான செயல்கள்; குட்டை தலை முடியும், குட்டை கால்சட்டையும் கொண்ட பெண்கள். நீங்கள், "சகோ. பிரான்ஹாமே, அது சிறிய காரியம் தானே" எனலாம். 210 அது வேதத்திலுள்ள வார்த்தைகளில் ஒன்று, ஒரு ஸ்திரி தன்னுடைய தலைமுடியைக் கத்தரித்துக் கொள்வது தவறு என்று கூறப்பட்டுள்ளது. அது உண்மை . அவள் அப்படி செய்தால், எப்படி உள்ளே போகப்போகிறாள்? புரிகிறதா? நீங்கள் எந்தப் போதகரையும் கேட்டுப்பாருங்கள். வார்த்தை அவ்விதம் உரைக்கிறதென்று அவர் உங்களிடம் கூறுவார். பாருங்கள், "அவள் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள். அவள் தன் புருஷனை கனவீனப்படுத்துகிறாள். அவள் தள்ளி வைக்கப்பட்ட வேண்டும். அது முற்றிலும் உண்மை . "தலைமுடியைக் கத்தரிக்கிறவள் அதை சிரைக்கக்கடவள். பாருங்கள், அதன் மூலம் அது முழுவதையும் காண்பிக்கிறது. தலைமுடி கத்தரிக்கப்படுவதனால் அல்ல. தேவன் அவ்விதமாக அதை விரும்புகிறதில்லை. அது உங்களுக்கிடையே காணப்படுகிற ஒருவர். அதைக் கொண்டு விளையாடாதீர்கள். அதை முழுவதுமாக சிரைத்துவிடுங்கள், அல்லது வளர விடுங்கள். அப்படித்தான் தேவன் கூறியுள்ளார். சுவிசேஷத்தின் போதகர் எவரும், அவர் அதை வெளிப்படையாகக் கூறினாலும் கூறாவிட்டாலும், அது உண்மையென்று அறிவர். ஆனால் அது சத்தியமாயிருக்கிறது. புரிகிறதா? மற்றெல்லாவற்றையும் நீங்கள் செய்து விட்டு இதை மாத்திரம் கைக்கொள்ளாமல் விட்டுவிட்டால், அதனால் என்ன உபயோகம்? 211 என்ன? உங்களுக்குள் உலகப்பிரகாரமான நாகரீகம் சிறிது உள்ளது. நீங்கள் மற்ற சபைகள் நடந்து கொள்வதைப் போல் நடக்கப்பார்க்கிறீர்கள். அங்கு தான் இஸ்ரவேல் ஜனங்கள் தொல்லையில் அகப்பட்டுக் கொண்டார்கள். அங்குதான் அவர்கள் மரித்தார்கள். அங்குதான் ஆதாம் தொல்லைக்கு ஆளானான். அங்குதான் மற்றவர்கள் அனைவரும் தொல்லைக்கு ஆளானார்கள். அதற்கு ஒரு வார்த்தை மீறினால், ஒரு செய்திக் கூற்றை மீறினால் போதுமானது. பானைக் கூழில் உலகம் கலந்துள்ளது! உலகம் கொஞ்சம், ஹாலிவுட் கொஞ்சம், சபை கொஞம், வேத சாஸ்திரிகள் கொஞ்சம்; இவைகளை ஒன்று கலந்தால் உங்களுக்கு கிடைப்பதென்ன? 212 கவனியுங்கள், சாத்தான் இங்கு தோல்வியடைந்தால், அவன் தன் இரண்டாம் உபாயத்தை கையாண்டு, நீங்கள் வார்த்தையை அவிசுவாசிக்கும்படி செய்வான். அவன் வேத சாஸ்திர பள்ளிக்கு அனுப்புவான், அவன் அடுத்த ஒரு உபாயத்தைக் கையாள முயல்வான். இப்பொழுது இங்குதான் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். உங்களுக்கு விருப்பமானால் இந்த பாகத்தை உட்கார்ந்து கொண்டு ஐந்து நிமிடம் கேளுங்கள். அவன் இயற்கைக்கு மேம்பட்ட ஒன்றை உங்களுக்கு அளிப்பான். முடிப்பதற்கு முன்பு இதையெல்லாம் நான் மீண்டும் திரும்பிக் கூறப் போகிறேன். பாருங்கள், அவன் உங்களை வார்த்தையிலிருந்து அகற்றும்படி சோதிக்க முடியவில்லையென்றால், "இல்லை, நான் வார்த்தையில் நிலைத்திருக்கப் போகிறேன்" என்று நீங்கள் கூறுவீர்களானால், அதன் பிறகு அவன் இயற்கைக்கு மேம்பட்ட ஒன்றை உங்களுக்கு அளிப்பான். 213 அவன், "நான் உனக்கு என்ன செய்வது என்று சொல்வேன். நீ தேவாலயத்தின் மேலேறி அங்கிருந்து தாழக் குதித்து, மீண்டும் எழுந்திரு, இயற்கைக்கு மேம்பட்ட ஒன்றை உன்னால் செய்ய முடியுமென்று ஜனங்களுக்குக் காண்பி” என்பான். 214 கண்டிப்பாக அவர்களை அவன் அதில் சிக்க வைப்பான். இப்பொழுது இதை கவனியுங்கள். அந்த முடிவிற்கு நீங்கள் வரும் போது, இந்த சோதனை உங்களுக்கு நேரிடும்போது கவனமாயிருங்கள். அவன் உங்களை அந்நிய பாஷைகள் பேசும்படி செய்து, நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்கள் என்று நினைக்கும்படி செய்து விடுவான். பாருங்கள்? அல்லது அவன் நீங்கள் தீர்க்கதரிசனம் உரைக்கும்படி செய்துவிடுவான். அது வார்த்தையுடன் இணையாமலிருக்கலாம். ஜனங்கள் எழுந்து நின்று, கிழக்குக்கும், மேற்க்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரம் வார்த்தைக்கு முரணாயுள்ள தீர்க்கதரிசனம் உரைப்பதை நான் கேட்டிருக்கிறேன். பாருங்கள்? நீங்கள் பிழைப்பது வார்த்தையினாலே. அப்படிப்பட்ட இயற்கைக்கு மேம்பட்ட வரங்களை சாத்தான் உங்களுக்கு கை நிறைய அளிக்கக் கூடும். நிச்சயமாக. அதனால் ஒரு உபயோகமுமில்லை . 215 "அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே, உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தேன் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினேன் அல்லவா? நான் மகத்தான கிரியைகளைச் செய்துள்ளேன்? நான் ஸ்தாபனத்தில் பெரிய மனிதனாய் இருந்தேன். நான் இந்தக் காரியங்களை, இந்த எல்லாக் காரியங்களையும் செய்துள்ளேன்'' என்று கூறுவார்கள் என்று இயேசு கூற வில்லையா? அதற்கு அவரோ, "அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள் என்பேன்" என்றார். 216 அக்கிரமம் என்றால் என்ன? அது சரியென்று உள்ளத்தில் அறிந்திருந்தும், அதை செய்யாமல் விட்டு விடுவதே. வேதம் ஒரு குறிப்பிட்ட காரியத்தைப் போதிக்கிறது என்று நீ அறிந்தும் நீ அதைச் செய்யாமலிருப்பதே அக்கிரம். தாவீது, "என் இருதயத்தில் அக்கிரம் சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்" என்றார். அது உண்மைதானே? அது வேதத்தில் உள்ளதா? [சபையோர், "ஆமென்” என்கின்றனர். - ஆசி.) நீங்கள் நிச்சயமாக அதைக் குறித்து கோபங்கொள்ளக் கூடாது. பாருங்கள். இயேசு, 'அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே, 'இவைகளை நான் செய்தேனே' என்பார்கள். நான் அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள் என்பேன்” என்று கூறியுள்ளார். 217 ஆதாமும் அப்படித்தான் கூறினான். ஆதாம், "ஆண்டவரே, நான் இதை செய்தேன், அதை செய்தேன்" என்று கூறினான். ஆனால் ஒரே ஒரு வார்த்தை, பாருங்கள், ஒரு வார்த்தை அதைச் செய்தது. அது மாத்திரமே. அதற்கு அவசியம், ஒரே ஒரு வார்த்தைக்கு கீழ்படியாதிருத்தல். 218 ஆம், ஒருக்கால் வார்த்தைக்கு முரணாக தீர்க்கதரிசம் உரைக்கலாம். ஆனால் இப்பொழுது அவனுக்கு இயற்கைக்கு மேம்பட்ட இந்த வரம் கிடைத்தவுடன், அவன் அந்த கூச்சலிலும் பகட்டிலும் மயங்கிவிடுகிறான். எனவே, "தேவனுக்கு மகிமை! நான் இன்னார் - இன்னாருக்காக ஜெபித்தேன். அவர் எழுந்து நடந்தார். அல்லேலூயா! என்னால் அந்நிய பாஷைகளைப் பேச முடியும். வேறொருவர் அதற்கு அர்த்தம் உரைக்கிறார். அது முற்றிலும் உண்மை " என்கிறான். 219 பவுல், "நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், நான் ஒன்றுமில்லை. மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், நான் ஒன்றுமில்லை " என்கிறான். அது சரியா? [சபையோர், "அது சரியே என்கிறார்கள். ஆசி.) 220 ஆனால், பாருங்கள், அவன் அதை உங்களுக்கு அளிப்பான். ஓ, பெந்தெகொஸ்தே ஜனங்களே, உங்களை நான் நேசிக்கிறேன். இல்லையென்றால் உங்களுடன் நான் இருக்கமாட்டேன். அங்குதான் நீங்கள் தவறி விட்டீர்கள். பாருங்கள். வார்த்தையை கவனியுங்கள். வரங்களையல்ல. அதை யார் அளிப்பது என்பதை கவனியுங்கள், அது எங்கிருந்து வருகிறதென்று பாருங்கள், பாருங்கள். அவன் அதில் முழுமையாக மயங்கி விடுகின்றான். அவன் ஆவியில் நடனமாடுகின்றான். (ஒலி நாடாவில் காலி இடம் ஆசி... அது ஒரே காரியம். அவனை அநேகர் சூழ்ந்து கொள்கின்றனர், அவனுக்கு எல்லாவிடங்களிலிருந்தும், அதாவது அங்கும் இங்குமிருந்து அழைப்பு வருகிறது. அவன் வார்த்தையை மறந்து விடுகிறான். 221 ஓ, அந்த வார்த்தையிலிருந்து நீங்கள் விலகியுள்ள வரைக்கும் மிகவும் பிரபலமாயிருக்கிறீர்கள். ஆனால் எப்பொழுதாவது நீங்கள் அந்த வார்த்தைக்குள் வரும்போது, ஒரு முறை, உங்களுடன் யார் ஒத்துழைக்கின்றனர் என்று கவனித்துப் பாருங்கள். புரிகிறதா? அப்பொழுது என்ன நடக்கிறதென்று கவனித்துப் பாருங்கள். இன்னும் சிறிது நேரத்தில் நாம் இயற்கையின் மற்றொரு கட்டத்துக்கு வரப்போகிறோம். பாருங்கள், யாருக்கு நீங்கள் வேண்டும் என்பதைக் கவனியுங்கள். யாருக்கும் வேண்டாம். "ஓ, அதிலிருந்து விலகுங்கள்” என்பார்கள். சில வாரங்களுக்கு முன்பு குறிப்பிட்ட ஒரு சங்கம் இங்கு கூடி, என்னை அல்லது இந்நகருக்கு வரும் வேறெந்த முழு சுவிசேஷ ஊழியக்காரனை, வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படிக்கு அழைக்கும் எந்த ஊழியக்காரனும் சங்கத்தின் உறுப்பினராயிராதபடிக்கு தள்ளப்படுவார் என்று கூறி, எனக்குத் தடை விதித்தது. சரி, ஏனென்றால் நான் வியாதியஸ்தருக்கு ஜெபி பிப்பதனால் அப்படி செய்தார்கள். சரி, "அவர் கூறுவதைக் கேட்க வேண்டாம்"... அங்கு வார்த்தை ரூபகாரப்படுத்தப்பட்டது. 222 அவர்கள் நம்முடைய கர்த்தருக்கும் அதையே செய்தனர். ஒவ்வொரு காலத்திலுள்ள தேவ மனிதருக்கும் அவர்கள் அதையே செய்தனர். அவர்கள் லூத்தர், வெஸ்லி இன்னும் மற்றவர்களுக்கும் அதையே செய்தனர். துவக்கத்தில் உங்களுக்கும் அவர்கள் அதையே செய்தனர். இப்பொழுது எந்த சேற்றிலிருந்து நீங்கள் வெளிவந்தீர்களோ, அதே சேற்றுக்குத் திரும்புகின்றனர். அந்த விதத்தைக் கவனித்துப் பாருங்கள், அது எக்காலத்தும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. அது அவ்வாறிருக்கத் தவறினதில்லை. சாத்தான் அதேக் காரியத்தைச் செய்கிறான். 223 இப்பொழுது அவன் கூச்சலிலும் பகட்டிலும் மயங்கி, என்னே, அவன் வார்த்தைக்கு கவனம் செலுத்தாமல் போய் விடுகிறான். "ஓ, சகோதரனே, சகோதரன் இன்னார் இன்னார் இன்னினதை கூறினார். நான் அங்கு செல்ல வேண்டும். நான்...” பாருங்கள், அவன் அதில் மிகவும் மயங்கி, அதை கவனிப்பதும் கூட இல்லை. அது வார்த்தையா இல்லையா, அது அவனுக்கு எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணுவதில்லை. "மற்றவர்கள் அது சரியென்று சொன்னார்கள். எனவே அது எந்த வித்தியாசத்தையும் உண்டுபண்ணுகிறதில்லை.” ஸ்தாபனம், "அதை நீ பெற்றுக் கொண்டாய், யாரும் உனக்கு ஆலோசனை கூற சம்மதியாதே" என்கிறது. நீ எதைப் பெற்றுக் கொண்டாய்? பாருங்கள்? கவனியுங்கள். 224 இந்த ஒரு இடத்திலும் கூட சாத்தான் வார்த்தைக்கு மேல் பூச்சு அளித்தான். இயேசு இயற்கைக்கு மேம்பட்ட அற்புதத்தை செய்ய அவன் முயன்ற போது, இயற்கைக்கு மேம்பட்டதை, பாருங்கள், இயற்கைக்கு மேம்பட்டதாய் இருந்ததை, இயேசு அவனுக்கு செவிகொடுத்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும்? புரிகிறதா? அவன், "இப்பொழுது பொறும். நீர் வார்த்தையோடு நிலைத்திருக்க விரும்புகிறீர், இல்லையா? அவர் தம்முடைய தூதர்களுக்கு இதைக் குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் மோதிக் கொள்ளாதபடிக்கு அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக் கொள்வார்கள்" என்றான். ஆனால் அவர் தம்முடைய பாதத்தை எந்த கல்லின் மேலும் மோதிக் கொள்ளவில்லை. புரிகிறதா? கவனியுங்கள். அவர் அதற்கு செவிகொடுத்திருந்தால் என்னவாயிருக்கும்? அவர்... நீங்கள் கவனித்தீர்களா? சாத்தான் வார்த்தையை எடுத்துரைத்ததாக நான் கூறவில்லை. அவன் அதற்கு மேற்பூச்சு பூசினான். ஒரு 'கேக்' கின் மேல் சர்க்கரை ஊற்றி அதை மூடுவது போல, சுவற்றை வெள்ளையடிப்பது போல் செய்தான், பாருங்கள், அது சரியான இடத்தில் பொருத்தப்படவில்லை. 225 இன்றைக்கு அவர்கள் அதைதான் செய்ய முயற்சிக்கிறார்கள், அதற்கு வெள்ளையடிக்க முயற்சிக்கிறார்கள், ஆனால் நீங்கள் அதை மற்ற வேதவாக்கியங்களுடன் இணையச் செய்ய முடியாது. அது எல்லாமே "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்பதாய் அமைந்திருக்க வேண்டும். பாருங்கள், நீங்கள் எவ்வளவுதான் வார்த்தைக்கு மேல் பூச்சு பூச முனைந்தாலும் அது சரிவராது.... 226 அவர் எவ்வாறு கூறினாரோ, அதேவிதமாக அது எடுத்துரைக்கப்பட வேண்டும். அது சரியாக எடுத்துரைக்கப்பட்டால், உங்கள் வாழ்க்கையில் அவர் அதை ரூபகாரப்படுத்துவார். அப்படித்தான் நீங்கள் எல்லா மனிதராலும் அறிந்து வாசிக்கப்படுகின்ற எழுதப்பட்ட உண்மையான தேவனுடைய நிருபங்களாய் இருக்கிறீர்கள். எழுதப்பட்ட நிரூபம் என்பது இந்த "வேதாகமமே." அது சரியா? நிருபம் என்பது வேதாகமம். நீங்கள் எழுதப்பட்ட வேதாகமமாய் அவருடைய வார்த்தையை பிரதிபலித்து, தேவனுக்குள் மீண்டும் அந்த பரிபூரண மனிதராய் இருக்கிறீர்கள். ஆனால் இயேசு, "இப்படியும் எழுதியிருக்கிறதே" என்றார். பாருங்கள்? 227 ஆனால் கவனியுங்கள், ஏவாள் இதே கட்டத்தில் அவளுடைய இயற்கைக்கு மேம்பட்ட புரிந்து கொள்ளும் தன்மையினால் மயங்கினாள். அவளுக்கு ஒரு வேத சாஸ்திர அனுபவம் கிடைத்தது. அவளுடைய கல்வியறிவு அக்காலத்திலிருந்து எந்த வேத பண்டிதனின் அறிவைக் காட்டிலும் சிறந்ததாயிருந்தது. பாருங்கள், அவள் அதில் மிகவும் மயங்கினதால், அவள் அதை அறியவேயில்லை. ஆதாமுக்கு இல்லாத ஒன்று அவளுக்கிருந்தது என்பதை அவள் அறிந்திருந்தாள். அவள் தன் ஆதாமைவிட அதைக் குறித்து அதிகம் அறிந்திருந்த காரணத்தால், ஒருக்கால் அவள் அவனை இப்பொழுது ஆளுகை செய்யமுடியும். அவர்களுடைய ஆதாம்கள் இன்று என்ன செய்கின்றனர் என்று கவனியுங்கள். அவள் நன்மை தீமை என்னவென்று அறிந்திருந்தாள். அவள் சத்தியத்தைக் குறித்து சிறந்த கல்வியறிவைக் கொண்டிருந்தாள். அது உண்மை . சத்தியத்தைக் குறித்து அவள் முன்பு அறிந்திராத சிறந்த கல்வியறிவைக் கொண்டிருந்தாள். அது தேவனுடைய சத்தியம். ஆனால் அவள் வார்த்தையை மீறினதன் நிமித்தம் மரித்து போனாள். ஆம், அவள் தன் கல்வியறிவைப் பெற்றுக் கொண்டாள். சரி. 228 அவ்வாறே வேதாகமப் பள்ளியும் உங்களுக்கு ஒரு வேத சாஸ்திர அனுபவத்தை அளிக்கிறது. நீங்கள் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குறித்து எடுத்துரைக்கக்கூடும். ஆனால் நீங்கள் "அது அவர்களுக்குரியது" என்று கூறி வார்த்தையை மீறாதபடிக்கு, நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள். அவ்வாறு செய்ய வேண்டாம், அது உங்களுக்கானதாய் உள்ளது. அது விரும்புகிற யாவருக்கும் உரியது. புரிகிறதா? புரிகிறதா? ஜாக்கிரதையாயிருங்கள். "ஓ, அது முன் காலத்திலிருந்த சபைக்கு மாத்திரமே” என்று கூறாதீர்கள். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவளுக்கு நல்ல கல்வியறிவு இருந்தது. ஆனால் அவள் அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவளாயிருந்தாள். 229 இப்பொழு சாத்தானின் மூன்றாம் திட்டம். நாம் அதை வேகமாக பார்ப்போம். ஏனெனில் நாம் அதிக நேரம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஒருக்கால் இன்னும் பதினைந்து, இருபது நிமிடங்கள் எடுத்துக் கொள்வேன். அந்த அளவு நீங்கள் இன்னும் கூடுதலாக கவனிக்க விரும்பினால் நலமாயிருக்கும். அவனுடைய மூன்றாம் திட்டத்தை அல்லது அவனுடைய மூன்றாம் சோதனையைக் கவனியுங்கள். மற்ற திட்டங்கள் தோல்வியடைந்தாலும், இது தோல்வியடையாது. பாருங்கள். அவன் இயேசுவுக்கு செய்தது போல, இப்பொழுது உங்களுக்கு சபையில் ஒரு பதவியை அளிக்கிறான். “இந்த உலகத்தை உமக்குத் தருகிறேன். நீர் ராஜாவாயிருக்கலாம். உம்மை ராஜாவாக்குவேன். அவை யாவும் எனக்குச் சொந்தம். எனவே நான் அதை உமக்குத் தருகிறேன்.” 230 யார் ஒரு மனிதனை ஒரு போதகராக்க முடியும்? யார் ஒரு மனிதனின் மேல் கைகளை வைத்து அவனுக்கு வரத்தை அளிக்க முடியும்? "தேவன் சபையை ஒழுங்கில் வைத்திருக்கிறார்.” பாருங்கள். அவர்கள் வார்த்தையை எப்படி திரித்து விடுகிறார்கள் என்பதைப் பாருங்கள். ஏவாள் தான் பெற்ற புது அறிவைக் கொண்டு ஆதாமை ஆட்டி வைத்ததுபோல், ஆதாம் அதை ஏற்றுக் கொள்ளும்படி அவள் செய்தவுடனே, அவள் தன் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்ய முடிந்தது. 231 ஆனால் அவன் இயேசுவிடம் வந்த போது, அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர், "அப்பாலே போ சாத்தானே” என்றார். வேறுவிதமாய் கூறினால், அதை நான் தவறாக எடுத்துரைக்கவில்லை, அதற்கு: "மனுஷன் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதேயன்றி, உன்னுடைய ஆலோசனை மூலமாயல்ல. 'நான் உம்மை பொதுவான மேற்பார்வையாளராக, ஒரு திருச்சபை உதவிக்காரராக அல்லது - அல்லது உதவிக்காரராக அல்லது சகோதரியே, நான் உன்னை இசைப் பேழையை இசைக்கச் செய்வேன்' என்பதனால் அல்ல. பாருங்கள், 'நீர் மிகவும் பிரபலமான ஒரு நபர். உமது திறன் எங்களுடைய சபைக்கு அவசியம்'” என்ற இந்த எல்லா ஆலோசனைகளையும் பாருங்கள். பாருங்கள், வார்த்தைக்கு வாருங்கள். 232 ஏவாள் ஆதாமை ஆளமுடிந்தது, அல்லது அவனுக்குக் கற்றுத் தர முடிந்தது. இன்றைக்கு நடப்பது போல், அந்த விதமாகவே அவர்கள் அதை இன்றைக்குச் செய்கின்றனர், உங்களுக்கு டாக்டர் பட்டம் அளிக்க, உங்களை மாகாணப் போதகர், மேற்பார்வையாளர், மேலாண்மை தலைவர் அல்லது அது போன்ற ஏதோ ஒன்றை அளிக்க முற்படுகின்றனர். 233 இயேசுவைக் காட்டிலும் அது எவ்வளவு வித்தியாசப்பட்டது! அவர் வார்த்தையில் நிலைநின்றார். இப்பொழுது அடுத்த சில நிமிடங்களுக்கு, இயற்கையைக் கொண்டும் வார்த்தையைக் கொண்டும் இவையனைத்தும் உண்மையென்று நிரூபித்து, இவைகளை ஒன்றாக இணைக்க விரும்புகிறேன். அவரே அப்பத்துக்காக வார்த்தை மாமிசமானவர் என்பதை இது நிரூபிக்கிறது. அவர் வார்த்தை மாமிசமானவர். அவர் எதை பிரதிபலித்தார்? வார்த்தையை மாத்திரம். 234 நீங்கள் எழுதப்பட்ட நிரூபமாயிருப்பீர்களானால், நீங்கள் வார்த்தையை மாத்திரம் பிரதிபலிக்கிறவர்களாயிருப்பீர்கள்வேதாகமப்பள்ளி கூறுவதையோ, வேறு யாரும் கூறுவதையோ, குமாரி ஜோன்ஸ் அதைக் குறித்துக் கொண்டுள்ள கருத்தையோ, வேத பண்டிதர் இன்னார் இன்னார் அதைக் குறித்துக் கொண்டுள்ள கருத்தையோ அல்ல; ஆனால் தேவன் அதைக் குறித்து என்ன கூறுகிறாரோ அதை மாத்திரமே. "எல்லா மனிதருடைய வார்த்தையையும் பொய். என் வார்த்தையே சத்தியம். இந்த கற்பனைகளில் மிகச் சிறியதை மீறி ஜனங்களுக்கு அவ்வாறு போதிக்கும் எவனும்! ஒருவன் இந்த புத்தகத்திலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால், அல்லது இதனுடன் ஒரு வார்த்தையை கூட்டினால்! மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்." அந்த வார்த்தையினால் நித்தியமாக பிழைத்திருங்கள்! 235 நீங்கள் சரீரப் பிரகாரமாக பிழைத்திருக்க செத்த ஒரு பொருள் உங்களுக்கு அவசியம் போல், ஆவிக்குரிய பிரகாரம் பிழைத்திருக்க கிறிஸ்து உங்களுக்கு அவசியம்; இல்லையேல் நீங்கள் மரித்து விடுவீர்கள். கிறிஸ்து என்னவாயிருக்கிறார்? "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது, அந்த வார்த்தை மாம்சமாகி நமது மத்தியிலே வாசம் பண்ணினார்.” 236 நீங்கள் அதே எழுதப்பட்ட நிரூபமாயிருக்கிறீர்கள், ஒரு காலத்துக்கு ஒன்றும், மற்றொரு காலத்துக்கு ஒன்றுமாக, அக்காலத்து ஒளியாக விளங்குகிறீர்கள். ஆனால் அவர்களோ அதைக் காண தவறுகின்றனர். நீங்கள் ஒளியை பிரதிபலிக்க மாத்திரம் செய்கிறீர்கள். 237 மற்றவர்கள் ஒவ்வொரு விஷயத்தில் தவறியிருந்தபோதிலும், இவரோ தவறவில்லை நான் ஏற்கனவே கூறினபடி, வெளி 22:18ல் அவர், "எவனாகிலும் இதனுடன் ஒரு வார்த்தையைக் கூட்டினால்” என்றார். 238 இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். மத். 24:24 மனதில் பதியத்தக்கதாய் உள்ளது. அவர்கள் எப்படி... "இந்தக் கடைசி நாட்களில்" இயேசு, இந்தக் "காரியத்தில், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் வஞ்சிக்கப்பப்படுவார்கள்” என்று கூறினார். ஆவிகளைக் கவனியுங்கள், "கடைசி நாட்களில்” வேதவாக்கியம் நிறைவேற வேண்டியதாயுள்ளது. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையோர், "ஆமென்” என்கின்றனர். ஆசி.] "கடைசி நாட்களில், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள், அதற்கென்று முன்குறிக்கப்பட்டவர்கள் வஞ்சிக்கப்படுவார்கள்.” அது பிழையின்றி வேதப்பிரகாரமாக, மிகவும் அழகாகவும் தெளிவாகவும் உள்ளது. அதில் நீங்கள் எந்த பிழையுமே காண முடியாது. தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே அதிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். அப்படித்தான் இயேசு கூறினார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ("ஆமென்.”] "கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் அது வஞ்சிக்கும்.” 239 "அது பிழையற்ற வேதவாக்கியம், அதை நீங்கள் மாம்சக் கண்களால் காணலாம். ஆனால் நீங்கள் பாருங்கள், அதுவல்ல இயேசு. அந்த பரிசேயர்கள் மிகவும் பரிபூரணமாக வேதத்தைப் பெற்றிருந்தனர். ஆனால் அவர்கள் தங்கள் சொந்த வியாக்கியனத்தினால் அதை அறிந்திருந்தனர். 240 அவர் தவறல்ல என்று அவர்கள் எப்படி அறிந்து கொண்டனர்? அந்த காலத்தில் தேவன் அவருக்கு வாக்களித்த ஒவ்வொரு வார்த்தையையும் ரூபகாரப்படுத்தின காரணத்தால், அப்படித்தான் அவர் மேசியா என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். புரிகிறதா? 241 இப்பொழுது கவனியுங்கள். இந்த நாட்களில் "கூடுமானால்” ஒரே ஒரு வார்த்தை. ஒரு வார்த்தை மாத்திரமே அவசியம். ஆதாமை விழச் செய்ய சாத்தானுக்கு ஒரு வார்த்தை மாத்திரமே அவசியமாயிருந்தது. அவன் ஒரு வார்த்தையை மீறும்படி செய்தான். இன்றைக்கும் அவனுக்கு அவ்வளவு தான் தேவை, ஒரு வார்த்தை மீறும்படி செய்ய, அவ்வளவு தான். அவ்வளவு தான் அவனுக்குத் தேவை. இப்பொழுது அது உண்மையென்று உங்களுக்குத் தெரியும். ஒரு வார்த்தையைக் கூட்டினால் அல்லது ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால், அது முழு தோல்வியாயுள்ளது. ஒவ்வொன்றும், "தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும்.” வேதாகமப் பள்ளிகளில் அளிக்கப்படும் வியாக்கியானங்களைக் குறித்து இப்பொழுது யோசித்துப் பாருங்கள். அவை ஒன்றுக்கொன்று வித்தியாசமாயுள்ளன. 242 எங்காவது சத்தியம் இருக்க வேண்டும், இதுதான் அது. வேதாகமம் இப்பொழுது இயேசு கூறினார். 243 நீங்கள், "நல்லது, சகோ.பிரான்ஹாமே, அவர்கள் மிகவும் அழகான ஆராதனையைக் கொண்டிருக்கின்றனரே” எனலாம். 244 இயேசு, "மனுஷருடைய கற்பனைகளை, வேத சாஸ்திரங்களை உபதேசங்களாக போதித்து, வார்த்தையை அல்ல, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்” என்றார். மனிதன் தன் சொந்த கருத்தைக் கொண்டவனாய் வார்த்தையை வியாக்கியானம் செய்கிறான். 245 நான் ஏற்கெனவே கூறினபடி, தேவனுக்கு எந்த வியாக்கியானியும் அவசியமில்லை. அவர்தாமே ஒவ்வொரு வார்த்தையையும் வியாக்கியானம் செய்கிறவராயிருக்கிறார். பாருங்கள், அதை உங்களுக்கு வியாக்கியானம் செய்ய யாரும் வேண்டியதில்லை. நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள சித்தமுடையவர்களாகும் போது, தேவனே அதை உங்களுக்கு வியாக்கியானம் செய்து தருகிறார். பாருங்கள். அது தான் ஜீவன், அதுதானே ஜீவனாய் உள்ளது. 246 இயேசு, “வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்” என்றார். அவர்கள் உண்மையில் தேவனுக்கு ஆராதனை செய்கின்றனர். துவக்கத்தில் காயீன் உண்மையில் தேவனுக்கு ஆராதனை செய்தான். "ஆனால் வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்.” வீண் என்றால் என்ன? "அதனால் ஒரு உபயோகமுமில்லை ." 247 அவர்கள், "நான் இதை செய்கிறேன். நான் ஆவியில் நடனமாடுகிறேன். நான், நான் அந்நிய பாஷை பேசுகிறேன். நான், நான் தீர்க்கதரிசனம் உரைக்கிறேன். நான் சுவிசேஷம் பிரசங்கிக்கிறேன்" என்று கூறலாம். ஆனால் அதே சமயத்தில் உங்களுடைய தலைமுடியை வளரவிடாமல் கத்தரிக்கின்றனர். அந்த ஒரு காரியத்தில் அவர்கள் தவறும்போது என்ன நடக்கிறதென்று பாருங்கள். ஆவியானவர் உங்களை அங்கேயே விட்டு சென்று விடுவார். அது தான் நமது சபைகளுக்கு நேர்ந்தது, அவர்கள் தவறினர். 248 "வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள். ஓ, அது ஒரு அழகான ஆராதனை. ஆனால் மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்.” 249 அந்த பரிசேயர்கள் அதிகம் படித்த வேத பண்டிதர்கள். அவர்களுடன் ஒப்பிடக்கூடிய எதையாகிலும் இன்று நாம் பெற்றுள்ளோம் என்று கூற துணிச்சல் கொள்ள வேண்டாம். நிச்சயமாக இல்லை. அவர்கள் ஒவ்வொரு வார்த்தையையும், அது எழுதப்பட்ட விதமாகவே அறிந்திருந்தனர். ஆயினும் அவர்கள் வீணாய் ஆராதனை செய்தனர். அதை சற்று யோசித்துப் பாருங்கள். "வீணாய்” பெரிய அழகிய வேதாகமப் பள்ளிகள், ஆசிரியர்கள், வாலிபர்கள், எல்லாமே, ஆனால் இழந்து போனவர்கள். 250 வனாந்திரத்தில் நடந்தது போல, அவர் "எல்லாரும் வனாந்திரத்தில் அவர்களோடே கூடச் சென்ற ஞானக் கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள். எல்லோரும் மன்னாவைப் புசித்தார்கள்” என்றார். மேலும் இயேசு, “அவர்கள் ஒவ்வொருவரும் மரித்தார்கள்" என்றார். மரணம் என்பது, "நித்தியமாக பிரிக்கப்படுதல்" என்றே பொருள்படுகிறது. ஏன்? அவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தை விசுவாசிக்க தவறினர். 251 ஓ, உங்களை இவ்வளவு நேரம் பிடித்து வைக்க எனக்கு விருப்பமில்லை. ஆனால் இதை நான் கூறியே ஆக வேண்டும். பாருங்கள், இதைக் கூற நான் ஒரு நிமிடத்துக்கு மேல் எடுத்துக் கொள்ளமாட்டேன். அவர்கள் ஒவ்வொருவரும் அக்கினி ஸ்தம்பத்தின் கீழ் வெளிவந்து, அவர்கள் வனாந்திரத்தை அடைந்து, தேவனை விசுவாசித்து, பவனி சென்றனர். ஆனால் அவர்கள், தடங்கலைக் கண்ட போது, பத்துபேர் திரும்பி வந்து, "நாம் தேசத்தைக் கைப்பற்ற முடியாது. ஓ, என்னே, அங்கு இராட்சதர் இருக்கின்றனர். அவர்கள் இது, அது, மற்றது, அவர்கள். நம்மால் முடியாது. அது கூடாத காரியம்” என்றனர். 252 ஆனால் காலேபும் யோசுவாவும் என்ன செய்தனர்? அவர்கள் ஜனங்களை அமர்த்தினர். அவர்கள், "நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம்" என்றனர். ஏன்? அந்த ஜனங்கள் அவர்களால் என்னக் காண முடிந்ததோ, பாருங்கள், அவர்களால் காண முடிந்ததையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் காலேபும் யோசுவாவும் தேவன் அளித்த வாக்குத்தத்தத்தை நோக்கிக் கொண்டிருந்தனர். தேவன், "அந்த தேசத்தை உங்களுக்கு நான் கொடுத்தேன். நீங்கள் போய் கைப்பற்றுங்கள்" என்றார். 253 இப்பொழுது எபிரேயர் 6-ம் அதிகாரத்திலுள்ள வசனத்தை நான் எடுத்துரைக்க கூடுமானால் நலமாயிருக்கும், "ஏனெனில், ஒரு தரம் பிரகாசிக்கப்பட்டும், பரம் ஈவை ருசி பார்த்தும், இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசி பார்த்தும், மறுதலித்துப் போனவர்கள்.” 254 வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு சென்று, அங்கிருந்த திராட்சை பழங்களைப் புசித்த அந்த நபர்களைப் போல், ஆனால் வார்த்தையைப் பின்பற்றும் விஷயத்துக்கு வந்தபோது அவர்கள், "நம்மால் அதைச் செய்ய முடியாது” என்றனர். அவர்கள் வனாந்திரத்தில் அழிந்து போயினர். 255 அந்த நிலையைத்தான் நாம் அடைந்துள்ளோம். நாம் தேவனுடைய நல்வார்த்தையை ருசிபார்த்தோம். ஆனால் முழு வாக்குத்தத்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்னும் போது, "இல்லை, இல்லை, நாம் அதைச் செய்ய முடியாது. பாருங்கள். ஏனெனில் வேத பண்டிதர் இன்னார் இன்னார், அல்லது இன்னும் வேறு சிலர் நாம் அதைச் செய்ய முடியாது என்று கூறுகின்றனர். அது அப்போஸ்தலர்களுக்கானதாம். அது வேறோரு நாளுக்கானதாம்” என்று கூறி விடுகிறோம். அங்கேயே நீங்கள் மரித்து விடுகின்றீர்கள். 256 பாருங்கள், எல்லா வேத வாக்கியங்களும் ஒன்றாக இணைகின்றன. அதனுடைய ஒவ்வொரு வார்த்தையும், ஒன்றாக இணைகின்றது. அது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட எந்த தத்துவத்திலும் முறைமையினாலும் அளிக்கப்பட முடியாது. அது பரிசுத்த ஆவியானவரால் மாத்திரம் வெளிப்படவேண்டும். இயேசு, "பிதாவே, இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன்” என்றார். 257 வேகமாக நம்மால் முடிந்தவரை நாம் அடுத்த கருத்துக்கு செல்வோம். "வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்.” அந்த படித்த மேதைகளான பரிசேயர்கள், ஓ, அவர்கள் நல்லொழுக்கமுள்ளவர்கள். ஆனால் அவர்கள் இயேசுவினால் "பிசாசுகள்" என்றழைக்கப்பட்டனர். அந்த படித்த வேத பண்டிதர்கள், இயேசு, "நீங்கள் பிசாசுகள், உங்கள் பிதாவின் கிரியைகளையே நீங்கள் செய்வீர்கள். நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளை அலங்கரிக்கறீர்கள். உங்களுக்கு முன்னிருந்த உங்கள் பிதாக்களும் அதையே செய்தார்கள்...' என்றார். தீர்க்கதரிசிகள் அந்த மார்க்க சம்பந்தமான முறைகளை கிழித்தெறியவே தோன்றினர். அதைத்தான் அவர்கள் செய்தனர். 258 தீர்க்கதரிசிகள்! யாரிடத்தில் வார்த்தை வருகிறது, ஒரு வேத பண்டிதரிடத்திலா அல்லது ஒரு தீர்க்கதரிசியினிடத்திலா? (சபையோர், "தீர்க்கதரிசியினிடத்தில்" என்கிறார்கள். - ஆசி.) வேத பண்டிதர்களிடத்திலும், வேதாகமம் பள்ளிகளிடத்திலும் அது வருவது கிடையாது. அது எப்பொழுதும் தீர்க்கதரிசிகளிடத்தில்தான் வருகிறது. தேவன் தமது முறைகளை ஒருபோதும் மாற்றுவதில்லை. எப்பொழுதும் அவர் அதே முறையை கையாண்டு வருகிறார். ஒரு குழுவுக்கல்ல, ஒரு தனிப்பட்ட நபருக்கே! ஆம், ஐயா, ஒரு தீர்க்கதரிசிக்கே. அவர்கள் சொன்னார்கள்.... 259 இயேசு, "உங்கள் பிதாக்கள் தீர்க்கதரிசிகளைக் கொலை செய்து அவர்களை அடக்கம் பண்ணின கல்லறைகளை நீங்கள் அலங்கரிக்கிறீர்கள்” என்றார். அவர்கள் அதையே சாத்தான் குருடாக்கிப் போட்ட வேதாகமப்பள்ளிகளில் செய்து வருகின்றனர். புரிகிறதா? 260 இப்பொழுது, பெந்தெகொஸ்தேயினரே, உலக சபைகளின் ஆலோசனை சங்கத்திலிருந்து விலகியிருங்கள். இப்பொழுது, இங்குள்ள ஊழியர்களே நீங்கள், நீங்கள் இந்த ஜனங்களுக்கு தலைமை அலுவலகத்தில் எழுதுங்கள். நீங்கள் அசெம்பிளீஸ் ஸ்தாபனத்துக்கு எழுத வேண்டிய அவசியமிராது. ஏனெனில் அவர்கள் அதனுடன் எந்த தொடர்பும் கொள்ளக் கூடாது என்று தீர்மானம் செய்து விட்டனர். பாப்டிஸ்டு சகோதரர்களே, நீங்களும் அதிலிருந்து விலகியிருங்கள். அது வந்து கொண்டிருக்கும் மிருகத்தின் முத்திரை என்று உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா? நீங்கள் வேத வாக்கியங்களை குறித்து அறிந்திருப்பீர்களானால், அதை விழுங்கப்போவது யாரென்று உங்களுக்கு தெரிந்திருக்கும். வார்த்தை உங்களில் பிரதிபலிக்குமானால் அந்த காரியத்திலிருந்து விலகியிருங்கள். உங்கள் ஸ்தாபானம் அதற்குள்ளாக விரைந்து ஓடும். நீங்களும் அதில் சேராவிட்டால் உங்கள் ஸ்தாபனம் உங்களை சபையிலிருந்து தள்ளிவிடும். நீங்கள் ஸ்தாபனத்தில் இருந்து கொண்டு அதில் சேராமல் இருக்க முடியாது. நீங்கள் அதில் சேர வேண்டும். இல்லாவிடில் உங்கள் ஸ்தாபனத்தை விட்டு வெளிவரவேண்டும். 261 அப்பொழுது நீங்கள் ஸ்தாபனத்தை சேர்ந்திருக்கவில்லை என்பதை காண்பிக்கிறீர்கள். முற்றிலுமாக. நீங்கள் அப்படி செய்வீர்களானால், தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். எத்தனைபேர் அப்படி செய்வார்கள் என்று கூற முடியாது. ஆனால் சிலர் அப்படி செய்வார்கள், சந்தேகமேயில்லை. ஆம் ஐயா. 262 வஞ்சிக்கப்பட்டவர்கள், இயேசு அவர்களை “பிசாசுகள்” என்றைழைத்தார். ஆனால் இயேசு அங்கு நின்று கொண்டு, (என்ன) ஒவ்வொரு சோதனையையும், அவர் அதை வார்த்தையினால் கடிந்து கொண்டு, வார்த்தையில் அங்கே நிலைத்திருந்தார். தேவன் அதை ரூபகாரப்படுத்தினார். 263 அன்றொரு இரவு நான் மைக்கேல் ஆஞ்சலோவைக் குறித்து பிரசங்கம் செய்தது போல், எத்தனைபேர் ஃபாரஸ்ட்லாண் என்ற இடத்தில் உள்ள மைக்கேல் ஆஞ்சலோ உண்டாக்கின மோசேயின் சிலையைக் கண்டிருக்கிறீர்கள்? அதை முதன் முறை நான் அங்கு சென்றுக் கண்டபோது, அது என்னைக் கவர்ந்தது. மைக்கேல் ஆஞ்சலோ ஏறக்குறைய தன் வாழ்நாள் முழுவதும், மோசே எப்படியிருந்தான் என்று தன் கற்பனையில் கொண்டிருந்த கருத்து அனைத்தையும் சின்னமாக உருவாக்கினான். அவன் மரிப்பதற்கு முன்பு அந்த சிலையை உண்டாக்கி முடித்து விட வேண்டுமென்று எண்ணினான். அவன் கல்லை இங்கு செதுக்கி, அங்கு உடைத்து, இங்கு மெருகேற்றி, இப்படியாக அநேக ஆண்டுகள் செலவழித்தான். முடிவில் அநேக ஆண்டுகள் கழித்து, ஒருநாள் அவன் அந்தச் சிலையை செய்து முடித்தபோது, அவன் கையில் ஒரு கந்தை துணியை வைத்துக்கொண்டு இப்படி பின்னோக்கி நின்று, அதை இப்படி பார்த்தான். அவன் மோசேயைக் குறித்து கேள்விப்பட்ட அன்று முதல் தன்னுடைய மனதில் மோசே எப்படி இருப்பான் என்று கொண்டிருந்த கற்பனை சிலை வடிவில் அவனுக்கு முன்பாக நின்றது. அவனுடைய வேலைப்பாட்டினால் அவன் அதிக உற்சாகம் கொண்டு, ஒரு சுத்தியலைக் கையிலெடுத்து அந்த சிலையின் காலில் அடித்து, "மோசே பேசு” என்றானாம். மோசேயின் சிலை அவ்வளவு தத்ரூபமாக இருந்த காரணத்தால் அது பேசும் என்று அவன் எண்ணினான். காலில் ஏற்பட்ட பழுது இப்பொழுதும் உள்ளது. அது முழுமையான ஒரு பரிபூரண சிலையாக அமைந்துள்ளது, ஆனால் இப்பொழுது அதன் வலது காலில் ஒரு துண்டு உடைந்து வந்து விட்டது. ஃபாரஸ்ட் லானில் அதை சென்று காணுங்கள். நீங்கள் கதவுக்குள் நுழையும் அந்த இடத்தில், மூல சிலையைப் போல் உண்டாக்கப்பட்ட சிலையை காணலாம். மைக்கேல் ஆஞ்சலோவின் மோசே, அவனுடைய சிறந்த வேலைப்பாடு. அவனுடைய வாழ்க்கையை முத்தரித்தது. 264 தேவன் ஒரு சிறந்த சிற்பி, உண்மை . அவர் தம்மைப் பிரதிபலிக்க மனிதனை தமது சாயலிலே உண்டாக்கினார். அவர் வார்த்தையாயிருக்கிறார். அவர் என்ன செய்தார்? அவர் ஆதாமைச் சோதித்தார், அவன் தோல்வியடைந்தான். மோசே தோல்வியடைந்தான். மற்றொல்லாருமே தோல்வியடைந்தனர். ஆனால் இங்கு பரிபூரணமான ஒருவர் இருக்கிறார், அல்லேலூயா (அது என்ன?) அவர் மாம்சத்தில் தோன்றிய தேவனேயன்றி, அதைக் காட்டிலும் குறைவுள்ளவர் அல்ல. அவரில் பிரதிபலித்த வார்த்தை தேவத்துவத்தின் பரிபூரணத்தை மாம்சத்தில் கொண்டு வந்தது; ஒரு தீர்க்கதரியல்ல, இருப்பினும் அவர் தீர்க்கதரிசியாயிருந்தார்; ஒரு மனிதனல்ல, இருப்பினும் அவர் மனிதனாயிருந்தார். 265 யூதர்களே, அவர் உங்களுடையவர் என்று உரிமை கோர முயற்சிக்காதீர்கள். அவர் யூதனுமல்ல, புறஜாதியுமல்ல. அவர் தேவன். பாருங்கள்? உங்கள் இரத்தம் எதுவோ, அது தான் நீங்கள், பாருங்கள். நீங்கள் மாம்சமாயிருக்கிறீர்கள் என்பது உண்மை தான். உண்மையாகவே, பரிசுத்த ஆவி மரியாளுக்கு உணர்ச்சியைக் கொடுத்ததன் விளைவாக அவள் கர்ப்பந்தரிக்கவில்லை. பிதாவாகிய தேவன் ஒரு கிருமியை, ஒரு முட்டையை மரியாளுக்குள், அவளுக்குள் ஒரு இரத்த அணுவை சிருஷ்டித்தார், அது தேவனுடைய இரத்தமாயிருந்தது. 266 இரத்தம் ஆணிலிருந்து உண்டாகின்றது. எனவே அது. செந்நிற இரத்த அணுக்களும், இரத்தமும் தகப்பனிலிருந்து வர வேண்டும். ஆகையால் தான் ஒரு குழந்தை காச நோய் போன்ற தாய்க்குள்ள வியாதியினால் பாதிக்கப்படுவதில்லை. தாயின் சுவாசத்தின் வழியாக அது குழந்தைக்கு பரவ வழியுண்டு. ஆனால் அதை தாயிலிருந்து பிறப்பின் மூலம் பெறமுடியாது. ஏனெனில் அது பரவுவதற்கு அதில் தாயின் இரத்தம் இல்லை . 267 ஆனால் இயேசுவுக்கு யூதனின் இரத்தமோ அல்லது புறஜாதியின் இரத்தமோ இருக்கவில்லை. அது யேகோவாவே சிருஷ்டித்த இரத்தமாகும். அவர் தேவனுடைய இரத்தமாய் இருந்தார். நாம் தேவனுடைய இரத்ததினால் இரட்சிக்கப்படுகிறோம் என்று வேதம் கூறியுள்ளது. அது ஒரு யூதனின் இரத்தமும் அல்ல, ஒரு புறஜாதியின் இரத்தமும் அல்ல. அப்படிப்பட்டது உடலுறவின் மூலம் வரும் இரத்தம். ஆனால் இதுவோ தேவனுடைய இரத்தமாயிருந்தது. 268 இப்பொழுது கவனியுங்கள். அவர் அந்த பரிபூரணமானவரைக் கண்டபோது, அவரை அடித்து பழுதுபடுத்தினார். "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டார்” என்று ஏசாயா உரைத்துள்ளான். அவர் என்னவாயிருந்தார்? அவர் பரிபூரண வார்த்தை பிரதிபலித்த அப்பமாயிருந்தார், அதை ஒவ்வொரு மனிதனும் புசித்து பிழைக்க வேண்டும். அவர் அரைக்கப்படு, நான்கு சுவிசேஷங்களிலும், வேதாகமத்தின் அறுபத்தாறு புத்தகங்களிலும் போடப்பட்ட தேவனுடைய வார்த்தை என்னும் கோதுமையாக இருந்தார். மனிதன் அதைக் கொண்டு மாத்திரமே பிழைக்க முடியும், அதன் மூலமாக மட்டுமே, அதன் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைக்க முடியும். ஆமென். அதுவே மைக்கேல் ஆஞ்சலோவின் சிறந்த வேலைப்பாடு. தேவன் தம்மை ஒரு மனிதனில் பிரதிபலிப்பதைக் காணவேண்டுமென்று கருதி, அந்த பரிபூரணமனிதனை தம் சொந்த சாயலிலே உண்டாக்கினார். ஓ, என்னே, என்ன ஒரு மனிதன்! அவர் நம்மெல்லாருக்காகவும் மரிக்க வேண்டியதாயிருந்தது. நாம் அதன்பேரில் பேசி நீண்ட நேரம் தரிக்கக் கூடும். ஆனால் நமக்கு நேரமில்லை. அவர் நம்மெல்லாருக்காவும் மரிக்க வேண்டியதாயிருந்து. பரிபூரணமற்ற நாம் அவருடைய வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் பங்கு கொண்டு பரிபூரணமடைய வேண்டுமென்று கருதி, பரிபூரணமான அவர் மரித்தார். பிறகு நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக தேவன் அவரை எழுப்பி, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் மேல் நம்மை உரிமையுள்ளவர்களாக்கினார். அவர் இப்பொழுது இங்கிருந்து கொண்டு, நாம் பிழைத்திருக்கும்படிக்கு, ஒவ்வொரு வார்த்தையையும் நமக்கு அருளுகிறார். 269 இப்பொழுது வேகமாக, அதன் பிறகு நாம் முடிப்போம். இப்பொழுது, மணவாட்டியாகிய இரண்டாம் ஏவாள். 270 இப்பொழுது, முதலாம் மணவாளன், ஆதாம் : அது அநேக தீர்க்கதரிசிகளின் வழியாக வந்து, பரிபூரணமடைந்து, மற்றவர்களுக்கு அப்பமாக இருப்பதற்காக மரிக்க வேண்டியிருந்தது. 271 ஏவாளைக் குறித்தென்ன? அவளும் அதையே செய்ய வேண்டும். ஆனால் இயேசு வந்தபோது... ஞாபகம் கொள்ளுங்கள். ஏவாள் ஸ்திரீயாயிருந்தாள். சபையானது வேதாகமத்தில் எப்பொழுதுமே ஒரு ஸ்திரியாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் அவள் மணவாட்டியாயிருக்கிறாள். இப்பொழுது அவள் என்ன செய்தாளென்று கவனியுங்கள். அவர் அவளுடைய போதகத்தை கைக்கொள்ள இணங்க வைக்க வேண்டுமென்று அவள் முயன்றாள். அவர்கள் நினைத்ததை பிரசங்கிக்கும் வரைக்கும் அவர் ஒரு மகத்தான நபராயிருந்தார். 272 ஆனால் ஒரு நாள் அவர், "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" என்று கூறிப் பேசத் துவங்கினார். 273 "ஓ, உன்னை தேவனுக்குச் சமமாக்கிக்கொள்கிறாய். பாருங்கள், ஓ, என்னே! அந்த நபரிடம் இனிமேல் நாங்கள் எந்த தொடர்பும் கொள்ளமாட்டோம்." 274 அவர், "நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமல் இருந்தால்" என்பது போன்ற இந்த மற்ற அநேக காரியங்களை கூற ஆரம்பித்தார். அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு மருத்துவர் என்ன நினைத்திருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? சாதாரண அறிவு கொண்ட எந்த மனிதனும், "நீங்கள் என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தைப் பாணம் பண்ண வேண்டும்" என்பதைக் கேட்டபோது, என்ன நினைத்திருப்பான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 275 அவர்கள், "இந்த மனிதன் இரத்தத்தைக் குடிக்கும் பூதம், போதகர் அல்ல, அந்த மனிதனிடமிருந்து விலயிருங்கள். அவர் ஒரு பைத்தியக்காரர். அவரிடமிருந்து விலகியிருங்கள்” என்று கூறியிருப்பார்கள். 276 ஆனால் அவர் கூறினது சத்தியமாயிருந்தது. பாருங்கள். அது சத்தியமாயிருந்தது. "நீங்கள் அதை புசியாமல் இருந்தால், நீங்கள் அழிந்து போவீர்கள். நீங்கள் அதை புசிக்காவிட்டால், நீங்கள் யாவரும் மரிப்பீர்கள்." 277 அது இன்றைக்கும் அதேக் காரியமாய் உள்ளது. அப்பமும் திராட்சை ரசமும் ஒரு அடையாளமாயுள்ளது. அந்த இயற்கை பொருட்களைக் கொண்டு நீங்கள் திருப்தியடைய வேண்டாம். நீங்கள் வார்த்தையாகிய கிறிஸ்துவைப் புசிக்க வேண்டும். அப்படித்தான் நீங்கள் பிழைப்பீர்கள். "புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்” ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்தின விசேஷம் முடிய முழு வேதாகமமும். 278 இப்பொழுது இரண்டாம் ஏவாள், அவளைக் கவனியுங்கள். அவள் அவரைப்போல் புதிதாக சிருஷ்டிக்கப்பட்டாள். பெந்தெகொஸ்தே நாளில் அவள் ஆவியினால் நிரப்பப்பட்டு, வார்தையினால் போஷிக்கப்பட்டாள். ஆமென். நான் இப்பொழுது பக்தி பரவசப்படுகிறேன். எனக்கு நல்லுணர்வு தோன்றுகிறது. அந்த முதலாம் சபை, அந்த முத்தாலம் ஏவாள் கிறிஸ்துவின் மணவாடியாக இருக்க வேண்டியவள். எத்தனைபேர் அதற்கு 'ஆமென்' என்று கூறமுடியும்? (சபையோர், "ஆமென்" என்று கூறுகின்றனர்.- ஆசி.) அவள் கிறிஸ்துவின் மணவாடியாக இருக்க வேண்டியவள். அவள் பெந்தெகொஸ்தே அன்று பிறந்தாள். அவள் ரோமாபுரியிலிருந்த நிசாயாவில் பிறக்கவில்லை. இங்கிலாந்திலுள்ள லண்டனில் பிறக்கவில்லை, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பிறக்கவில்லை. லூத்தரின் காலத்தில் ஜெர்மனியில் பிறக்கவில்லை, வெஸ்லியின் காலத்தில் இங்கிலாந்தில் பிறக்கவில்லை, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பெந்தெகொஸ்தேயினர் என்று அழைக்கப்படுபவரிடம் பிறக்கவில்லை. அவள் பெந்தெகொஸ்தே நாளில் பிறந்தாள். அவள் ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தாள். அவள் ஆவியினால் நிரப்பப்பட்டு, "தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்” போஷிக்கப்பட்டாள். யூதாசும் கூட... ஓ, அவர்கள் ஒவ்வொரு வார்த்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிருந்தது, அது தேவனுடைய பூமியில் உண்மையாகவே மலர்பூத்து வளரும் மணவாட்டி மரமாக, அவரை சுட்டிக் காண்பிக்கிறது. 279 அவருடைய வாக்குத்தத்தத்தின் வார்த்தை அவரை அவளில் பிரதிபலிக்கச் செய்தது. அவர்கள் பேதுருவின் மேலும் மற்றவர்கள் மேலும் கவனம் செலுத்த வேண்டியதாயிருந்தது. அவர்கள் எந்த வேதாகம கருத்தரங்கிற்கும் செல்லாமலிருந்தனர். ஆனாலும் அவர்கள் அந்த வார்த்தையை அறிந்திருந்தனர். அவர்கள் எந்த வேதாகமப்பள்ளிக்கும் எந்த வேதாகம கருத்தரங்கிற்கும் செல்லவில்லை. அவர்களுக்கு படிப்பு எதுவுமில்லை. ஏனென்றால் அவர்கள் தங்கள் சொந்த பெயரையும் கூட எழுத முடியாமலிருந்தனர். வேதமோ "அவர்கள் படிப்பறியாதவர்களும் பேதமையுள்ளவர்களும்" என்பதாக உரைத்துள்ளது. ஆனால் என்ன நடந்தது? அவர்கள் இயேசுவுடன் கூட இருந்தவர்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியதாயிருந்தது, ஏனென்றால் அவர் அவர்களுக்குள் இருந்து கொண்டு, அவருடைய வாக்குத்தத்தத்தை பிரதிபலித்துக் கொண்டிருந்தார். அல்லேலூயா! தேவனுக்கு மகிமை! அதுவே இந்தக் காலத்தில் நமக்கு தேவையாய் இருக்கிறது. அவருடைய வார்த்தை அவரை சபையாகிய அவளில் பிரதிபலித்தது, அவள் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையிலும் பிழைத்தாள். 280 ஆனால் ஏவாளைப் போல் அவளும் ரோமாபுரியிலிருந்து நிசாயாவில் வார்த்தையிலிருந்து விழுந்து போனாள். அங்குதான் முதன் முதலாக ஸ்தாபனம், அகில உலக கிறிஸ்தவ சபை தோன்றினது. இங்கு வேத பண்டிதர் யாராகிலும் இருக்கிறார்களா? அது உண்மையென்று அறிந்துள்ள வேத பண்டிதர் யாராகிலும் இருக்கிறார்களா? முதலாம் ஸ்தாபனம் ரோமாபுரியிலிருந்த நிசாயாவில் தோன்றினது. தேவன் ஒருபோதும் ஸ்தாபனத்தைக் கொண்டிருக்கவில்லை. இனிக் கொள்ளப்போவதுமில்லை. அது மனிதனால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு தான் அவர்கள் எல்லாரும் 281 நான் ஒரு கிறிஸ்தவனாயிருக்கிறேன், "நீ எந்த சபையைச் சேர்ந்தவன்?” ஒரே ஒரு சபை மாத்திரமே உண்டு. நான் ஐம்பத்தைந்து ஆண்டுகளாக ஒரு பிரான்ஹாமாக இருக்கிறேன். அந்த குடும்பத்தில் நான் சேரவில்லை. அதில் நான் பிறந்தேன். அப்படித்தான் நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிறக்கிறீர்கள். நீங்கள் அவருடைய வார்த்தையின் ஒரு பிரதிபலிப்பாய் இருக்கிறீர்கள். 282 கவனியுங்கள், ஏவாள் விழுந்து போனாள். அது போன்று , இரண்டாம் ஏவாள் ரோமாபுரியிலிருந்த நிசாயாவில் விழுந்து போய், ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொண்டு, வார்த்தைக்குப் பதிலாக கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு, ஜூபிடர் போன்ற அஞ்ஞான விக்கிரகங்களின் ஸ்தானத்தில் பவுல், பர்னபாஸ் இவர்களின் விக்கிரங்களை நிறுவி, சூரிய தேவனையும் சந்திர தேவதையையும் வழிபாட்டில் நுழைத்து, சந்திர தேவதையாகிய அஸ்தரோத்தையும் அதை சித்தரிக்கும் வட்டவடிவமான அப்பத்தையும் எடுத்துக் கொண்டு அவனை ஜூபிடராகிய சூரிய தேவனின் தாயாக்கி விட்டனர். இயேசுவின் பிறந்த நாளை அவர்கள் ஏப்ரல் மாதத்திலிருந்து சூரிய தேவனின் பிறந்த நாளுக்கு மாற்றினர். அவர் ஆட்டுக்கடாக்கள் பிறக்கும் ஏப்ரல் மாதத்தில் பிறந்தார், ஏனென்றால் அவர் ஒரு ஆட்டுக்கடாவாயிருந்தார், அவர்களோ சூரிய தேவனின் பிறந்த நாளுக்கு அதை மாற்றி அமைத்தனர். டிசம்பர் இருபத்தைந்தாம் நாள் சூரிய தேவனுடைய பிறந்த நாள், தேவ குமாரனுடைய பிறந்த நாளல்ல, அந்த நாள் கடந்து செல்லும்போது ஏறக்குறைய ஒரு வித்தியாசம் மாத்திரமே உள்ளது. ஆனால் நாம் ஒவ்வொருவரும் சாண்டா கிளாஸ் விளையாடி, மரங்களை அலங்கரிக்கிறோம். அது போன்ற காரியங்களைச் செய்வது அஞ்ஞான பழக்க வழக்கம். இவையனைத்தும் செய்து நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கிறோம். கிறிஸ்தவ சபைக்கு என்ன நேர்ந்தது? 283 வார்த்தையைப் பிரசங்கித்து சத்தியத்தை எடுத்துரைத்து, அதை தேவன் உறுதிபடுத்தி, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை மக்களுக்கு நிருபிக்கும் அப்படிப்பட்ட ஒருவர் நமது மத்தியில் எப்பொழுதாகிலும் எழும்புவாரா? நமக்கு ஒரு வேதாகமப் பள்ளி தேவையில்லை, நமக்கு ஒரு வேத பண்டிதன் தேவையில்லை. நமக்கு தேவை ஒரு தீர்க்கதரிசியே. அது உண்மை . தேவனும் கூட அதை வாக்களித்துள்ளார். 284 ஏவாள் தன் தோல்வியை சந்தித்தாள். சபையும் அப்படியே செய்தது. அது தன்னை ஸ்தாபனத்துக்கும், மனித விதிமுறைகளுக்கும், அர்ப்பணித்துவிட்டதேயன்றி, ஆவியினால் நடத்தப்படுவதற்கில்லை. அது வார்த்தையிலிருந்து விலகி, கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டது. அதற்கு யார் ஆமென்' என்று கூறமுடியும்? [சபையோர், "ஆமென்” என்கின்றனர். - ஆசி.) நிச்சயமாக. ஆனால் பிராடெஸ்டெண்டுகளாகிய நாம் வார்த்தையுடன் சிலவற்றை கூட்டி, அதிலிருந்து சிலவற்றை எடுத்துப் போட்டதன் விளைவாக அநேக கோட்பாடுகளைக் கொண்டிருக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா? சாத்தான் ஏவாளிடம் கையாண்ட அதே உபாயத்தை சபையிடமும் கையாண்டு அதைக் கைப்பற்றிவிட்டான், வார்த்தை அல்லாத ஒன்றுடன் ஒத்துப்போதல், அங்குதான் அவன் அதை கைப்பற்றினான், வார்த்தையிலிருந்து வித்தியாசப்பட்ட ஒரு கோட்பாட்டை அல்லது ஒரு ஸ்தாபனத்தை ஏற்றுக் கொள்ளுதல். 285 மூல வித்து இரத்த சாட்சியாக மரித்து நிலத்தடியில் சென்றது, ரோமாபுரியின் இயந்திரங்கள் பெந்தேகொஸ்தேயிலிருந்து வளர்ந்து வந்த அந்த கோதுமையை பொடியாக அரைத்து, தொழுமரத்தில் அவர்களை எரித்து, சிங்கங்களுக்கு அவர்களை இரையாக்கினது. அவர்கள் மற்ற கோதுமையைப் போல் நிலத்தடியில் சென்றனர், அது உண்மை. ஆனால் அவரோ அதை சீர்திருத்தத்தின் போது எழுப்பினார். அதே கோதுமை, இரண்டாம் முறை. 286 அவர் இரண்டாம் ஆதாமுக்குச் செய்தது போலவே, ஆதாம் விழுந்த பிறகு, அவர் இரண்டாம் ஆதாமை எழுப்பினார். இரண்டாம் ஆதாம் மரித்து மேலே எடுக்கப்பட்டார். முதலாம் ஆதாம் தன்னுடைய பாவத்தில் விழுந்து அங்கேயே நிலைத்திருந்தான். ஆனால் இரண்டாம் ஆதாம் மனிதனை பாவத்திலிருந்து மீட்பதற்கென விழுந்து, மேலே எடுக்கப்பட்டார். 287 முதலாம் சபை ரோமாபுரியிலிருந்து நிசாயாவில், வேதத்திலிருந்து ஒரு சத்திய வார்த்தையை எடுத்து போட்டதன் நிமித்தமாக விழுந்தது. அங்கு ரோம சபை அவர்களுடைய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் சேர்த்தது. மார்டின் லூத்தர் என்னும் பெயர் கொண்ட ஒரு குருவானவர் எழும்பி, "இது இராப்போஜனம் அல்ல, இது கிறிஸ்துவின் சரீரம் அல்ல. அது வெறும் வட்ட வடிவமான கோஷர் அப்பம். மனுஷன், விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்” என்றார். அவர் அப்பத்தை தரையில் எரிந்து, அதை எதிர்த்தார். அதுவே தியத்திராவின் காலத்தில் பிரகாசித்த முதலாம் நட்சத்திரம். ஆம், ஐயா! விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல். அந்த சிறந்த சிற்பி அவருடைய வார்த்தையைப் பிரதிபலிக்கும் சிறந்த வேலைப்பாடான மணவாட்டியை உண்டாக்கத் தொடங்கினார். 288 ஆனால் லூத்தரின் மரணத்திற்குப் பிறகு லூத்தரன்கள் என்ன செய்தனர்? அவர்கள் சாத்தானை சந்தித்து, ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு மரித்தனர். அதன் பிறகு அது வேறொன்றுமே செய்யவில்லை. அது திரளான ஜனங்களைக் கொண்ட ஒரு ஸ்தாபனமானது. சரி. 289 பிறகு தேவன் மற்றொரு சத்தியத்தை பிரதிபலிக்க எண்ணி, ஜான் வெஸ்லியின் காலத்தில் அதை மறுபடியும் எடுத்தார். ஜான் வெஸ்லி என்ன செய்தார்? அவர் "பரிசுத்தமாக்கப்படுதல் கிருபையின் இரண்டாம் கிரியை” என்றார். தேவன் என்ன செய்தார்? அவர் அதை ஆசீர்வதித்தார். வெஸ்லி ஆங்கிலிகன் சபை, சுவிங்கிலி சபை, இன்னும் மற்றவர்களையும், பிரமாணத்தைக் கடைபிடிப்பவர்களை, சரியாகக் கூறினால், கால்வின் இல்லை கால்வீனிஸ்டுகள் போன்றவர்களை எதிர்த்தார். லூத்தர், "விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்' என்று கூறினார். கிருபையின் இரண்டாம் கிரியை பரிசுத்தமாக்கப்படுதல்" என்றார். அது சத்தியம். அது உண்மை . புரிகிறதா? 290 அதன்பின்னர் அவர்கள் என்ன செய்தனர்? வெஸ்லி, ஆஸ்பரி இவர்களின் மரணத்திற்குப் பிறகு, லூத்தரன்கள் செய்த அதையே இவர்களும் செய்து, ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு மரித்தனர். அதன் நிலையை இப்பொழுது பாருங்கள். 291 அறுவை சிகிச்சைக்கு ஆயத்தமாயிருந்த ஒரு ஸ்திரீக்கு ஜெபம் செய்ய அண்மையில் நான் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அவள், "சகோ.பிரான்ஹாமே, உங்களை நான் அழைத்தேன். உங்களுக்கு என்னைத் தெரியாது. எனக்காக ஜெபிப்பீர்களா? நாளை காலையில் எனக்கு அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது” என்றாள். நான், “நிச்சயம், சகோதரியே” என்றேன். 292 அங்கு வேறொரு மனிதனும், ஸ்திரீயும், ஏறக்குறைய பதினெட்டு வயதுள்ள பையனும் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் என்னைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர். நான் அவர்கள் பக்கம் திரும்பி, “நீங்கள் என்னை மன்னியுங்கள், நான் ஜெபிக்கப்போகிறேன்” என்றேன். அவள் "திரையை இழுத்துவிடுங்கள்" என்றாள். "நீ ஒரு கிறிஸ்தவள் இல்லையா?" என்று கேட்டேன். அவள், "நாங்கள் மெதோடிஸ்டுகள்" என்றாள். 293 அப்பொழுது நான், "அதை நான் கேட்கவில்லை. நான் கேட்டது என்னவென்றால்... நீ மெதோடிஸ்டாக இருந்தால், நான் திரையை இழுத்துவிடுகிறேன். ஆனால் நீ கிறிஸ்தவளாக இருந்தால், திரையை இழுத்து விடக் கூறியிருக்க மாட்டாய்” என்றேன். எனவே, ஆம் அது உண்மை . 294 எனவே, ஒரு மெதோடிஸ்டு அல்லது ஒரு பாப்டிஸ்டு, அல்லது பிரஸ்பிடேரியனாக இருப்பதற்கும், கிறிஸ்தவனாக இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு; காம்ப்பெல்லைட்டாக இருப்பதல்ல, ஆனால் ஒரு கிறிஸ்தவனாக இருப்பது, பாருங்கள். அவள் என்ன செய்தாள்? அதேக் காரியம். 295 பிறகு என்ன நேர்ந்தது? தென் பாகத்திலுள்ள ஒரு சிறு கூட்டத்தை தேவன் தெரிந்து கொண்டார், கோணல் கண்ணுள்ள கருப்பு நிறமுள்ள ஒரு மனிதன். அவர் என்ன செய்தார்? அவர் வரங்களைப் புதுப்பித்தலை ஊற்றினார், அது பெந்தேகோஸ்தே ஆனது. அங்கே பின்னால் அமர்ந்துள்ள சகோதரன்வால்டெஸ் அவர்களைப் போன்று உங்களில் அநேகர் பழங்காலத்தவர்களாயிருக்கிறீர்கள். அவர் எனக்கு ஐந்து வயதாயிருந்தது முதற்கொண்டே பிரசங்கித்துக் கொண்டு வருகிறார். அவருக்கு பெந்தேகோஸ்தேவின் ஆரம்பம் - நினைவிருக்கும். அந்த ஆரம்பகால பெந்தெகொஸ்தேயினரிடையே நீங்கள் ஸ்தாபனத்தைக் குறித்து பேச முடியாது. அவர்கள் அந்த அசிங்கமான காரியத்தை விட்டு வெளிவந்திருந்தனர். அவர்கள் தேவனுடைய செய்தியை பெற்றிருந்தனர். 296 ஆனால் இவர்களும் என்ன செய்தனர்? மற்றவர்கள் செய்ததையே செய்து ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். தற்போது அவர்களுக்கு ஏறக்குறைய முப்பது அல்லது நாற்பது ஸ்தாபனங்கள் உள்ளன. ஒருத்துவம், இருத்துவம், திரித்துவம் போன்றவை. என் வாழ்க்கையில் நான் கேள்விப்படாத அப்படிப்பட்ட பெயர்கள். நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் அந்த இடத்திலேயே மரித்தீர்கள். அவ்வளவு தூரம் தான் உங்களால் செல்ல முடியும். உங்கள் ஸ்தாபனம் இதை ஏற்றுக் கொள்ளாது. உங்கள் மனிதனை நீங்கள் தெரிந்து கொள்கிறீர்கள். "இந்த மனிதன் நம்மைப் போல் விசுவாசிக்காவிட்டால், அவரை இங்கு வைக்காதீர்கள். நம்முடைய ஐக்கியம் அவரை வைத்துக் கொள்ள முடியாது" என்கிறீர்கள். ஓ! 297 கவனியுங்கள், வேகமாக முடிக்கிறேன். ஒரு உண்மையான வித்து வரவேண்டும். அது நடக்க வேண்டும், ஏனெனில் அவர் கறை திரையற்ற மணவாட்டிக்காக வருகிறார். அவர் அதற்காகவே, அதாவது ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தை மணவாட்டிக்காவே வருகிறார். ஓ, அவள் மிகச் சிறிய கூட்டமாக இருப்பாள். இயேசு, "நோவாவின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும். அப்பொழுது எட்டு பேர் மாத்திரமே இரட்சிக்கப்பட்டார்கள்" என்றார். (அது சரியா?) இப்பொழுது எத்தனை பேர்? எனக்குத் தெரியாது. 298 ஆனால், பாருங்கள். மணவாட்டி, அவரவர் காலத்தில் வார்த்தையை ஏற்றுக் கொண்ட அனைவரையும் கொண்டவனாயிருப்பாள். இந்த கடைசிகால கூட்டம் மாத்திரமல்ல. தேவன் இவர்களனைவரையும் இங்கிருந்து எடுத்துகொள்வாரா? ஓ, இல்லை . 299 அது மிகச் சிறிய கூட்டமாயிருக்கும், அது ஆச்சரியமாயிருக்கும். அவர்கள் காணாமற் போவார்கள். அவர்கள் போய் விட்டார்கள் என்று நீங்கள் அறியவுமாட்டீர்கள். இந்த கடைசி நாட்களில் அவர் ஐந்நூறு பேர்களை எடுத்துக் கொள்ளப்பட்டால் எப்படியிருக்கும்? நீங்கள் அதை ஒருபோதும் அறியவும் கூட மாட்டீர்கள். சில நாட்களில், இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர் ஐந்நூறு பேர்களை எடுத்துக் கொள்ளப்பட்டால் எப்படியிருக்கும்? உலகில் அத்தனை பேர் காணாமற்போகின்றனர். அவர்கள் எங்கே என்று அறிவதில்லை. அவர்களைக் குறித்து ஒன்றுமே கேள்விப்படுவதில்லை. கர்த்தராகிய இயேசுவின் இரகசிய வருகையின் போதும் அப்படியே இருக்கும். அவள் எடுத்துக் கொள்ளப்படுவாள். 300 மற்றவர்கள் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டேயிருப்பார்கள், நோவாவின் நாட்களில் நடந்தது போல. “தேவனுக்கு மகிமை, நாங்கள் பெற்றுக் கொண்டோம். அல்லேலூயா” என்று கூறி தங்களுடைய மரணத்துக்கென்று முத்தரிக்கப்படுவார்கள். அப்படித்தான் வேதம் கூறுகிறது. அது தவறிப்போக முடியாது. 301 வரப்போகும் இந்த பரிபூரண மணவாளனை நோவா, மோசே, தாவீது ஆகியோர் பிரதிபலித்ததுபோல, வரப்போகும் பரிபூரண மணவாட்டியை லூத்தர், வெஸ்லி, பெந்தெகொஸ்தேயினர் ஆகியோர் பிரதிபலித்தனர். 302 கவனியுங்கள், ஒவ்வொரு முறையும் அவள் சுட்டிக்காட்டி, அவள் என்ன செய்தாள்? ஒவ்வொரு முறையும் இந்த சபையானது, ஏவாள் செய்தது போன்று, அவள் தன்னுடைய ஆதாமை அவளுடைய புது வெளிச்சத்தை, அவளுடைய திட்டத்தை விசுவாசிக்கும்படி செய்து, அங்கேயே அதனுடன் மரித்துவிட்டாள். “நல்லது, நல்லது, எங்கள் குழு ஒன்றாக சேரும், பாருங்கள், ஓ, நாங்கள் கண்டு கொண்ட எங்கள் புது ஆசீர்வாதங்கள்” போன்றவை. 303 இவையெல்லாம் ஏவாளுக்கு என்ன செய்தது? நமக்கு குறுகிய நேரமே இப்பொழுது உள்ளது. இவையெல்லாம் ஏவாளுக்கு, முதலாம் தாய் சபைக்கு, முதலாம் ஆதாமின் முதலாம் மணவாட்டிக்கு என்ன செய்தது? அது அவளுக்கு என்ன செய்தது? இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் இதனோடு இணங்கப் போகிறதில்லை. ஆனால் அது, "சர்பத்தின் வித்தை” தோன்றச் செய்தது. சரியாக. 304 அவளுடைய முதலாம் குமாரன் ஆதாமின் குமாரன் அல்ல. அப்படி இருந்திருந்தால், அவன் பிறப்புரிமையை பெற்றிருப்பான். வேதாகமம் யூதா நிருபத்தில், "ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கு" என்றுரைக்கிறது. அது சரியா? "ஆதாம் சேத்தைப் பெற்றான்” என்று அவன் தொடங்குகிறான். அப்படியானால் காயீனைக் குறித்தென்ன? யார் பிறப்புரிமையை பெற்றிருந்தான்? காயீன் ஆதாமின் குமாரன் அல்ல. சேத், சேத்தைப் பெற்ற பிறகு, யாரேத், இப்படி வழிவழியாக ஆதாம். "ஏனோக்கு ஆதாமுக்கு ஏழாந்தலைமுறை.” காயீன் ஆதாமின் குமாரனாயிருந்திருந்தால், வேதத்தில் எங்குமே; லூக்காவும் கூட வம்சவரலாற்றைக் கூறும்போது, காயீன் ஆதாமின் குமாரன் என்று கூறவில்லை . அப்படியானால் அவன் யாருடைய குமாரனாயிருந்தான். அவன் ஆதாமின் குமாரனாக இருந்திருந்தால், அவனுடைய முதல் குமாரனாக எல்லா பிறப்புரிமையும் பெற்றிருப்பான். ஓ! 305 அங்குதான் வேறென்றை ஏற்றுக் கொண்ட மாம்சத்துக்குரிய சபை உள்ளது. (உங்களால் அதை புரிந்துகொள்ள முடியவில்லையா?) வார்த்தைக்குப் பதிலாக விபசாரத்தை ஏற்றுக்கொண்டது. பெந்தெகொஸ்தே ஜனங்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி, அவன் ஏவாளில் எதை தோன்றச் செய்தான்? சர்ப்பத்தின் வித்தை. இந்தக் கடைசி நாட்களில் ஸ்தாபனத்தின் மூலம் அது என்ன செய்துள்ளது? மறுபடியும் சர்ப்பத்தின் வித்தை தோன்றச் செய்துள்ளது, வார்த்தையைப் புறக்கணித்தல். அவன் எதை செலுத்தினான்? கனிகளையும் மற்றவற்றையுமேயன்றி, இரத்தத்தை அல்ல. 306 வார்த்தையின் வெளிப்பாட்டின் மூலம், தேவனுடைய வார்த்தை எழுதி வைக்கப்படுவதற்கு முன்பே, "விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான். அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்." அவனுடைய காணிக்கையினால் வார்த்தை அவன் மூலம் பரதிபலித்தது. 307 ஓ, காயீன் சென்று நிலத்தின் கனிகளைக் கொண்டு வந்தான். ஏவாள் ஆப்பிள் பழத்தைப் புசித்ததாக அவன் நினைத்தான். பெரும்பாலான வேதாகமப்பள்ளிகள் இப்பொழுது அதை ஏப்ரிகாட் பழம் என்று மாற்றிவிட்டன. அது விபச்சாரமாயிருந்தது. வேதம் அறிந்துள்ள எவருக்கும் அது உண்மையென்று தெரியும். நிச்சயமாக அது விபச்சாரமாக இருந்தது. 308 கவனியுங்கள், முதலாம் ஏவாள் வார்த்தையிலிருந்து விலகினதன் நிமித்தமாக சர்ப்பத்தின் வித்து தோன்றினது. இரண்டாம் ஏவாள் அதையே ரோமாபுரியிலிருந்த நிசாயாவில் செய்தாள். அவள் எதைப் பெற்றாள்? ஒரு கூட்ட "ஸ்தாபன பிள்ளைகளை. அது உண்மை . ஓ, அவர்கள் நல்லொழுக்கமுள்ளவர்கள்; நிச்சயமாக, அருமையானவர்கள். ஆனால் அதைக் குறித்து என்ன? அவர்களுடைய கோட்பாடுகளின் மூலம் மரித்த நிலையில் உள்ளவர்கள். 309 இப்பொழுதும் அதேதான். காயீன் பெற்ற வார்த்தையின் வெளிப்பாடு இவர்களுக்கும் அதையே செய்துள்ளது. என்ன ? அவளுக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. காலத்தின் முடிவில் இந்த ஏவாளுக்கு இப்பொழுது என்ன வாக்களிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், நான் முடிக்கப் போகிறேன். முடிவு காலத்தில் இந்த ஏவாளுக்கு என்ன வாக்களிக்கப்பட்டுள்ளது? ஐசுவரியங்கள், லவோதிக்கேயா, பெரிய பெயர், பெரிய மனிதன், ஐசுவரியம். "ஆனால் அவள் மரித்து நிர்வாணியாயிருப்பதை அறியாமலிருக்கிறாள்." சபை காலம் அதில் தான் முடிவடைகிறது. 310 ஆனால் அவள் வார்த்தையை மறுதலிக்கிறாள். மத். 24:24 அவளில் நிறைவேறுவதற்கென, அவள் நிறைய இரைச்சலுடன் செல்ல முயன்றாள். அவள் நிறைய இதை, நிறைய சமுதாய புகழ் போன்றவைகளைக் கொண்டிருந்தது. "எங்களுக்கு வல்லமை உள்ளது! தேவனுக்கு மகிமை, அல்லேலூயா, எங்களுக்கு வல்லமை உள்ளது!" என்று இந்த விதமான காரியங்களைக் கூற முயன்று கொண்டிருக்கிறாள். தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து, அதின் பெலனை மறுதலித்தல். அது மிகவும் நெருங்கியிருந்தது, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்... ஒரு மனிதன் ஆவியில் நடனமாடி, அந்நிய பாஷைகள் பேசி, அதே சமயத்தில் சத்தியமாயிருக்கிற தேவனுடைய வார்த்தையை மறுதலிக்கும்போது, அது எப்படி பரிசுத்த ஆவியாக இருக்க முடியும்? அது அவ்வாறு செய்யப்பட முடியாது. 311 "ஒவ்வொரு வார்த்தையும்!” தேவன் ஒரு காரியத்தைக் கூறுவாரானால், அவர் பொருட்படுத்திக் கூறும் அர்த்தம் அதுவே. அதை வேறு எந்த வழியிலும் வியாக்கியானம் செய்யாதீர்கள். வேதம், "அதை யாரும் தனிப்பட்ட விதத்தில் வியாக்கியானம் செய்யக்கூடாது” என்று உரைத்திருக்கிறது. அவர் அதைச் சொன்ன விதமாகவே அதை கூறுங்கள். 312 கவனியுங்கள், ஒரு போலியான வல்லமை. அதைதான் சாத்தான், இயேசுவிடம் உப்பரிகையின் மேல் சென்று அங்கிருந்து தாழகுதித்து தம்மைப் பிரமலமாக்கிக் கொள்ளக் கூறினபோது, அவருக்கு அளிக்க முயன்றான். ஜனங்கள் அப்படி செய்கின்றனர், எல்லோருமே, சபையின் ஆலோசனை சங்கம் கூட. "அதினோடே எழும்பி வரும் உலக சபைகளின் ஆலோசனை சங்கத்துடன் யுத்தம் பண்ணத்தக்கவன் யார்?" என்று வேதம் உரைக்கிறது. நமக்கு நேரமிருந்தால், நாம் அதை பார்க்கலாம், ஆனால் நமக்கு அதற்கு நேரமில்லை.) கவனியுங்கள், இரண்டாம் வார்த்தை ஆதாமாகிய இயேசு; நெருங்கியிருக்கப்போகிற இந்த சபையின் நாட்களில் நடக்கிறதைக் கவனியுங்கள். கடைசி சபை காலம் லவோதிக்கேயா. அதற்கு எத்தனைபேர் "ஆமென்” என்று கூறமுடியும்? [சபையோர், "ஆமென்'' என்கின்றனர். ஆசி.) அவள் என்ன செய்கிறாள்? அந்த மகிமையான கட்டத்திற்குள் அவள் எப்படி செல்கிறாள்? வெது வெதுப்பாக, தேவனற்றவளாக. அவள் என்ன செய்தாள்? 313 இப்பொழுது , ஏவாள் மனப்பூர்வமாக... மனப்பூர்வமாக அல்ல. ஆனால் அறியாமையின் விளைவாக வஞ்சிக்கப்பட்டதை ஆதாம் கண்டு, அவளை மீட்பதற்கென அவளுடன் வெளியே நடந்து சென்றான். அது சரியா? வேதம், "ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை ” என்று உரைக்கிறது. ஏவாள் வஞ்சிக்கப்பட்டாள். அந்தக் காரணத்தினால்தான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேதம் ஸ்திரீக்கு தடை விதிக்கிறது. புரிகிறதா? ஆதாம் மீறுதலுக்கு உட்படவில்லை , ஏவாள் வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். ஆகையால் தான் அவள் உபதேசம் பண்ணவும், புருஷன் மேல் அதிகாரம் செலுத்தவும் கூடாது. அப்படித்தான்-அப்படித்தான் வார்த்தை உரைக்கிறது. 314 நீங்களோ, "இதை வேறுவிதமாக...” என்று கூறலாம்? இது என்ன செய்கிறது, அது என்ன செய்கிறதென்று எனக்குக் கவலையில்லை. சகோதரனே, சகோதரியே, வார்த்தை என்ன கூறுகிறதென்பதையே நான் உங்களுக்குக் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். வார்த்தை என்னக் கூறுகிறது என்பதையே பாருங்கள். நாம் வார்த்தையினால் பிழைக்கிறோம், ஏதோ ஒரு அத்தாட்சியினால் அல்ல, அல்லது மாம்சபிரகாரமான ஏதோ ஒன்றினால் அல்ல, அல்லது ஏதோ ஒரு அனுபவத்தினால் அல்ல. அதற்கு இதனோடு எந்த ஒரு சம்பந்தமுமில்லை. வார்த்தையை மறுதலிக்கும் எந்த விதமான அனுபவமும் கிரியை செய்யாது. "அந்நாளில் அநேகர் என்னை நோக்கி, 'நான் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறேன். நான் பிசாசுகளைத் துரத்தினேன். நான் அந்நிய பாஷைகளைப் பேசினேன். நான் இந்த எல்லாக் காரியங்களையும் செய்தேன். தெய்வீகத்தில் பாண்டித்திய பட்டம் பெற்று சுவுசேஷத்தைப் பிரசங்கித்தேன்" என்று சொல்வார்கள். அப்பொழுது, 'நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே என்று சொல்லுவேன்” என்றார். வார்த்தை இவ்வாறு கூறுகிறதென்று அறிந்த போதிலும், ஏதோ ஒரு ஸ்தாபனம் அல்லது ஒரு முறைமைக்காக அதை கைவிட்டு ஒப்புரவாகுதல். ஓ, நண்பனே, உன்னை சிநேகிக்கும் ஒரு அருமை சகோதரன் என்னும் முறையில் உன்னை எச்சரிக்க விரும்புகிறேன். கூர்ந்து கவனியுங்கள். 315 இப்பொழுது, ஏவாள் வஞ்சிக்கப்பட்ட காரணத்தால், ஆதாம் அவளுடன் வெளியே நடந்து சென்றான். ஆனால் இந்த லவோதிக்கேயா சபை வித்தியாசமான செயலைப் புரிந்தது. ஆம் ஐயா, ஏனென்றால் அவள் அவரை அவளுடைய படுக்கையிலிருந்து, அவருடைய அறையிலிருந்து துரத்திவிட்டாள். அவர் வெளியே நின்று கொண்டு, கதவைத் தட்டி, உள்ளே வர முயன்று கொண்டிருக்கிறார். அதே சமயத்தில் அவள் கலாச்சாரமுள்ளவள், அவள் உயர்ந்த நிலையில் உள்ளவள். ஓ, என்னே, அவளுக்கு ஒரு குறைவுமில்லை என்று அவள் சொல்லிக் கொள்கிறாள். ஆனால் அவள் நிர்வாணி, பரிதபிக்கப்படத்தக்கவள் என்பதை அறியாமலிருக்கிறாள். அந்த சபைதான் கூடுமானல் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும். கவனியுங்கள், அவளுக்கு வல்லமை இருந்தது. போலியான வல்லமை, அவள் வார்த்தையின் ஒரு பாகத்தை மாத்திரம் ஏற்றுக் கொண்டாள். மற்றதை ஏற்றுக் கொள்ளவில்லை. 316 கூறப்பட்ட மிகப் பெரிய பொய் எது? அதில் தொண்ணூற்றொன்பது சதவிகிதம் உண்மை அடங்கியுள்ளது. யாராகிலும் ஒருவர், "வில்லியம் பிரான்ஹாம், இந்த குறிப்பிட்ட தேதியில் டெக்ஸாஸிலுள்ள ஹவுஸ்டனில் இருந்தார், அவர் குடித்து வெறித்திருந்தார்" என்று கூறினால், அது பொய். புரிகிறதா? நீங்கள், "ஓ, இல்லை , அவர் அந்த தேதியில் அரிசோனாவிலுள்ள பீனிக்ஸில் இருந்தார். அவர் கிறிஸ்தவ வர்த்தகர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பொருளின் பேரில் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். அநேகர் அங்கிருந்தனர். அவர்கள் ஏறக்குறைய பத்து முப்பது மணி வரைக்கும் கேட்டுக் கொண்டிருந்தனர்" என்பீர்கள். ஆனால் நீங்கள், "பத்து முப்பது மணிக்குப் பிறகு அவர் என்ன செய்தார் தெரியுமா? அவர் சென்று மதுபானம் வாங்கி அருந்தினார்" என்று சேர்ப்பீர்களானால், இப்பொழுது அது பொய், மற்றதெல்லாம் உண்மை. பாருங்கள். வஞ்சிப்பதற்கென அது உண்மையைப் போலவே காணப்பட வேண்டும். 317 அப்படித்தான் ஜனங்கள் இன்று செய்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் சத்தியத்தைக் கொண்டவர்களாயிருப்பதால், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களையும் அவர்கள் வஞ்சிக்கின்றனர். ஆனால் அதற்கு ஒரு வார்த்தை மாத்திரமே அவசியம். அதை நான் வேதப்பிரகாரமாக நிரூபித்திருக்கிறேன். 318 கவனியுங்கள், அவர் அவளுடன் வெளி நடந்து செல்லவில்லை . அவள் வார்த்தையாகிய அவரை வெளியே துரத்தி, அவரைப் புறக்கணித்தாள். நாம் முடிவுக்கு வரும்போது, இப்பொழுது இது பரிதாபமான காட்சியாயுள்ளது. 319 பாபிலோனில் இருந்தது போல மனிதன் தான் சாதிக்க முயலும் எதையும் நிறுத்தமாட்டான். அவன் நிறுத்தவே மாட்டான். நோவாவின் நாட்களில் நடந்தது போல, எவ்வளவுதான் நோவா பிரசங்கித்து அவர்களை எச்சரித்த போதிலும், அதனால் சிறிது உபயோகமும் இல்லை. ஆகாபின் நாட்களில், அவன் தன்னை நரகத்துக்கு அனுப்பிக்கொள்ள, தன் சொந்த அப்பத்தை உண்டாக்க வேண்டியிருந்தது. அது சரியே. அந்த சங்கிலியின் இணைப்பு அறுபட்டு, அது தன்னை நரகத்துக்கு அனுப்புவதற்காக அவன் தன் சொந்த அப்பத்தை உண்டாக்க வேண்டியிருந்தது. ஆகாபும் யேசபேலும் போல. ஆனால் காரியம் என்னவெனில், அவர்கள் பாவம் செய்ததாக நினைக்கவேயில்லை. அவர்கள் நன்மை செய்து கொண்டிருந்ததாகவே அவர்கள் எண்ணியிருந்தனர். 320 உங்களுக்கு தெரியுமா, "இயேசு, உங்களைக் கொலை செய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டு செய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்." என்றார். என்னுடைய புதிய புத்தகம் வெளி வரும் வரைக் காத்திருங்கள். ரோமன் கத்தோலிக்க சபையையும் பிராடெஸ்டெண்டு சபைகளையும் இணைப்பது தவறு என்று கூறின சிலரை நோக்கி அன்றிரவு அவர்கள் சுட்டனர். என் நண்பனின் கட்டிடத்திற்குள் மூன்று துப்பாக்கி குண்டுகள் சென்றன. அது அரிதாய்க் குறி தவறினது. இந்தப் புத்தகம் வெளியாகும் வரை காத்திருங்கள். அவர்கள் பாவம் செய்து கொண்டிருப்பதாக எண்ணுவதில்லை. அவர்கள் அவர்கள் சரியான காரியத்தை செய்துகொண்டிருக்கிறார்கள் என்றே அவர்கள் எண்ணுகின்றனர். தேவனுக்காக செய்து கொண்டிருப்பதாக அவர்கள் நினைக்கின்றனர். அவர்கள் அதை அறியாமல் இருக்கிறார்கள். 321 சரியான காரியத்தை செய்வதாக நினைத்து யூதர்கள் இயேசுவைக் கொலை செய்தனர். ஏனெனில் அவர்களுடைய சபை உபதேசம் அவர் தவறாயிருந்தார் என்று உரைத்தது. ஓ, அவர் கூறினார். அவர்கள் எந்த அப்பத்தினால் பிழைக்க வேண்டுமென்று கருதப்பட்டனரோ, அந்த அப்பத்தை சிலுவையில் அறைந்தனர். 322 ஆனால், “அவர்களுடைய ஜீவனாக, நித்திய ஜீவனாக அவரை ஏற்றுக் கொண்டு அவர் மூலம் பிழைத்தவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் அவருடைய பாகமாகி, தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.” அது சரியா? 323 அது பேய்க் கொம்மட்டிக் காய்களைப் போல், வேத சாஸ்திரிகளின் பள்ளிகளிலிருந்து வந்த பானையில் சாவு இருந்தது. அவர்களுக்கு ஜீவ அப்பமாகிய இயேசு வேண்டாம். அவர் அவர்களுக்கு வேண்டாம். அவர்கள் அவரை தங்களுடைய சபைக்கு வெளியே தள்ளிவிட்டனர். அவர்கள் அப்படித்தான் செய்ய வேண்டும். அவர்கள் என்ன செய்தாலும் எனக்குக் கவலையில்லை. 324 நீங்கள், “சகோ.பிரான்ஹாமே, நீங்கள் அதை மாற்றி அமைக்கப்போகின்றீர்கள் என்று நீர் நினைக்கிறீரா?" என்று கேட்கலாம். இல்லை, ஐயா, நான் தெரிந்து கொள்ளப்பட்டவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். 325 அவர்கள் அவரை வெளியேத் தள்ளினர். ஏன்? அவர்கள் தங்களுடைய கூழ்பானையை எடுத்து, அதனை உலகத்துடன், சில உபதேசத்தோடு ஒன்றாக கலந்து, ஒரு வேத சாஸ்திரபள்ளி கூழ்ப்பானையாக மாற்றினர். பானையிலுள்ள தோஷத்தைப் போக்க அவர்கள் எலியா தீர்க்கதரிசியின் மாவை ஏற்க மறுக்கின்றனர். 326 அந்தக் காலத்தில் அவர்கள் அதைச் செய்தார்களா? எலியாவிடம் கொஞ்சம் மாவு இருந்தது. அந்த மாவு தான் கிறிஸ்துவாகிய போஜனபலி, அது ஒரே அளவாக அரைக்கப்பட்டிருந்தது. அதிலுள்ள ஒவ்வொரு பொடியும் ஒரே அளவாக அரைக்கப்பட வேண்டும். எலியா அதை பானையில் போட்டபோது, அது தோஷத்தை நீக்கி சாவை அகற்றினது. 327 ஆனால் இன்றைக்கு அவர்கள் பானையில் சாவு உள்ளது. அவர்களுக்கு எலியாவின் மாவு, கிறிஸ்து, அப்பம், வார்த்தை வேண்டாம். "வேண்டாம், ஐயா! அது மதபேதம்” என்கின்றனர். அவர்கள் அதை ஏற்கமாட்டார்கள். நீங்கள் சென்று அதை புசியுங்கள். உலகம் உள்ளது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக மரிப்பீர்கள். பானையில் விஷம் உள்ளது. அவர்கள் தங்கள் வேத சாஸ்திர பானையில் இந்த மாவை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். (இல்லை, ஐயா!) அவர்கள் அதை செய்யவேமாட்டார்கள். இப்பொழுது அவர்கள் அதை வெளியேத் தள்ளி விடுவார்கள். அவர்கள் அதனோடு எந்த சம்மந்தமும் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. 328 இப்பொழுது பெந்தெகொஸ்தே நாளில் உருவான இரண்டாம் ஏவாளாகிய அப்பதானியம், இரண்டாம் ஆதாமாகிய அப்பத்தைப்போல் ரோம் ஆதிக்கத்தினால் உபத்திரவத்துக்குள்ளாகி இரத்த சாட்சியாக மரித்தது. 329 ஆனால் அவளுடைய சகோதரி ஒரு வேசியானாள் (அப்படித்தான் வேதம் கூறுகிறதா?) அது உண்மை . அவள் என்ன செய்தாள்? அவள் உலகத்திற்குள் சென்று பிள்ளைகளைப் பெற்றாள். அதற்கு "ஆமென்” என்று யார் கூற முடியும்? [சபையோர், "ஆமென்” என்கின்றனர். ஆசி.) வெளிப்படுத்தல் 17-ம் அதிகாரம் "வேசியும் அவளுடைய குமாரத்திகளும்." ஆண் அல்ல, பெண், சபைகள். ஸ்தாபனங்கள், அவளை வேசியாக்கியது எது? அவள் வார்த்தையைப் புறக்கணித்து ஸ்தாபனத்தை ஏற்றுக்கொண்டதால், அவள் வேசியாகிவிட்டாள். அவளுடைய குமாரத்திகள் என்ன செய்தனர்? அவர்களும் வேசிகளே, அதேக் காரியம். அவர்களும் வார்த்தையைப் புறக்கணித்து, ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அவளுடைய பிள்ளைகள், குமாரத்திகள், சபைகள், அவர்களைப் பாருங்கள். 330 இப்பொழுது நான் இதை தீர்க்கதரிசனமாக உரைக்கிறேன். நீங்கள் புரிந்து கொள்வீர்களா? பெரிய குடும்பத் தகராறு, ஏறக்குறைய தீர்ந்துவிட்டது. அவர்கள் எல்லாரும் திரும்பி வந்து ஒன்றாக சேருகின்றனர். பண்டைய தாய் தன் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ளப்போகிறாள். எப்படியாயினும் அவர்கள் எல்லாரும் ஒன்றே. அவர்கள் ஒன்றாயிருக்க விரும்புகின்றனர். அதே நேரத்தில், சபையும் தேவனும், சபையும் வார்த்தையும் ஒன்றாக இணைய நேரமாகிவிட்டது. ஏனென்றால் இந்த சபைக்காவே அவர் வருகிறார். அப்படிப்பட்ட அந்த விதமான "ஒரு" குழுவிற்கு அல்ல. இல்லை, ஐயா. 331 ஒரு கோதுமை மணியாயிருக்க வேண்டும். இப்பொழுது இயற்கையை கவனியுங்கள். இந்த கருத்துடன் நாம் முடிக்கப் போகின்றோம். இயற்கையை கவனியுங்கள். ஒரு மனிதன் கோதுமையை விதைக்கிறான். 332 அவர்கள் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளனர். நீங்கள் எல்லாரும் அதைப் படித்திருப்பீர்கள் என்று நான் யூகிக்கிறேன். அநேகமாக வேத பண்டிதர்களாகிய உங்களில் சிலர் படித்திருப்பீர்கள். அது அமைதியான தேவன் என்னும் தலைப்பிடப்பட்டது. நீங்கள் ஒரு கால் அதை புத்தக சாலைகளில் புத்தக விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன். அமைதியான தேவன் என்ற புத்தகம் எப்படி ... நாத்திகன் ஒருவன், "தேவன் ஒருவர் இருப்பாரானால், இருளின் காலங்களில் சிறு பிள்ளைகள் தீயில் போடப்படுவதையும், நீண்ட தலைமுடியைக் கொண்ட ஸ்திரீகள் தங்கள் தலைமுடிதாரில் தோய்க்கப்பட்டு சுட்டெரிக்கப்படுவதையும், அவர்கள் சிலுவையிலறையப்பட்ட இயேசுவின் சொரூபத்தை முத்தம் செய்ய மறுத்ததால் ஒவ்வொரு கையிலும் காளை மாட்டைப் பூட்டி அவர்களை இரண்டாக கிழித்ததையும் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்திருக்க முடியும் என்று எப்படி உங்களால் எதிர்பார்க்க முடியும்? பிள்ளைகள் சுட்டெரிக்கப்படுவதை அவர் பார்த்துக் கொண்டு எப்படி சும்மா இருந்திருக்க முடியும்?" என்று அந்த புத்தகத்தில் அவன் கேட்டிருந்தான். பாருங்கள், அது மாம்சபிரகாரமான மாம்ச சிந்தை. புரிகிறதா? 333 பாருங்கள், கோதுமை மணி நிலத்தடியில் செல்லும்போது, அது அங்கு அழுக வேண்டுமென்று உங்களுக்குத் தெரியுமா? அப்படித்தான் பெந்தெகொஸ்தே சபையும், மீண்டும் ஜீவனைக் கொண்டு வர நிலத்தடியில் போய் மரிக்க வேண்டியதாயிருந்தது. அது மீண்டும் ஜீவனைப் பிறப்பிக்க அழுக வேண்டியதாயிருந்தது. அது சரியா? [சபையோர், "ஆமென்” என்கின்றனர். ஆசி.] இப்பொழுது கவனியுங்கள், இதுவே முடிக்கப் போகும் இந்நேரத்தில் என் கருத்துக்கள். முடிக்கப்போகும் இந்நேரத்தில், நாம் இயற்கையை எடுத்துக்கொள்வோம். தேவன் எல்லாக் காரியங்களுக்குமே இயற்கையுடன் இணையாக கிரியை செய்கிறார் என்பதை உங்களில் எத்தனைபேர் விசுவாசிக்கிறீர்கள்? ("ஆமென்."] 334 பாருங்கள், அவர் உலகத்தை சிருஷ்டித்தார். அவர் ஒரு மனிதனை மீட்கிற அதே முறையிலேயே உலகத்தையும் மீட்கிறார். ஒரு மனிதன் எதை விசுவாசிக்கிறான்? அவன் விசுவாசிக்கிறான், அதன் பிறகு ஞானஸ்நானம் பெறுகிறான்; அதன் பிறகு அவன் இரத்தத்தினால் கழுவப்படுகிறான், பரிசுத்தமாக்கப்படுதல், அதுவே வெஸ்லியின் செய்தி; அதன் பிறகு அவன் பரிசுத்த ஆவியின் அக்கினியினால் நிரப்பப்படுகிறான். அது உலகத்தை அவனிலிருந்து எடுத்துப் போடுகிறது, அவன் ஆவியினால் நிரப்பப்படுகிறான், அதுவே வார்த்தையாயுள்ளது. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், "ஆமென்" என்கின்றனர். ஆசி.) இப்பொழுது என்னவென்று கவனியுங்கள். தேவன் அவருடைய உலகத்தையும் அதே விதமாக மீட்கப்போகிறார். 335 எத்தனை பேரிடம் மணவாளன் மற்றும் மணவாட்டியின் எதிர்கால வீடு என்னும் ஒலிநாடா உள்ளது? பாருங்கள். அதில் இதைக் குறித்து நான் கூறியிருக்கிறேன். கர்த்தர் அதை எனக்கு அளித்தார். அவர் அதை எனக்கு அளிக்கும்போது, நான் அதை உங்களுக்கு அளிக்கிறேன். 336 பாருங்கள், முதலாவது காரியம், ஆதாம் வார்த்தையிலிருந்து விழுந்த காரணத்தால் இந்த உலகம் ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டது. நோவாவின் பிரசங்கம் நீதிமானாக்கப்படுதலைக் கொண்டுவந்தது. தேவன் பூமியை தண்ணீரினால் ஞானஸ்நானம் பண்ணினார். அதன் பிறகு குமாரன் வந்து தமது இரத்தத்தை அதன் மேல் சிந்தி, அதை பரிசுத்தமாக்கி, அது தம்முடையதென்று உரிமை கோரினார். முடிவில் அது அக்கினியினால் சுத்திக்கரிக்கப்படும். அது எல்லா கிருமிகளையும் மற்றெல்லாவற்றையும் எரிக்கும். அது ஆயிரக்கணக்கான மைல்கள் உயரத்தில் ஆகாயத்தில் இருக்கும். 337 அதன் பிறகு என்ன ? "பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்து போயின. நான் புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தை விட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. அப்பொழுது தேவனும் மனிதனும்... 338 இயேசுவோடு அதேக் காரியம், பாருங்கள், அவர் தண்ணீரினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட போது, தன்னுடைய ஆயத்தங்களைச் செய்தபோது, அவர் முதலாவதாக பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டார்; அவர் தம் கரங்களை உயர்த்தின்போது, இதோ புறா இறங்கி வந்து ஆட்டுக்குட்டியானவரின் மேல் தங்கினது. அவர் புறாவை அங்கு வைத்த போது, தேவன் என்ன செய்து கொண்டிருந்தார்.? அந்த ஜீவனின் பாகத்தை அவர் உரிமை கோரினார். அது -அது பூமியின் ஒரு பாகமாக இருந்தது. இயேசு நம்மைப் போல் உணவு உண்டார், இயற்கை உணவை உண்டார். ஆனால் இப்பொழுது தேவன் அதை உரிமை கோரும்போது, எதுவுமே அதை தடுத்து நிறுத்தப் போவதில்லை. மரணம் அதை நிறுத்த முடியாது. அவர், "இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், நான் இதை மறுபடியும் எழுப்புவேன்” என்றார். 339 மனிதனும் ஸ்திரீயும் தேவனிடம் முழுவதுமாக செல்லும்போது, ஏதோ ஒரு கவர்ச்சியினால் அல்லது உணர்ச்சி வசத்தினால் அல்ல, ஆனால் உண்மையில் வார்த்தையும் அவனும் ஒன்றாகும்போது, தேவன் அவனை இரட்சித்து, உலகத்தின் காரியங்களிலிருந்து அவனைப் பரிசுத்தமாக்கி, பரிசுத்த ஆவியின் அக்கினியினால் உலகத்தின் காரியங்கள் அனைத்தையும் அவனை விட்டு எடுத்துப் போட்டு அவனைப் புதிதாக்கி, அவனுக்குள் வாசம் செய்து, தம்மைப் பிரதிபலிக்கிறார். அந்த பரிபூரண மனிதன் அல்லது பரிபூரண ஸ்திரீ வார்த்தையினால் பிழைக்கிறார்கள். பாருங்கள், அதுதான் சுத்திகரிக்கப்பட்ட புவி. அவர் பூமிக்கும் அதே முறையைப் உபயோகப்படுத்தி, அவர் அதை மீட்கிறார். 340 இப்பொழுது கவனியுங்கள். கோதுமை மணி நிலத்தில் விழுகிறது. இப்பொழுது, இயேசுவே நிலத்தில் விழுந்த அந்த கோதுமை மணியாயிருந்தார். அவர் பரிபூரணமாக்கப்பட்ட பின்பு அவருக்குள் ஜீவன் இருந்தது. மோசே எழும்பவில்லை. ஆதாம் எழும்பவில்லை. மற்றவர் யாருமே எழும்பவில்லை. ஆனால் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைத்து, எல்லா விதத்திலும் வார்த்தையைப் பிரதிபலித்தவரே இந்த பரிபூரணமானவராயிருக்கிறார். எத்தனை பேரால் அதற்கு, "ஆமென்” என்று கூற முடியும். [சபையோர், "ஆமென்" என்கின்றனர். ஆசி.) அவர் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைத்தார். என்ன நடந்தது? அவர்கள் அவரைக் கல்லறையில் வைத்தார்கள். ஆனால் மூன்றே நாட்களில் அவர் அதை உடைத்து வெளியே வந்தார். பார்த்தீர்களா? 341 இப்பொழுது சபையானது எடுத்துக் கொள்ளப்படுதலுக்கென்று அந்த பரிபூரணத்தை அடைந்து கொண்டிருக்கிறது. ரோமாபுரியிலிருந்த நிசாயாவில் முதலாம் ஸ்தாபனம் உண்டாக்கப்பட்டபோது, சபை நிலத்தில் விழுந்தது. யாரேனும் அது சரிதான் என்பதற்கு, "ஆமென்” என்று கூறமுடியுமா? [சபையோர், "ஆமென்” என்கின்றனர். ஆசி.] அவள் என்ன செய்தாள்? அவள் தற்காலிக உயிர்த்தெழுதலில் வெளிவந்தாள். அவர் நோவாவின் மூலம் முயன்றது போலவே லூத்தரின் மூலம் முயன்றார். ஆனால் அவர் என்ன செய்தார்? அவர் வார்த்தையில் தவறிப்போய், அவர் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டார். அது என்ன செய்தது? 342 அது மேலே வந்து கொண்டிருக்கும் ஒரு கோதுமை மணியைப் போன்றது. கோதுமை மணி மேலே வரும்போது, முதலில் வருவது என்ன? இரு சிறு முளைகள். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இயற்கையில் என்ன வருகிறது? நாம் இயற்கையை ஆவிக்குரியதோடு ஒப்பிட்டுப் பார்க்கப் போகிறோம், இயற்கை அப்பத்தை ஆவிக்குரிய அப்பத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கப் போகிறோம். என்ன சம்பவிக்கிறது? "இந்த மனிதன் எப்படி அப்பமாக இருக்க முடியும்?" கவனியுங்கள். 343 சபை மேலே வந்தபோது, அது ஒரு சிறு துளிராக இருந்தது, காண்பதற்கு அது நிலத்தடியில் சென்ற கோதுமை மணியைப் போலவே இல்லை. ஆனால் அது ஜீவனைச் சுமக்கும் ஒன்று. புரிகிறதா? இப்பொழுது என்ன சம்பவிக்கிறது? இப்பொழுது அந்த நிலத்தை பயிரிடும் மனிதன், "ஓ, எனக்கு நல்ல கோதுமை பயிர் கிடைத்துள்ளது" என்கிறார். ஆனால் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை. அவர் மறைவாக அதைப் பெற்றிருக்கிறார், என்ன நடந்தது? அடுத்ததாக சுவிங்கிலி தோன்றினார். அது லூத்தருக்குப் பின்பு உண்டான மற்றொரு அசைவு. அப்பொழுதும் அது கோதுமை அல்ல. அது ஒரு முளைகதிர். அதன் பின்னர் தண்டு, கால்வின் போன்ற அநேக கதிர்களைத் தோன்றச் செய்தது. முடிவில் ஆங்கிலிகன் சபை எழும்பினது, எல்லாம் கதிர்கள். பாருங்கள், அவையாவும் ஒரேவிதமாக இருந்தன, அதேக் காரியம். 344 அதன் பிறகு சம்பவித்தது என்ன? கோதுமை மாறுகிறது, தானியம் மாறுகிறது, ஒவ்வொரு காரியமும் மாறுகிறது. அடுத்தபடியாக வருவது ஒரு பட்டுக்குஞ்சம். நீங்கள் அதைப் பட்டுக்குஞ்சம் என்றழைக்கலாம். அதில் என்ன தொங்கிக் கொண்டிருக்கிறதென்று பாருங்கள். சிறு மகரந்தப் பொடிகள். அது கதிரைக் காட்டிலும், நிலத்தடியில் சென்ற மூல கோதுமை மணியைப் போல சற்று அதிகமாக தோற்றமளிக்கிறது. அது சரியா? வெஸ்லியின் செய்தி லூத்தரின் செய்தியைக் காட்டிலும் வேதத்துக்கு நெருங்கியுள்ளது. அது உங்களுக்குத் தெரியும். அது சரியா? இந்த சிறு பட்டுக் குஞ்சங்கள் எல்லாம் யார்? வெஸ்லியின் மெதோடிஸ்டுகள், நசரீன்கள், யாத்திரீக பரிசுத்தர், ஐக்கிய சகோதரர்கள். இவர்கள் யாவரும் பரிசுத்தமாக்கப்படுதலின் கீழ் இருந்தனர். அதிலிருந்து என்ன தோன்றினது? முடிவில் அது என்ன செய்தது? ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு மரித்துவிட்டதே! 345 அதிலிருந்து தோன்றினது பெந்தெகோஸ்தேயினராயிருந்தனர். நீங்கள், "ஓ, சகோதரனே” எனலாம். 346 இப்பொழுது இதை பயபக்தியுடனும் தெய்வீக அன்புடன் நான் கூறுகிறேன். உங்களிடம் நான் தொடக்கத்தில் கூறின சர்வ வியாபியான அந்த மகத்தான பிதா இங்கு பிரசன்னராயிருக்கிறார். இதை நான் தப்பெண்ணம் கொண்டு கூறினால், அவர் என்னை நியாயந்தீர்ப்பார். நான் உண்மையைக் கூறினால், அவர் என்னை ஆசீர்வதிப்பார். நீங்கள் ஜீவனுக்கு நியமிக்கப்பட்டிருந்தால் அதை நீங்கள் புரிந்து கொள்ளும்படிச் செய்வார். 347 முதல் சிறு கோதுமை மணி தண்டிலிருந்து தோன்றும் போது, காண்பதற்கு அது கோதுமை மணியைப் போலவே உள்ளது. அது சரியா? ஆனால் அது என்ன? அது கோதுமை மணி அல்ல. அது தான் மத்தேயு 24:24, "மிகவும் நெருக்கமாயிருந்து கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்.” கவனியுங்கள், காண்பதற்கு அது கோதுமை மணியைப் போலவே உள்ளது. ஆனால் நீங்கள் அதைப் பிடுங்கி உட்கார்ந்து, அணுதரிசியை கொண்டு ஆராய்ந்துப் பார்த்தால், அது கோதுமை மணியின் மேலுள்ள பதராய் மாத்திரமே உள்ளது. அது கோதுமை மணியைப் பாதுகாத்தது, ஆனால் அது சரியாக கோதுமை மணியைப் போலவே காணப்படுகிறது. அது உண்மையென்று எத்தனை பேருக்குத் தெரியும். கைகளையுயர்த்துங்கள்? நிச்சயமாக. ஆனால் அது பதராயுள்ளது. 348 இப்பொழுது பெந்தெகொஸ்தே சகோதரரே, என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். ஆனால் இதுவே சத்தியம். நீங்கள் இயற்கையை எதிர்க்க முடியாது. இயற்கை எல்லாவற்றிலும் அதனுடைய சிருஷ்டிகரான தேவனை வெளிப்படுத்துகிறது. 349 இப்பொழுது அந்தப் பதரை நோக்கிப் பாருங்கள். அது காண்பதற்கு... அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் அந்நிய பாஷைகள் பேசினர். பெந்தெகோஸ்தே நாளில் அவர்கள் எப்படி நடந்து கொண்டார்களோ அப்படியே இவர்களும் நடந்து கொண்டனர். ஆனால் நீங்கள் அதை வெட்டி, அதைப் பார்ப்பீர்களானால், அது பதர்கள் கொண்டதாயுள்ளது. ஒரு நல்ல பூதக் கண்ணாடியைக் கொண்டு அதை பரிசோதித்து பார்த்தால், ஒரு சிறு மணி வளர்ந்து வருவதைக் காண்பீர்கள். அது தான் உண்மையானது. இது அதை சுமப்பதாய் உள்ளது. ஏன்? கோதுமை மணியை பாதுகாக்க அது அங்கு இருக்க வேண்டும். அவை இசைவாக இயங்குகின்றன. அது கோதுமை மணியை பாதுகாக்க வேண்டும். அந்த கோதுமை மணி நிலத்தடியிலிருந்து லூத்தரன்களின் மூலமாகவும் அவர்களுடைய சபைகளின் மூலமாகவும், வெஸ்லியின் மூலமாக பட்டுக்குஞ்சத்தை அடைந்து, இப்பொழுது பதரை அடைந்துள்ளது. பதர் காண்பதற்கு உண்மையானது போல் உள்ளது. "கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் அது வஞ்சிக்கும்” என்று இயேசு கூறினதில் வியப்பொன்றுமில்லை. அது காண்பதற்கு கோதுமை மணியைப் போலவே இருந்து, கோதுமை மணி இருக்க வேண்டிய இடத்தில் உள்ளது. ஆனால் என்ன சம்பவித்தது? அதற்கு முன்பிருந்தவர்கள் செய்ததையே அதுவும் செய்தது; அது ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டது. அது என்னவாயிருந்தது? கோதுமை மணியை சுமக்கும் கருவியாக இருந்தது. 350 இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நாட்களில், எந்த எழுப்புதலுமே கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் வரைக்குமே நீடிக்கின்றது என்று சரித்திரக்காரர் எவரும் அறிவர். அதன்பிறகு அதிலிருந்து ஒரு ஸ்தாபனம் தோன்றிவிடுகிறது. சகோதரனே, சகோதரியே, நான் வாழ்ந்து வரும் இந்த மகத்தான் பதினைந்து ஆண்டு கால எழுப்புதலில், நான் உங்களுடன் வாழ சிலாக்கியம் பெற்ற இக்காலத்தில் இதிலிருந்து ஒரு ஸ்தாபனமும் எழும்பவில்லை. இனிமேல் ஸ்தாபனங்கள் கிடையாது. அவை இருக்காது. பெந்தெகொஸ்தேதான் கடைசி ஸ்தாபனம். இதைப் பாதுகாக்க பெந்தேகோஸ்தே இருக்க வேண்டியது அவசியம். இதை விசுவாசிக்க ஒரு பெந்தெகோஸ்தேகாரர் இல்லாமல் போயிருந்தால், இப்படிப்பட்ட ஒரு செய்தியுடன் நாம் எங்கு சென்றிருப்போம்? 1933-ம் ஆண்டில் ஓஹையோ நதியில் நடந்த சம்பவத்திற்கு மீண்டும் செல்லுங்கள். புரிகிறதா? 351 என்னை மன்னியுங்கள், ஆனால் நீங்கள் சத்தியத்தை அறிய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். எனக்கு இன்னும் அதிக காலம் இல்லை, அது உங்களுக்குத் தெரியும். எனக்கு ஐம்பத்தைந்து வயதாகிறது. ஆனால் நான் இவ்வுலகை விட்டுப் போய்விட்ட பின்பும், இந்த ஒலி நாடாக்கள் நிலைத்திருக்கும். அது உண்மையா, அல்லது இல்லையா என்பதையும், நான் ஒரு உண்மையான ஊழியக்காரனா அல்லது ஒரு கள்ளத் தீர்க்கதரிசியா என்பதை நீங்கள் காண்பீர்கள். நான் உங்களிடத்தில் உரைத்தது ஒன்றுமே இதுவரை நிறைவேறாமல் இருந்ததில்லை, ஆகையால் இதுவும் நிறைவேறும். 352 அது சுமக்கும் ஒரு கருவி. அது அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் கோதுமை வளரத் தொடங்கும் போது ; அக்காலத்து சபையும் முதலில் இயேசுவை சுமக்கும் ஒன்றாக அமைந்திருந்தது. ஆனால் அவர் தேவனுடைய சத்தியத்தை அவர்களுக்கு எடுத்துரைத்தபோது, அவர்கள் அவரை விட்டுப் பிரிந்து சென்றார். இப்பொழுது என்ன சம்பவித்துக்கொண்டிருக்கிறது? ஒத்துழைப்பு இல்லை. ஏன்? அது அப்படித்தான் இருக்க வேண்டும், எனவே கோதுமை சூரியனுக்கு முன்பாக கிடக்க வேண்டியது அவசியம் போல, ஆவிக்குரிய கோதுமையும் குமாரனுக்கு முன்பாக கிடந்து பொன் நிறமான வார்த்தையின் மணியாக ஆக வேண்டும். பாருங்கள். வார்த்தையாக ஆகி, தேவன் மாமிசமாகி, உறுதிபடுத்தப்படுதல். "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்.” வார்த்தையினால் பிழைக்கும் சபையானது, ஸ்தாபனத்தின் மூலம் அல்ல, ஆனால் வார்த்தையாகிய குமாரனின் சமூகத்தில், அது என்னவாகிறது? பெந்தெகொஸ்தே நாளில் நிலத்தடியில் சென்ற அதே வார்த்தையாகிறது. 353 கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருவதற்கு முன்பு இது நடக்குமென்று மல்கியா 4 உரைக்கவில்லையா? அது எத்தனை பேருக்குத் தெரியும்? "அவர் பிள்ளைகளுடைய இருதயங்களை பிதாக்களிடத்திற்குத் திருப்புவார். அது சரியா? " மூல பெந்தெகொஸ்தே பிதாக்களின் விசுவாசத்திற்கு." 354 "அந்த நாளில்," அது லூக்கா 17:20-ல் உள்ளது என்று நான் நினைக்கிறேன். இயேசு, "மனுஷகுமாரன் வெளிப்படும் அந்த நாளில்” என்று கூறியுள்ளார். மனுஷர்கள் அல்ல, "மனுஷகுமாரன்.” ஸ்தாபனம் அல்ல, "மனுஷகுமாரன்," வார்த்தை தானே மறுபடியுமாக ஜனங்களின் நடுவில் வாசம் பண்ணுதல். புரிகிறதா? 355 வார்த்தை தானே உங்களில் மாம்சமாகிறது. நீங்கள் இந்த நேரத்தில், செய்தியின் பிரதிபலிப்பாக விளங்குகிறீர்கள். பாருங்கள். நீங்கள் மறுபடியும் இயேசு கிறிஸ்துவுக்குள்ளிருந்த ஜீவனைக் கொண்டு பிழைக்கிறீர்கள். நீங்கள் குமாரனின் சமூகத்தில் இருக்கிறீர்கள். அப்பொழுது... 356 அதற்கு என்ன நடக்கிறது? சபைக்கு என்ன நடக்கிறது? கவனியுங்கள். முடிவில் கோதுமை தன்னை வெளிப்படுத்தத் துவங்கும்போது, பதர் அதிலிருந்து தன்னை விலக்கிக் கொள்கிறது. என்ன நடந்தது? பதரிலிருந்த ஜீவன் கோதுமைக்குள் சென்று விட்டது. ஜீவன் மாறுவதில்லை, சுமப்பவைதான் மாறுகின்றன. அவை ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்கின்றன. பாருங்கள், கதிர்கள், பட்டுக்குஞ்சம், பதர் போன்றவை. ஆனால் கோதுமை மாற முடியாது. அவர் வார்த்தையிலிருந்தது போல, முதலாம் சபை ஆவியில் நிறைந்து வார்த்தையிலிருந்து கொண்டு, வார்த்தையினால் போஷிக்கப்பட்டது போல, ஸ்தாபனத்தினால் போஷிக்கப்படுவதல்ல, வார்த்தையினால் போஷிக்கப்படுதல், இதுவும் முற்றிலும் வார்த்தையிலுள்ள ஊழியமாகத் திகழும். 357 இப்பொழுது, இயற்கை உள்ளது, மற்றும் தேவனுடைய வார்த்தை உள்ளது. அவரே அந்த அப்பம். “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.' 358 முடிக்கப் போகும் இத்தருணத்தில், ஜெபத்துக்கு முன்பு இங்கு கவனியுங்கள். நான் கூற நினைத்தது இதோ நினைவிற்கு வருகிறது. 359 இப்பொழுது பதர் கோதுமையிலிருந்து விலகவேண்டும். அது தேவனுடைய தீர்மானமாய் உள்ளது. எத்தனைபேர் "ஆமென்” என்று கூறுகிறீர்கள்? [சபையோர், "ஆமென்” என்கின்றனர்.- ஆசி.) கோதுமை முதிர்வடைந்து கொண்டு வருவதால் பதர் அதிலிருந்து விலக வேண்டும். கோதுமை மேலே தோன்றுகிறது. பதர் இனி அங்கு இருக்க முடியாது. அது ஜீவனை சுமந்த ஒரு கருவி மாத்திரமே. அதிலிருந்து ஜீவன் கோதுமைக்குள் சென்று விட்டது. அது தான் காரணம். 360 கவனியுங்கள். நண்பர்களே, நாம் எந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? நமக்கு பதினைந்து ஆண்டுகளாக எழுப்புதல் இருந்து வந்துள்ளது. எத்தனைபேர் அதற்கு "ஆமென்” என்று கூற முடியும்? [சபையோர், "ஆமென்” என்கின்றனர். ஆசி.) அதிலிருந்து எந்த ஸ்தாபனம் எழும்பினது. எதுவுமே இல்லை. அவர்கள் நான் ஸ்தாபனம் உண்டாக்க வேண்டுமென்று முயன்றனர். மேலும், “சகோ. பிரான்ஹாமே, உங்கள் ஊழியத்தை ஸ்தாபனமாக்கிக் கொள்வீர்களா?" என்று கேட்டனர். அது இப்பொழுது நான் அல்ல, என்னைக் குறித்து நான் பேசவில்லை, இக்காலத்தின், இந்நேரத்தின் செய்தியைக் குறித்தே நான் பேசிக்கொண்டிருக்கிறேன். 361 அவர்கள் கனடாவுக்குச் சென்று பின்மாரி சபையைச் சேர்ந்த சில சகோதரர்களை பெற்று நடத்தினர். அது அங்கேயே மரித்தது. சகோதரர்களே, உங்களுக்கு பின்மாரி சபை ஞாபகமுள்ளதா? அது எங்கே போய் விட்டது? மற்றவைகளும் எங்கு சென்று விட்டன? ஆனால் ஸ்தாபனங்களுக்கு அதிலிருந்து என்ன கிடைத்தது? மனம் மாறின கோடிக்கணக்கானவர். அவர்களை இவர்கள் தங்கள் கோட்பாடுகளுக்கு அடிமைகளாக்கி, தாங்கள் ஐசுவரியவான்களாகி, கோடிக்கணக்கான டாலர்கள் செலவில் கட்டிடங்களைக் கட்டி, "கர்த்தர் வருகிறார்" என்று அதே சமயத்தில் அறிவித்து, போதகர்களை வேதாகமப் பள்ளிகளுக்கு அனுப்பி, மனிதரால் உண்டாக்கப்பட்ட வேத சாஸ்திரங்களை அங்கு பயிலச் செய்கின்றனர். லூத்தரன்கள், வெஸ்லியன்கள், இன்னும் மற்றவர்களும் அதையே செய்கின்றனர். அது பதராகி விடுகிறது. 362 ஆனால், தேவனுக்கு ஸ்தோத்திரம். கோதுமை மணி சென்று கொண்டிருக்கிறது. அது வார்த்தையின்படி நாம் வாழும் இக்காலத்தில் உண்மையாயுள்ளது. இயற்கையும் அது உண்மையென்று உறுதிப்படுத்துகிறது. அது எல்லா விதத்திலும் நிரூபிக்கப்பட்டு விட்டது. அப்படியானால் இன்னும் நமக்கு எவ்வளவு நேரம் உள்ளது? என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? உலக சபைகளின் சங்கம் வருவதாக கேள்விப்படுகிறேன். அது அதை பிரிக்கும். அது என்ன செய்யும்? தண்டிலிருந்து அதை வெட்டி எடுக்கும். ஆனால் அவளுக்காக, அவளைக் கொண்டு செல்ல ஒரு 'உயரேத் தூக்கும் சாதனம்' காத்திருக்கிறது. அவள் இக்காலைகளில் ஒன்றில் வீடு செல்வாள். ஓ, ஆம், நீங்கள் புரிந்து கொண்டால், "ஆமென்” என்று கூறுவீர்களா? (சபையோர், "ஆமென்” என்கின்றனர்.--ஆசி.) 363 உலகம் அதை நம்புகிறதில்லை என்பதை நான் அறிவேன். அவர்களால் அதை நம்ப முடியாது. அவர்களுக்காக நான் வருந்துகிறேன். ஏனெனில் "என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்." அவனுடைய பெயர் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்குமானால், அவன் நிச்சயமாக வார்த்தையை அடையாளம் கண்டு கொள்வான். அவன் கண்டு கொண்டே ஆக வேண்டும். ஏனெனில் நீண்டகாலமாக உரைக்கப்பட்டு வந்துள்ளது. அது உண்மை என்று அவ்வளவு பரிபூரணமாக ரூபகாரப்படுத்தப்பட்டு வருகிறது. 364 நமக்கு இனிமேல் வேறு ஸ்தாபனங்கள் இருக்காது. ஆனால் எல்லா ஸ்தாபனங்களும் ஒன்றாக இணையும். அவள் எதற்கு உபயோகம்? போய் அவர்கள் வைக்கோலை என்ன செய்கின்றனர்? அதைச் சுட்டெரிக்கின்றனர். இயேசு, "தூதர்கள் வந்து கோதுமையை களஞ்சியத்தில் சேர்ப்பார்கள்” என்றார். என்ன சம்பவிக்கும்? "தண்டுகள், முட்கள், பதர்கள் அவியாத அக்கினியிலே சுட்டெரிக்கப்படும். உங்களுக்குப் புரிகிறதா? முதலில் என்ன செய்யப்பட வேண்டும்? தூதர்கள் முதலில் சென்று களைகளைக் கட்டுகின்றனர். அது சரியா? பாருங்கள், அவர்கள் தங்களை ஒரு பெரிய ஸ்தாபனமாக ஒன்றாக கட்டிக் கொள்கின்றனர். இனி வேறு ஸ்தாபனங்கள் கிடையாது. 365 கோதுமை இங்குள்ளது. தேவனுக்கு ஸ்தோத்திரம். கோதுமை இங்குள்ளது. கிறிஸ்து இங்கு இருக்கிறார். அவர் தமது வார்த்தையை நிரூபிக்கிறார், இது சத்தியமாய் உள்ளது. கோதுமை இங்குள்ளது. அது இப்பொழுது முதிர்வடைந்து வருகிறது. அது குமாரனின் சமூகத்தில் கிடக்கிறது. 366 யாரும் அதை தொடக்கூடாது. பதர் அனைத்தும், "அதனுடன் நாங்கள் எவ்வித தொடர்பும் கொள்ள மாட்டோம்" என்று கூறிவிட்டு தங்களை விலக்கிக் கொள்கின்றன. நீங்கள் அப்படித்தான் செய்ய வேண்டும். 367 ஓ, சகோதரனே, கோதுமைக்குள் புகுந்து கொள். உனக்குள் இருக்கும் ஜீவன் கோதுமைக்குள் வரட்டும். அப்படி செய்வாயா? தேவனை விசுவாசியுங்கள். தேவனுடன் நிலைத்திருங்கள். நீங்கள் அதைச் செய்யப் போகின்றீர்கள் என்ற நிச்சயமுடையவராய் இருக்கிறீர்களா? மற்ற எவரேனும் என்ன கூறினாலும்... எனக்குக் கவலையில்லை. 368 இது ஒரு சமயம் நான் படித்த ஒரு கதையைப் போன்றதாயுள்ளது. மருத்துவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு அருமையான மனிதராய் இருந்தார். அவர் ஏழை மக்களிடம் அன்பு கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் ஏழைகள் தங்கள் கடனைச் செலுத்த முடியாத போது, அவர் என்ன செய்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் "நீ மன்னிக்கப்பட்டாய்" என்று கூறி சிகப்பு மையினால் அந்த இரசீதில் கையொப்பமிட்டார். முடிவாக ஒரு நாள் மருத்துவர் மரித்துப் போனார். அவருடைய மனைவியோ மிகவும் கர்வம் பிடித்தவளாயிருந்தாள். அவள் இன்றைய சபையைப் போல வித்தியாசமானவளாயிருந்தாள். அவள் சென்று கடன் வாங்கினவர் அனைவரையும் காரணம் கேட்டு, அவர்கள் மேல் அவள் வழக்கு தொடர்ந்து, அவர்கள் எல்லோரையும் நீதிமன்றத்தில் நிறுத்தி, "நீங்கள் எப்படியும் கடனை செலுத்தித் தீர்க்க வேண்டும்" என்றாள். 369 ஆனால் நீதிபதி அந்த ரசீதுகளைப் பார்வையிட்டு, "அம்மணி இங்கு வாருங்கள், சிகப்பு மையினால் போடப்பட்ட கையெப்பம் உங்கள் கணவருடையது தானே?” என்று கேட்டார். அவள், "ஆம், ஐயா” என்று விடையளித்தாள். 370 அவர், "அப்படியானால் இந்த தேசத்திலுள்ள எந்த நீதிமன்றமும் அவர்கள் மேல் இந்த வழக்குத் தொடர முடியாது. அவர்கள் சுயாதீனர்" என்றார். 371 அவர்கள் கூற விரும்புகிற எதை வேண்டுமானாலும் கூறட்டும். அவர் தமது வார்த்தையை தமது சொந்த இரத்தத்தினால் கையெப்பமிட்டார். சகோதரனே, எதுவும் அதை நம்மிடத்திலிருந்து எடுத்துக் கொள்ள முடியாது. நாம் சுயாதீனர். 372 நாம் ஜெபம் செய்வோமாக. நிச்சயமாக நீங்கள்.. [சபையில் உள்ள ஒரு சகோதரன் அறிவுரைக் கூறுகிறார். ஒலிநாடாவில் காலி இடம்.- ஆசி.) ஆமென். 373 இப்பொழுது உங்களுடைய தலைகளை வணங்குங்கள். ராஜாவின் நாட்களில் அவர்களுக்கு மத்தியில் ஒருவன் எழுந்து நின்று, சத்துருவை எங்கு சந்தித்து அவர்களை நிர்மூலமாக்க வேண்டும் என்று தீர்க்கதரிசனம் உரைத்தான், நான் அதை புரிந்து கொள்வேனேயானால், இப்பொழுது அதை நான் சரியாக விளங்கிக் கொண்டிருந்தால், உங்கள் சத்துருவை சந்திக்க ஒரு இடம் உள்ளது. அது தான் வார்த்தை. அங்கு தான் அவனும் உங்களை சந்திக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான். கர்த்தர் உரைக்கிறதாவது என்பதுடன் நீங்கள் அவனை அங்கு சந்தியுங்கள். 374 இங்குள்ள எத்தனை பேர் உங்கள் தலைகள் வணங்கியிருப்பதோடு, (இப்பொழுது பிற்பகல் நெருங்கி விட்டது. பீட அழைப்பு கொடுக்க எனக்கு நேரமில்லை) உங்கள் கைகளையுயர்த்தி, உங்கள் தலைகள் வணங்கியிருப்பதோடு, உங்கள் கண்களை மூடி, "நான் அவருடைய ஒரு பாகமாக இருக்க விரும்புகிறேன். அவருடனும் அவருடைய வார்த்தையுடனும் நான் என்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறேன். என்ன வந்தாலும் அல்லது போனாலும், உலகம் என்னக் கூறினாலும், கவலைப்படாமல், நான் அவருடைய ஒரு பாகமாக இருக்க விரும்புகிறேன்" என்று உங்கள் கைகளையுயர்த்தி, "நான் அப்படியிருக்க விரும்புகிறேன்" என்று கூறுவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நூறு சதவிகிதம் என்று நான் நினைக்கிறேன். 375 நம்முடைய தலைகள் வணங்கியிருப்பதோடு, நாம் யோசித்துக் கொண்டிருக்கும் போது, நாம் இப்பொழுது அமைதியாக வாய்த்திறவாமல் இந்த பாடலை மெளனமாக பாடுவோமாக. எல்லோரும் ஜெபித்துக் கொண்டிருங்கள். நம் இருதயங்களை பிணைக்கிற அந்தக் கட்டு ஆசீர்வதிக்கப்படுவதாக. (அது வார்த்தை ) நம்முடைய இருதயங்களை கிறிஸ்தவ அன்பினால் பிணைக்கும் பிணைப்பு; ஒரே மனதுள்ளவர்களின் ஐக்கியம் மேற்கூறியது போன்றிருக்கும் ("நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறது போல, நீங்களும் கூட அவரில் ஒன்றாயிருக்கிறீர்கள்.”) நாம் பிரிந்து செல்லும் போது, நமக்கு உள்ளில் வேதனை தருகிறது; ஆனால் நாம் அப்பொழுதும் இருதயத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டு, மறுபடியும் சந்திப்போமென நம்புகிறோம். 376 கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த சனிக்கிழமை காலை அரிசோனாவிலுள்ள ஃபிளாக் ஸ்டாப்பில், உங்களை மீண்டும் சந்திப்பேன் என்று நான் நம்புகிறேன். அவரை நீங்கள் நேசிக்கிறீர்களா? [சபையோர், "ஆமென்” என்கின்றனர்.--ஆசி.] 377 இப்பொழுது நான் இத்துடன் விட்டு விடப் போகிறேன். பாருங்கள். வேதம், "விசுவாசித்தவர்கள் அத்தனை பேரும், வசனத்தை ஏற்றுக் கொண்ட அத்தனை பேரும்" என்று உரைத்துள்ளது. பார்த்தீர்களா? யார் ஏற்றுக் கொள்வார்கள், யார் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று என்னால் கூற முடியாது. அது உங்களைப் பொறுத்தது. ஆனால் நீங்கள் ஏதோ ஒரு கோட்பாட்டைப் பற்றிக் கொள்வீர்களானால்; மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பெந்தெகொஸ்தேயினராகிய உங்களில் சிலர் வார்த்தைக்கு முரணான சிலவற்றை பின்பற்றுவீர்களானால், என் அருமையானவர்களே, தயவு கூர்ந்து இன்றே அதை விட்டு விலகுங்கள். அப்படி செய்வீர்களா? அதிலிருந்து விலகி, அவரிடம் திரும்புங்கள். கிறிஸ்துவின் ஐக்கியத்திலிருந்து ஒரு வார்த்தை கூட உங்களை பிரித்து விட அனுமதிக்காதீர்கள். அவருடைய ஆவி தாமே இதை அருளுவாராக. 378 பிதாவே, தேவனே, இந்த ஜனங்கள் நீண்ட நேரமாக இங்கு உட்கார்ந்து கொண்டிருந்தனர். பவுல் இதே விதமாக ஒரு முறை சுவிசேஷத்தைப் பிரசங்கித்தது என் நினைவுக்கு வருகிறது. அவர்கள் இரவு முழுவதும் உட்கார்ந்து கொண்டு அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு வாலிபன் ஜன்னல் வழியாக கீழே விழுந்து மரித்துப் போனான். பவுல் சென்று அந்த வாலிபனின் மேல் தன்னைக் கிடத்தி, "அவனுக்கு உயிர் திரும்ப வந்து விட்டது” என்றான். இப்பொழுது, பிதாவே, இங்கு வியாதியஸ்தரும், அவதியுறுவோரும் உள்ளனர். தங்கள் சரீரங்களுக்கு ஜெபம் தேவையானவர் இங்குள்ளனர். அன்புள்ள தேவனே, சுகம் பெற கூட்டம் முடியும் வரை காத்திருக்க வேண்டாமென்று ஜெபிக்கிறேன். அவர்கள் எந்த கூட்டத்திற்கும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. வார்த்தை எப்பொழுதும் இங்கு உள்ளது, அது கிறிஸ்துவாயுள்ளது. அவர்கள் ஒவ்வொருவரையும் நீர் சுகப்படுத்த வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். தேவனே, இவர்கள் ஒவ்வொருவரும் பரிபூரண சுகம் பெறுவார்களாக. இதை அருளுவீராக. இவர்களையும் இவர்களுடைய முயற்சிகளை ஆசீர்வதியும். கர்த்தாவே, இவர்கள் இதை விசுவாசிக்கவிட்டால், இவ்வளவு நேரமாக இங்கு உட்கார்ந்து கொண்டு கேட்டிருக்கமாட்டார்கள். இப்பொழுது கர்த்தாவே, அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தியிருக்கின்றனர், அவர்கள் அதை விசுவாசிக்கின்றனர். இங்குள்ள ஒவ்வொரு போதகரும், ஒவ்வொரு சபை அங்கத்தினரும் இதை தங்கள் இருதயங்களில் ஏற்றுக் கொள்வார்களாக. பாவி, அவன் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வானாக; பின்வாங்கிப்போனவர்கள் திரும்பி வருவார்களாக. பிதாவே, இதை அருளும். இந்த ஆசீர்வாதங்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன். அவர் அநேக ஆண்டுகளுக்கு முன்பே என் பெயரை அங்கு எழுதிவிட்டார். முந்தி என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே. 379 நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? இப்பொழுது நாம் மறுபடியுமாக அதை பாடும்போது, மேஜையிலிருந்து உங்கள் கைகளை நீட்டி அங்குள்ள யாராகிலும் ஒருவருடன் கைகுலுக்கி, "அருமையான யாத்திரீகனே, இன்று காலை இங்கு உட்கார்ந்து கொண்டிருந்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன். நீங்கள் விசுவாசிக்கவில்லையா?” என்று கேளுங்கள். அந்த விதமான ஒரு காரியம், நாம் மீண்டும் பாடும்போது, நான்......?...) சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே. 380 இப்பொழுது முதல் நாம் உலகத்தை விட்டு விலகுவோமா? உலகத்தின் நாகரீகத்திலிருந்து விலகுவோமா? இந்த அர்த்தமற்ற செயல்கள், இந்த வசீகரமான காரியங்கள், சுவிசேஷத்தை வாணிபமாக மாற்றுதல் போன்றவைகளை நாம் விட்டு விலகுவோமா? நாம் விலகுவோமா? இயேசுவை எனக்குத் தாருங்கள். அது தான் எனக்கு வேண்டும். "அவரை அறிவதே, அவரை அறிவதே நித்திய ஜீவன்.” அவரை நான் நேசிக்கிறேன். நீங்களும் அவரை நேசிக்கிறீர்களல்லவா? [சபையோர், "ஆமென்” என்கின்றனர்.- ஆசி.] ஓ, நாம் எவ்வளவாய் அவரை நேசிக்கிறோம்! 381 இப்பொழுது ஆராதனையை நான் சகோதரன் கார்ல் அவர்களிடம் ஒப்படைக்கப்போகிறேன். அவர் இன்னும் வேறு என்ன செய்யப் போகிறார் என்று எனக்குத் தெரியாது. 382 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களை மீண்டும் அடுத்த ஞாயிறு... இல்லை, அடுத்த சனிக்கிழமை காண்பேன் என்று நான் நம்புகிறேன். நான் உங்களை அப்பொழுது காணவில்லையென்றால், உங்களை டூசானில் சந்திப்பேன். அப்பொழுதும் உங்களை நான் காணாவிட்டால், நான் பதினேழாம் தேதி மீண்டும் உங்களை இங்கு காண்பேன். அப்பொழுதும் உங்களை காண முடியாவிட்டால், நான் உங்களை மகிமையில் காண்பேன். ஆமென். 383 இப்பொழுது, சகோதரன் கார்ல். இந்நேரத்தில் அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்று எனக்குத் தெரியாது. சகோதரன் வில்லியம்ஸ்.